ராஜபக்ஷவின் வெற்றியும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்


25/11/2019  இலங்கை கால­நி­லையின் பிர­காரம், இரண்டு மழைக்­கா­லங்­க­ளுக்கு இடைப்­பட்ட ஒரு கால­மாக கரு­தப்­படும் ஒக்­டோபர் -– நவம்பர் மாதங்­களில் திடீ­ரென வீசும் காற்­றினால் எதிர்­பா­ராத வித­மாக வானிலை மாறி, திடீ­ரென மழை பெய்­வ­துண்டு. அப்­பேர்ப்­பட்ட ஒரு பரு­வ­கா­லத்தில் நாட்டின் ஆட்­சியில் சட்­டென குறிப்­பி­டத்­தக்க ஒரு கள­நிலை மாற்­ற­மொன்று நடந்­தே­றி­யி­ருக்­கின்­றது.
‘மாற்றம் ஒன்றே மாறா­தது’ என்­ப­தையும், காலங்கள் மாறும்­போது காட்­சி­களும் மாறிச் செல்லும் என்­ப­தையும் இந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் ஊடாக நாம் மீண்டும் உணர்ந்­தி­ருக்­கின்றோம். பெரும்­பான்மை மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்ற கோத்­தா­பய ராஜபக் ஷ இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக வெற்றி பெற்­றி­ருக்­கின்றார். சிறு­பான்மை முஸ்­லிம்கள் மற்றும் தமி­ழர்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்­றி­ருந்த போதும் சஜித் பிரே­ம­தாஸ தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கின்றார். இதுதான் கால­நி­யதி என்­றா­கி­யி­ருக்­கின்­றது.

ராஜபக் ஷ குடும்­பத்தின் நீண்­ட­கால திட்­ட­மிடல், குறிப்­பாக மஹிந்த ராஜபக் ஷவின் வியூ­கங்கள் கோத்­தா­ப­யவின் வெற்­றிக்கு அடித்­த­ள­மிட்­டுள்­ளன என்றும், மேட்­டுக்­குடி அர­சி­யலில் நிலை­கொண்­டுள்ள ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட ஐ.தே.கட்­சிக்­கா­ரர்­களின் சூட்­சு­மங்கள், மீளாய்வு செய்­யப்­ப­டாத பழைய வியூ­கங்கள் எல்லாம் கோத்­தா­ப­யவின் வெற்­றிக்கு மறை­முக பங்­க­ளிப்பை வழங்கி, சஜித்தை தோற்­க­டிக்கும் நிலைக்கு இட்டுச் சென்­றி­ருக்­கின்­றன என்று கூறலாம். ஆக. ராஜபக் ஷவின் வெற்­றிக்கு மஹிந்த அணி மட்­டு ­மன்றி ரணில் கூட்­டத்­தாரும் கார­ண­மா­கி­யி­ருக்­கின்­றனர் எனலாம்.
கடந்த 16ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் 69 இலட்சம் வாக்­கு­களைப் பெற்ற கோத்­தா­பய ராஜபக் ஷ இலங்­கையின் புதிய ஜனா­தி­ப­தி­யாக பதவிப் பிர­மாணம் செய்து கொண்­டுள்ளார். அவ­ரது சகோ­த­ரரும் இந்தக் கதையின் இயக்­கு­ந­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஒரு தடவை இந்­நாட்டின் பிர­த­ம­ராக சத்­தியப் பிர­மாணம் செய்­துள்ளார். மொட்டு வடிவில், மீண்டும் ராஜபக் ஷக்­களின் ஆட்சி மலர்ந்­தி­ருக்­கின்­றது.
மறு­பு­றத்தில், 55 இலட்­சத்­திற்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்றும் தோல்­வி­ய­டைந்த சஜித் பிரே­ம­தாஸ இப்­போது எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்­காக கட்­சிக்குள் போராடிக் கொண்­டி­ருக்­கின்றார். இந்தச் சூழலில், வெற்­றி­பெற்ற வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்த மக்கள் தேச நலன்­வி­ரும்­பிகள் போலவும் சஜித்­திற்கு வாக்­க­ளித்த சிறு­பான்மை மக்கள் தேச­வி­ரோ­திகள் போலவும் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கின்ற ஒரு ஆபத்­தான சூழல் கட்­ட­மைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. புதிய ஜனா­தி­ப­திக்கும் நாட்டின் முஸ்லிம், தமிழ் மக்­க­ளுக்கும் இடையில் தொடர்ந்தும் இடை­வெ­ளியை வைத்­தி­ருக்க விரும்­பு­கின்ற சக்­தி­களின் கைங்­க­ரி­ய­மா­கவே இதை பார்க்க வேண்­டி­யுள்­ளது.
வெற்­றியின் இர­க­சியம்
இந்­த­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி – தோல்வி எத­ன­டிப்­ப­டையில் தீர்­மா­னிக்­கப்­படும் என்­பதை இப்­பக்­கத்தில் வெளி­யான முன்­னைய கட்­டு­ரையில் குறிப்­பிட்­டி­ருந்தோம். அதுவே நிதர்­ச­ன­மா­கி­யி­ருக்­கின்­றது. அந்த வகையில் யுத்த வெற்­றியும், ராஜபக் ஷக்கள் மீதான அபி­மா­னமும் இன­வாதப் பிர­சா­ரங்­களும் மட்­டுமே மொட்டுச் சின்­னத்தின் வெற்­றிக்­கான கார­ணங்கள் அல்ல.
2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­யுற்ற மஹிந்த ராஜபக் ஷ அப்­ப­டியே அடங்கிப் போவார் அல்­லது வெட்­கத்தால் ஒதுங்கிப் போவார் என்றே பலரும் நினைத்­தனர். ஆனால் அவர் அப்­படிச் செய்­ய­வில்லை. அதற்­காக அவ­ச­ரப்­ப­டவும் இல்லை. தனது சகோ­த­ரர்­களை அழைத்தார். தோல்­விக்­கான கார­ணங்கள் எவை என்­பதை தேடிப் பார்த்தார். எங்­கெங்கே தவறு விட்­டி­ருக்­கின்றோம்? எதனை திருத்திக் கொள்ள வேண்டும் என்று ராஜபக் ஷக்கள் மீள்­ப­ரி­சீ­லனை செய்­தனர்.
2015 இல் தோல்­வி­ய­டைந்த பின்னர், ‘தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் என்னை தோற்­க­டித்து விட்­டார்­கள்­என்ற தொனியில் மஹிந்த ராஜபக் ஷ
உரை­யாற்­றிய நிமி­டத்திலிருந்து, பௌத்த மதச்­சார்­பு­டைய மக்­க­ளி­டையே தேர்­தலை இலக்­கு­வைத்து பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்தார். ஒரு நீண்­ட­காலத் திட்­டத்தின் அடிப்­ப­டையில் வியூ­கங்கள் வகுக்­கப்­பட்­டன.
முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் எப்­படி பார்த்­தாலும், தேர்தல் வெற்­றிக்­கான வியூ­கத்தை பெரும்­பான்மைச் சமூ­கத்­திற்குள் நன்­றாக ஊடு­ருவி வியா­பிக்கச் செய்­வ­தற்­காக தொடர்ச்­சி­யாக ராஜபக் ஷக்கள் உழைத்­தனர் என்­பதை மறுக்­க­வி­ய­லாது. இதற்­காக தேவை­யேற்­படின் இன­வா­தமும் மத­வா­தமும் சில அடிப்­ப­டை­வாதக் குழுக்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் சொல்ல முடியும்.
மைத்­திரி – ரணில் ஆட்­சியின் தோல்வி, மத்­தி­ய­வங்கி பிணை­முறி மோசடி, ஏப்ரல் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் என பல விட­யங்கள் ராஜபக் ஷக்­க­ளுக்கு சாத­க­மான கள­நி­லை­மையை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தன. இதனை சரி­யாக பயன்­ப­டுத்த அவர்கள் இடை­வி­டாது உழைத்­தனர். குறிப்­பாக, ‘சிறு­பான்மை மக்­கள் தான் தீர்­மா­னிக்கும் சக்தி’ என்ற நிய­தியை உடைத்­தெ­றிந்து, ‘சிங்­களப் பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­க­ளா­லேயே ஜனா­தி­பதி ஒரு­வரை தெரிவு செய்து காட்ட வேண்டும்’ என்­பதில் உறு­தி­யாக இருந்­தனர்.
இத­ன­டிப்­ப­டை­யி­லேயே அனைத்துப் பிர­சா­ரங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. பௌத்த விகா­ரைகள், தேரர்­களின் ஒத்­து­ழைப்பு பெறப்­பட்­ட­தாக சொல்­லப்­ப­டு­கின்­றது. அடி­மட்ட சிங்­கள மக்­க­ளி­டையே ‘பேச வேண்­டிய விதத்தில் பேசி’ வாக்குக் கேட்­கப்­பட்­ட­தாக தெரி­கின்­றது. பிர­தான முஸ்லிம் கட்­சிகள் இரண்டும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் சஜித்­திற்கு ஆத­ரவு வழங்­கி­யது கோத்­தா­ப­யவின் பிர­சா­ரத்­திற்கு இல­கு­வாகப் போய்­விட்­டது.
“இதோ தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் சஜித்­தோடு இணைந்து விட்­டார்கள். நாடு பறி­போகப் போகின்­றது. என­வேதான் நாட்டைக் காப்­பாற்­று­வ­தற்­காக தெற்­கிற்கு வந்து உங்­க­ளிடம் வாக்குக் கேட்­கின்றோம்” என்ற தோர­ணையில் நிகழ்த்­தப்­பட்ட உரைகள் கடும்­போக்கு சிங்­கள மக்­களின் இலட்­சக்­ க­ணக்­கான வாக்­கு­களை கவரும் வல்­லமை பெற்­ற­வை­யாக இருந்­ததை யாரும் மறுப்­ப­தற்­கில்லை. ஒரு­வேளை முஸ்லிம் காங்­கி­ரஸும் மக்கள் காங்­கி­ரஸும் ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருந்தால், கடும்­போக்கு வாக்­கா­ளர்­களின் வாக்­குகள் கிடைக்­காமல் கூட போயி­ருக்­கலாம்.
இதே­நேரம், “இப்­போது எமது இலக்கு அடை­யப்­பட்டு விட்­டது. நாம் விரும்­பி­யது போன்ற ஒரு ஜனா­தி­பதி கிடைத்­து­விட்டார்” எனக் கூறி, தமது அமைப்பை கலைக்கப் போவ­தாக அறி­வித்­துள்ள பொது­ப­ல­சேனா மற்றும் சிங்­கள ராவய போன்ற அமைப்­புக்­களின் நட­வ­டிக்­கை­களும் கோத்­தா­ப­யவின் வாக்­கு­வங்­கியில் மறை­மு­க­மாக சாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தின என்று கூறலாம்.
தோல்­விக்­கான காரணம்
மறு­பக்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் ஐ.தே.க உள்­ளிட்ட எத்­த­னையோ கட்­சிகள் இருந்தும், சஜித் பிரே­ம­தாஸ கறை­ப­டி­யாத கரங்­க­ளுக்கு சொந்­தக்­காரர், ஏழை­களின் தோழர், சேவை­களைச் செய்­வதில் நிக­ரற்ற ஆளுமை என்­பதை சிறு­பான்மை மக்கள் மட்­டு­மன்றி சிங்­கள மக்­களும் ஏற்றுக் கொண்­டி­ருந்­தாலும் கூட, வாக்­க­ளிப்பில் தோற்றுப் போனது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னதே. இதற்கு பல கார­ணங்­களை குறிப்­பிட முடியும்.
முதன்மைக் காரணம், கடந்த நல்­லாட்­சியின் தோல்­வி­யாகும். கடந்த நான்­கரை வரு­டங்­க­ளாக சொல்லிக் கொள்­ளும்­படி அபி­வி­ருத்­தியும் இல்லை, மக்கள் சேவையும் இல்லை, இன­வாதம் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டவும் இல்லை, சிறு­பான்மை அல்­லது பெரும்­பான்மை மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வேற்­றப்­ப­டவும் இல்லை. இதனால் எதைச் சந்­தைப்­ப­டுத்­தியும் வாக்குக் கேட்க முடி­யாத நிலை ஐ.தே.முன்­ன­ணிக்கு ஏற்­பட்­டது.
சஜித் பிரே­ம­தா­ஸவை மட்­டுமே சந்தைப்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருந்­தது. இல்­லை­யென்றால் 30 வரு­டங்­க­ளுக்கு முன் ஆட்­சி­செய்த அவ­ரது தந்­தையின் சேவை­களை பிர­சா­ரப்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது. அது­த­விர ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ அல்­லது முஸ்லிம் கட்சித் தலை­வர்­களோ செய்த கன­தி­யான சேவை­களை எடுத்­துக்­காட்டி வாக்குக் கேட்க முடி­ய­வில்லை. இந்த பின்­ன­ணி­யி­லேயே, ‘ராஜபக் ஷ குடும்பம் ஆட்­சிக்கு வந்தால் நாட்டில் இன­வாதம் தாண்­ட­வ­மாடும்’ என்ற அச்­ச­மூட்டும் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.
இதே­வேளை, எமது கணிப்­பின்­படி சஜித் பிரே­ம­தாஸ ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு நீண்­ட­கா­ல­மாக தன்னை தயார்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ராக வரு­வதே அவ­ரது உட­னடி அவா­வாக இருந்­தி­ருக்­கலாம். ஒரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வரும் நோக்கில், நடப்பு விவ­கா­ரங்கள் பற்றி முக்­கி­யத்­து­வ­மிக்க நிலைப்­பா­டு­களை எடுக்­க­வில்லை. அதே­போன்று சிறு­பான்மை முஸ்­லிம்கள் மற்றும் தமிழ் மக்­க­ளுக்­காக குரல்­கொ­டுக்­க­வில்லை. கணி­ச­மான சிங்­கள மக்­களை கவர்ந்­தி­ருந்­தாலும் சிங்­கள பௌத்­த­வா­தத்தில் ஊறி­ய­வர்­களின் நம்­பிக்­கையைப் பெற்ற (ராஜபக் ஷ) போன்ற ஒரு தலை­வ­ராக சஜித் தன்னை வளர்த்துக் கொள்­ள­வில்லை என்றே கூற வேண்டும்.
இந்­நி­லையில், ‘இய­லு­மென்றால் வெற்றி கொள்­ளட்டும்’ என்ற எண்­ணத்­தி­லேயே ரணில் விக்­கி­ர­ம­சிங்க சஜித் பிரே­ம­தா­ஸவை நிறுத்­தி­யி­ருக்­கலாம் என்ற அனு­மானம் ஆரம்­பத்­தி­லேயே இருந்­தது. ஏனெனில், சுதந்­திரக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஆத­ரவு இல்­லாமல் ஒரு­வரால் தேர்­தலில் வெற்றி பெறக்­கூ­டிய சாத­க­நிலை இருந்­தி­ருந்தால், ரணில் அந்த வாய்ப்பை சஜித்­துக்கு விட்டுக் கொடுத்­தி­ருக்க மாட்டார். மேட்­டுக்­குடிக் காரர்­களின் கட்சி, சாதா­ரண குடும்பப் பின்­ன­ணியைக் கொண்ட ஒரு­வரின் கைக்கு செல்­வதை நிச்­ச­ய­மாக ரணில் போன்­ற­வர்கள் விரும்­பி­யி­ருக்­கவும் மாட்­டார்கள்.
மேற்­படி அனு­மானம் இப்­போது நிதர்­ச­ன­மாகி வரு­வதை காண முடி­கின்­றது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க சஜித்தின் வெற்­றிக்­காக சரி­யாக பாடு­ப­ட­வில்லை என்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பல எம்.பி.க்கள் பிர­சாரம் செய்­ய­வில்லை என்றும் சஜித் மற்றும் பலர் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­வதை காணக்­கூ­டி­ய­தாகவுள்­ளது.
இது உண்­மைதான், முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் கொத்­தாக வாக்­க­ளித்­தது போல சிங்­கள மக்கள் வாக்­க­ளிக்­க­வில்லை. ஐ.தே.க. அர­சி­யல்வா­திகள் பலர் இது தனியே ‘சஜித்தின் வேலை’ என்­பது போல மிகவும் சூட்­சு­ம­மாக ஒதுங்­கி­யி­ருந்து விட்­டனர்.  ரவூப் ஹக்கீம் உள்­ளிட்ட பலர் தமது கோட்­டை­க­ளையே சரிய விட்­டனர். வெல்­லக்­கூ­டிய 25 தொகு­திகள் தோற்­றன. இதுவும் சஜித்தின் தோல்­விக்கு இட்டுச் சென்­றது.  
பயங்­க­ர­வா­தமும் இன­வா­தமும் இந்த தேர்­தலில் பெரிய முத­லீ­டாக பயன்­ப­டுத்­தப்­பட்­டது. இதில் உயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு முக்­கிய பங்­குள்­ளது. ‘நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது .எனவே எமக்கு வாக்­க­ளி­யுங்கள்’ என்று கோத்­தா­பய சிங்­கள மக்­க­ளிடம் கூறு­வ­தற்கும், அதி­க­ள­வான வாக்­கு­களை அவர்கள் அள்ளி வழங்­கு­வ­தற்கும் இது கார­ண­மா­கி­யது.
இதே­வேளை ‘மஹிந்த குடும்பம் ஆட்­சிக்கு வந்தால் இன­வா­தி­களின் ஆட்டம் தொடங்­கி­விடும்’ என்று முஸ்லிம், தமிழ் அர­சி­யல்­வா­திகள் பிர­சாரம் செய்து சஜித்­திற்கு இலட்­சக் ­க­ணக்­கான வாக்­கு­களை பெற்­றதைப் போலவே, மறு­பு­றத்தில் தென்­னி­லங்­கையில் ‘சஜித் வந்தால் சிறு­பான்­மை­யி­னரின் கையே மேலோங்கும், நாடு பிள­வு­படும்’ என்­றெல்லாம் இன­வாதம் பேசியே மொட்டு அணி பிர­சாரம் செய்­தது. இந்த அடிப்­ப­டை­யி­லேயே பெரும்­பான்மை மற்றும் சிறு­பான்மை இனங்கள் வாக்­க­ளித்­தன, எதி­ரெதிர் நிலைப்­பா­டு­களை எடுத்­தன.
2015இல் தோல்­வி­ய­டைந்த மஹிந்த தரப்பு தமது தோல்­விக்­கான கார­ணத்தை தேடி அறிந்து புது­வி­யூ­கங்­களை வகுத்­தது. ஆனால், ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமது கட்­சியின் தோல்­வி­க­ளுக்­கான  கார­ணங்­களை மீளாய்வு செய்­ய­வில்லை. காற்­ற­ழுத்­தத்தின் காரணமாக சஜித் பிரே­ம­தாஸ தேர்தல் களத்தில் தள்­ளி­வி­டப்­பட்டார். இந்தப் பின்­ன­ண யில், இப்­போது தோல்­வி­ய­டைந்து நொந்­து­போ­யுள்ள சஜித்தும் மீள்­ப­ரி­சீ­ல­னையை மேற்­கொள்­ளலாம் ரணிலின் வழி­யையே பின்­பற்றி விடு­வாரோ என்று எண்ணத் தோன்­று­கின்­றது.
முஸ்­லிம்­களின் வாக்கு
இது இவ்­வா­றி­ருக்க, தற்­போது ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றுள்ள கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் வாக்­க­ளிக்­க­வில்லை என்றும், இந்த அர­சாங்­கத்தின் வெற்­றியில் முஸ்­லிம்­க­ளுக்கு பங்­கில்லை என்றும் ஒரு தரப்­பினர் கூறு­கின்­றனர். அத்­துடன், இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி இன­வெ­றுப்பு பேச்­சுக்­களும் உலாவ விடப்­ப­டு­கின்­றன. இது மிகவும் மோச­மான நிலை­யாகும்.
உண்­மை­யி­லேயே, ஜனா­தி­பதி தனது கன்னி உரையில் கூறி­யி­ருப்­பதைப் போல ‘பெரும்­பான்மை மக்­களின் பெரும்­பான்மை வாக்­கு­க­ளா­லேயே’ அவர் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார். சிறு­பான்மை சமூ­கத்­திற்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் பெரும்­பான்­மை­யாக கோத்­தா­ப­ய­வுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. அந்த மனத்­தாங்கல் அவ­ருக்கு இருக்­கவே செய்யும்.
ஆனால், அதற்­காக முஸ்­லிம்கள் கோத்­தா­ப­ய­வுக்கு வாக்­க­ளிக்­கவே இல்லை என்று யாரும் கூற முடி­யாது. வடக்கு, கிழக்கின் ஒரு­சில முஸ்லிம் பிர­தே­சங்­களில் உள்ள ஆயிரக் கணக்­கான மக்­களும் மலை­யகத் தமி­ழர்­களும் வடக்கில் சொற்­ப­ள­வா­ன­வர்­களும் அதே­போன்று தென்­னி­லங்­கையில் சிதறி வாழ்­கின்ற குறிப்­பிட்­ட­ள­வான முஸ்­லிம்­களும் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கே வாக்­க­ளித்­தி­ருக்­கின்­றனர் என்­பதை மறுக்க முடி­யாது.
இவ்­வா­றாக, கிட்­டத்­தட்ட 5  இலட்சம் சிறு­பான்மை வாக்­குகள் கோத்­த­பாய ராஜபக் ஷவுக்கு கிடைத்­தி­ருக்­கின்­றன எனலாம். இதனை மஹிந்த அணியில் உள்ள ஒரிரு அர­சி­யல்­வா­திகள்  குறிப்­பிட்­டுள்­ளனர். 14 இலட்சம் வாக்குகளால் கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்றிருக்கின்ற நிலையில் இந்த 5 இலட்சம் சிறுபான்மை வாக்குகளும், வாக்களிக்காத சிறுபான்மையினரின் வாக்குகளும் சஜித்திற்கு அளிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிவுகள் வேறுமாதிரி அமைந்திருக்கலாம் என்பதை மறந்து விடக்கூடாது.
அதுமட்டுமன்றி, பெரும்பான்மையான முஸ்லிம்களோ தமிழர்களோ ஹிஸ்புல்லாஹ்வுக்கு அல்லது சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்கவில்லை. மாறாக, சுமார் 38 இலட்சம் சிங்கள மக்களின் ஆணையைப் பெற்றுள்ள உண்மையான சிங்கள பௌத்தரான சஜித் பிரேமதாஸவுக்குதான் வாக்களித்தனர். இதுவொன்றும் தேசத்துரோகமாகாது. அதுபோலவே, கடந்த 2005, 2010 தேர்தல்களில் இதே பெரும்பாலான முஸ்லிம்கள்தான் மஹிந்த ராஜபக் ஷவின் வெற்றிக்காக வாக்களித்தார்கள் என்ற நன்றியையும் மறந்து பேசக்கூடாது.
முஸ்லிம்களின் பொறுப்பு
இப்போது கோத்தாபய ராஜபக் ஷ இந்த நாட்டின் அரச தலைவர்! அவரே சொல்லியிருப்பது போல, வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் சிங்களவர்களுக்கும் தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பேகர்களுக்கும் ஜனாதிபதி அவர்தான். எனவே, சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புக்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம்களின் அபிலாஷைகள், காணிப் பிரச்சினைகள் போன்ற நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும். ஆக மொத்தத்தில் சிறுபான்மை சமூகங்களின் மனங்களை வெல்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் அவசியமாகும்.
- ஏ.எல்.நிப்றாஸ் - நன்றி வீரகேசரி 













No comments: