.
இலங்கை யாழ்ப்பாணம், சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் Norwayயை வதிவிடமாகவும் கொண்ட (யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி
பழைய மாணவி) நரம்பியல் வைத்திய நிபுணர் திருமதி ரூபவதனா அவர்கள் எதியோப்பியாவில் அளப்பரிய சாதனை படைத்துள்ளார் இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவியும், அங்கு கற்பித்த ஆசிரியர் மகேஸ்வரனின் அன்பான புத்திரியும் ஆவார்.
எதியோபியாவில் பிறந்த 16 மாத பெண் குழந்தை இரட்டைத் தலையுடன் (Encehalocele)பிறந்திருந்து. பெண்குழந்தை இரட்டைத்தலை என்றபடியால் நிம்மதியாகத் தூங்குவதில் பெரும் சிரமத்தை எதிர் கொண்டு இருந்தார். வைத்திய நிபுணர் ரூபவதணா அவர்கள் Norway யிலிருந்து எதியோப்பியாவிற்கு எதுவித பலனும் எதிர்பாராது தொண்டர் அடிப்படையில் சென்று, இந்த சத்திரசிகிச்சையை மேற் கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த சத்திர சிகிச்சையானது வெற்றிகரமாக நிறைவேறியதாகவும், குழந்தை சுகமே உள்ளதாகவும், தான் இது பற்றி மிகவும் சந்தோஷம் அடைவதாகவும் டாக்டர் ரூபவதனா தெரிவித்துள்ளார் வைத்திய நிபுணர் ரூபவதனா முன்னைநாள் பரியோவான் கல்லூரி துடுப்பாட்ட வீரர் வசந்தன் அவர்களின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது இந்தச் சேவையானது உலகத் தமிழர்கள் பெருமைப்படக்கூடிய ஒரு விடயமாகும். இவர் தமது தாயகமான இலங்கைக்கும் பல தடவை சென்று சேவை அடிப்படையில் சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். வைத்திய நிபுணர் ரூபவதனா அவர்கள் மேன்மேலும் பல சாதனைகளைப் படைக்க எமது அன்பான வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment