ஜெர்மனியில் திருவள்ளுவர்

.



திருக்குறள் தமிழ் உலகின் பெருமை. சாதி, இனம், மதம் கடந்த ஒரு பொது முறையான திருக்குறளை ஐரோப்பியரும் போற்றினர். இதற்குச் சான்று தான் அவர்கள் திருக்குறளின் சிறப்பினை வியந்து அதனை தமது தாய்மொழிகளில் மொழிபெயர்த்து அதனை வெளியிட்டனர். அத்தகைய மொழிபெயர்ப்புக்களில் முக்கியத்துவம் பெறுவது திருக்குறளுக்கான ஜெர்மானிய மொழி பெயர்ப்பு. ஜெர்மானிய மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்த ஜெர்மானியர்களில் முதலில் குறிப்பிடப்பட வேண்டியவர் பாதிரியார் ஆகஸ்ட் ஃப்ரடெரிக் காமரெர் ஆவார். அவரது மொழிபெயர்ப்பு நூல் 1803ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதனை மீண்டும் மறுபதிப்பாக ஆங்கில மொழி அறிமுகத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிடுகின்றது. இந்த பெருமை மிகு வெளியீடு வருகின்ற 4.12.2019 அன்று ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் மாலை 6 மணிக்கு நிகழ்கின்றது. அனைவரும் வந்து கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
Linden-Museum, Hegelplatz 1, Stuttgart, Germany
டாக்டர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு அமைப்பு






No comments: