இரண்டாவது எலிசபத் மகாராணியின் 2011 ஆம் ஆண்டுக்கான ராணி சேவை விருது 2011 தமிழ் அரசியலிலும் குறிப்பாக தொல்லியலிலும் அறியப்பட்ட ஓர் அறிஞரும் எழுத்தாளரும் தற்பொழுது நியூசீலாந்தில் வாழ்ந்து வருபவருமான ஆறுமுகம் தேவராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேவராஜனின் சமூகப் பணிகளை மதித்து இரண்டாவது எலிசபத் மகாராணியினால் ஆண்டு தோறும் வழங்கப்படும் ஞரநநளெ ளுநசஎiஉந ஆநனயட 2011 இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். கொழும்பிலிருந்த காலப்பகுதியிலும் தமது தொல்லியல் அரசியல் அறிவினைப் பல வகையிலும் பிரயோகித்தார். இன்று நியூசீலாந்திலும் தமது தள்ளாத வயதிலும் தமிழ்சமுகத்திற்கு பல பணிகளைச் செயது வருகிறார். இதற்காகவே இக் கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
.தொல்லியல் அறிஞர்கள் பலருடனும் தொடர்புள்ள இவர் தமிழர் வரலாற்றையும் அரசியல் போக்கினையும் தொல்லியல் பரிமாணங்களின் மூலம் நிறுவிக் காட்டுவதில் முக்கியம் பெறுகிறார். இவரது இருமொழியாற்றலும் .நீதித்துறையில் சேவையாற்றிய அனுபவமும் இங்குள்ள சங்கங்களுக்கும் அமைப்புக்களுக்கும் துணையாய் நிற்பதில் அவருடைய பணியைப் பரிமாணப்படுத்தி நிற்கின்றன.. “நியூசீலாந்துத் தமிழ்ச்சங்கம் நியூசீலாந்துத் தமிழர் பேரவை நியூசீலாந்துத் தமிழ் மூத்தோர் அமைப்பு என்பவற்றில் இவருடைய பணிகள் முக்கியம் வாய்ந்தவையாக உள்ளன..
பாடசாலை நாட்களில் 'தமிழோசை' என்ற சஞ்சிகையை வெளியிட்டு வந்த இவர் பின்னாட்களில் சுதந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய நாளிதழ்களில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் - தமிழ் நாடு மற்றும் வெளிநாட்டு இதழ்களிலும் எழுதியுள்ளார். இவரது 'காலந்தோறும் இலங்கையில் தமிழ் ' என்ற கட்டுரை 'லங்கா தீப ' சிங்கள வார இதழிலும் வெளிவந்துள்ளது.
1972ல் வல்லிபுரத்தில் ஈமத்தாழியைக் கண்டுபிடிக்க இவர் உதவியுள்ளார். முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவில் நடைபெற்ற போது அதில் -வண ஹிச்சல்ல தம்மரத்தின தேரர் 'சிங்களத்தில் தமிழ் மொழியின் செல்வாக்கு ' என்ற கட்டுரையையும் - தொல்லியல் ஆணையாளர் சதாமங்களா கருணாரத்ன 'இலங்கைப் பிராமியக் கல்வெட்டுகளில் தமிழின் செல்வாக்கு' என்ற கட்டுரையையும் வாசிப்பதற்கு இருவருக்கும் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.சிங்கள இலக்கிய மேதை சார்ள்ஸ் சில்வாவை ஊக்கப்படுத்தித் திருக்குறளை 'ஸ்ரீ கீய' என்ற பெயரில் மொழி பெயர்க்க வைத்தார்.1976 இல் நடைபெற்ற மட்டக்களப்பு தமிழாராய்ச்சி மாநாட்டில் “கிழக்கிலங்கையில் தமிழரின் தொன்மை” என்ற இவரால் படிக்கப்பெற்ற கட்டுரையில் பல தொல்லியற் சான்றுகளைக் காட்டினார்.1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படிக்கப்பெற்ற “இலங்கையில் தமிழரின் தொன்மை –கல்வெட்டுச் சான்றுகள்” என்ற தலைப்பிலான இவரது கட்டுரை அம்மாநாட்டின் கட்டுரைத் தொகுப்பில் வெளிவந்தது.
1991 ஆம் ஆண்டு காவிரிப்பும் பட்டினம் தொடர்பான ஆழ்கடல் - தொல்லியல் ஆய்வில் பும்புகார் ஆழ்கடல் ஆய்வுப்பணிகளைப் பார்க்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இதே ஆண்டில் தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அகில இந்தியக் கல்வெட்டில் மாநாட்டில் ஓர் அரைநாளை இலங்கை பிராமிக் கல்வெட்டுக்கு ஆய்வரங்கத்துக்கு ஒதுக்குவித்து -அதில் சிங்கள அறிஞர்களையும் பேசவைத்தார்.இந்தியாவில் இலங்கையின் பிராமிக் கல்வெட்டாய்வு பற்றிய பரவலுக்கு இவர் பல பணிகளைச் செய்துள்ளார்.
தொல்லியல் பற்றிய தெளிந்த அறிதலுடன் இலங்கை அரசியலில் நிறைந்த தகவல்களை தம்முள்ளே கொண்டுள்ள இவர் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.1954 இல் திரி சிங்கள பெரமுனவின் தமிழரெதிர்ப்புக் கட்டுரைகளுக்கு இவர் எழுதிய எதிர்ப்புக் கட்டுரைகள் டைம்ஸ் ஓப் சிலோன் நாளிதழ்களில் வெளிவந்தன.
“பல்கலைக்கழகத் தரப்படுத்தலால் தமிழ் மாணவருக்கு ஏற்பட்ட பாதிப்பு“-“அரச சேவையில் தமிழர் பறக்கணிப்பு“ “அரசகரும மொழியாகத் தமிழ் –அன்றும் இன்றும் ” ஆகிய ஆய்வுகள் இவரால் மேற்கொள்ளப்பட்டன. 2003 இல் சென்னைப்பல்கலைக்கழகம் நடத்திய “பயங்கரவாதம்“ பற்றிய அனைத்துலக மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்தார். மாநாட்டுத் தொகுப்பு நூலிலும் அது சேர்க்கப்பட்டது. தனிநாயகம் அடிகள் மேற்கொண்ட பற்றுதலினால்- இவர் எழுதிய “தமிழ்த்திரு தனிநாயக அடிகள்“ என்ற நூலுக்கு பேராசிரியர் க.கைலாசபதி வழங்கியுள்ள முகவுரையில் விரிவான ஆய்வுக்க்கு இவரது நூல் நல்ல வழிகாட்டி –எனப் பாராட்டியுள்ளார். 2009 இல் குமரன் புத்தக இல்லம் வெளியிட்ட தனிநாயகம் அடிகள் பற்றிய தொகுப்பு நூலில் இவரது கட்டுரையும் மற்றும் பேராசிரியர் சண்முகதாஸ் அமுதன் அடிகள் (சென்னை) ஆகியோரின் கட்டுரைகளுமே சேர்க்கப்பட்டுள்ளன.
nanri tamilwin.com
No comments:
Post a Comment