ஸ்ரீ ஆண்டாள் வைபவம் (தொடர்ச்சி)

.
பரமனுக்கே சூடிக்கொடுத்த ஆண்டாளின் பக்தியிலும்இ அன்பையும் பற்றி போன வாரத்திர்க்கு முன் பார்த்தோம்.
இந்த வாரம்  பூதேவியின் ஆவதாரமான ஆண்டாளின் பக்தியும்இ அந்த கண்ணனையே அடைய அவள்  பூண்ட பாவை நோன்பும்இ அதன் மஹிமையும்இ அவள் கொடுத்த உலகம் புகழ் " திருப்பாவை" என்னும் உன்னத  பாசுரங்களின் மஹிமையை பற்றி பார்ப்போம்.
சூடிக்கொடுத்த நாச்சியாரான ஆண்டாள் சதா மலர் மாலை தொடுப்பதோடுஇ பகவானின் கல்யாண குணங்களையும் பாமாலையாக புனைந்துஇ பரமன் திருவடியையே சதா நினைத்து உருகி இருந்தாள்.
விஷ்ணுசித்தரும் கோதையின்  நிலை கண்டு வருந்திஇ தக்க வரனை கண்டு மனம் முடிக்க எண்ணினார். இதை அறிந்த கோதை "மானிடர்க்கு என்று பேச்சுபடில் வாழகில்லேன்"  என்று முடிவு செய்து "அரங்கனை யல்லாமல் வேறொருவரையும் உடலாலும்இ உள்ளத்தாலும் தொடுவதில்லை “ என்று  திட விரதம் பூண்டாள்.பிரிந் தாவனத்தில் கோப்பிகள் கண்ணனை அடைய வேண்டி நோற்ற நோம்பே தானும் அவரை அடைய உபாயம் என்று முடிவு செய்தாள்.
மார்கழி மாதம் அதிகாலையில் துயில் எழுந்து மற்ற கண்ணிப்பெண்களுடன் பாவை நோன்பு நோற்று "திருப்பாவை" . பாசுரம் அருளச்செய்து பகவானை மணாளனாக அடைய கடும் விரதம் பூண்டாள்.
பிரிந்தவனத்தில் கண்ணன் யாசோதையுடன் செய்த விளையாட்டுகளையும்இ மற்ற சிறுவர்களுடன் புரிந்த களியாட்டங்களையும்இ . புரிந்த சிருங்கார லீலைகளையும் மணக்க ண் முன் நிறுத்தி இ 143 பாசுரங்களால் "நாச்சியார் திருமொழி” என்னும் . . பிரபந்த பாசுரங்களை பாடிஇ அந்த கமல கண்ணனையே இடைவிடாது நினைத்து உறுகினாள்.
கோதையின் நிலையை கண்ட விஷ்ணுசித்தரும் மிகவும் மனம் தளர்ந்தார். பகவானின் திருவடியே அபயம் என்று நம்பி இருந்தார்.
பக்தரின் நிலை கண்டு திருவரங்க பெருமான் திருஉள்ளம் புரிய எண்ணி இ விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி கோதையை தன் சன்னதிக்கு அழைத்து வரும்படி கூறினார். இதை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அர்ச்கர்களுக்கும்இ பாகவதர் கனவிலும் தோன்றி கூறி தன் பரிவாரங்களை அனுப்பி வைத்தார். விஷ்ணுசித்தர் பெருமகிழ்ச்சி அடைந்தார். ஆண்டாள் மங்கள நீராடிஇ பட்டாடை அணிந்து கொண்டுஇ மங்கள வாத்தியங்கள் முழங்க பெரியோர்கள் ஆசி பெற்று பொற்பல்லக்கில் அமர்ந்து திருவரங்கம் அடைந்தார். பின் அந்த பாம்பின் மேல் பள்ளி கொண்டு இருக்கும் அரங்கனுடன் சோதியில் கலந்தாள்.
தான் அருமை மகளை பிரிந்த விஷ்ணுசித்தர் மனம் கலக்கம் அடையவேஇ அவரது வேண்டுகோலுக்கு இணங்கி ஸ்ரீராங்க நாதர் நாச்சியாருடன் பங்குனி உத்திர திருநாளில் வடபத்திர சாயி சன்னதியில் எழுந்து அருளி பிரம்மருத்ராதி தேவர்களும் கண்குளிர  நாச்சியாரை திருமங்கல்ய தாரணம் செய்து கொண்டு தன் பக்தர்களுக்கு காட்சி அருளினார்.
குழந்தையில் அழுகைஇ பெற்ற தாயிற்க்கு  தானே தெரியும்இ அதே போல் இந்த உலகையே தன்  மேல் தாங்கி பொறுமையாக இருக்கு பூதேவி நாச்சியார் ஆண்டாள் ஆக அவதரித்து இந்த மண்ணுல க குழந்தைகள் எல்லாம் மாறாத இன்பமும் இவ்வுலகிலும்இ அவ்வுலகிலும் பெற நல்ல எளிமையாக வாயினால் வாயால் பாடிஇ மனத்தினால் சிந்தித்துஇ பூமலர் தூவி தொழும் உன்னத மார்ககத்தை யும்இ அவனை வழிபட " திருப்பாவை" நாச்சியார் திருமொழி என்னும் அற்புத பாசுரங்களையும் தந்து உள்ளார்.
ஆண்டாளின் வாழ்க்கையில் இருந்து பகவானை அடைய அவன் மீது தீராத அன்பும்இ நம்பிக்கைஇ காதல் மட்டுமே வேண்டும் என்று தெளிவாக தெரிகிறது.12 ஆழ்வார்களுள் ஒரே பெண் பெண்ணாக அவதரித்து பகவானை நாம சங்கீர்த்தனத்தின் மூலம் அடையும் எளிய வழியை கட்டிய கோதையின் மலர் பாதங்களை நாமும் தூமலர் தூவி தொழுது போற்றலாம்.
திருவாடி பூரத்தில் ஜகத்துதித்தாள் வாழியே
  திருப்பாவை  முப்பதும் செப்பினால் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை  வாழியே
  பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பது மூன்று உரைத்தாள் வாழியே
  உயரரங்கர்கே  கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே
 வண் புதுவை  நகர் கோதை மலர் பதங்கள்  வாழியே  ஜஆண்டாள்  வாழித்திருநாமம்ஸ
அர்த்தம்
திருவாடி பூரம்  அன்று இந்த உலகத்தில் அவதரித்துஇ திருப்பாவை என்னும் உன்னத பாசுரங்களை  உலகிர்க்கு கொடுத்துஇ கண்ணனின்  சிங்கார லீலைகளை 143 "நாச்சியார் திருமொழி" பாசுரங்களாக உலகிற்கு கொடுத்துஇ அந்த உயர்ந்த திருவரங்கனுக்கே  தன்னை அற்பனித்த கோதையின் பாதங்களை வழிபடுவோம் என்பது இந்த பாடலின்  கருத்து.
குறிப்பு: மாதங்களில் சிறந்தது மார்கழி இ இதையே கண்ணன் கீதையிலும் கூறுகிறார். இந்த மாதத்தில் தான் ஆண்டாள் திருப்பாவை என்னும் 30  திவ்ய பாசுரங்களை பாடி பகவானை அடைந்தாள். இந்த மாதத்தில் 30 திருப்பாவை சொல்லுவது மிகவும் உன்னதமானது.
ஆகையால் இந்த மார்கழி மாதத்தில் அந்த கண்ணனை ஆண்டாள் காட்டிய வழியில்  "வாயால்  திருப்பாவை சொல்லி இ மனத்தினால் சிந்தித்துஇ பூமலர் தூவி தொழுது"  வழிபடலாம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!
என்றும் அன்புடன்
ஆண்டாள்

No comments: