.
சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் காத்திரமான உரைகளுடன் முன்னகர்ந்து கொண்டிருந்ததுடன் அதன் அடுத்தகட்டமாக பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையுரை நிகழ்த்தினார்.
புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மற்றும் அடையாளத்தை மீள்நினைவூட்டும் விதமாக அவருடைய உரை அமைந்திருந்தது. சில வார்த்தைப் பிரயோகங்கள் எமது தனித்துவத்தின் அவசியத்தை உணர்த்துவனவாக இருந்தன.
“உலகமயமாதல், புலச்சிதறல் (Diaspora) அடையாள நெருக்கடி (Identity Cricis) முதலியவற்றின் எழுபுலத்தில் இம்மாநாடு கூட்டப்பட்டுள்ளது.
மத்திய தர வகுப்பின் ஆக்கம் அல்லது எழுகுழாத்தினரது ஆக்கம் (Elite Formation) ஆகியவற்றில் எழுத்தாளர் என்ற துணைப்பண்பாட்டினரும் ஒன்றிணைகின்றனர் அல்லது உள்ளடக்கப்படுகின்றனர்” என அவர் ஆரம்பித்தமை சபையோரிடையே கைதட்டலை பெற்றுக்கொண்டது.
சபா.ஜெயராசாவின் உரையின் பின்னர் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட தமிழறிஞர், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் வாழ்த்துரை இடம்பெற்றது.
எழுத்தாளர்களினதும் மொழி வளர்ச்சியினதும் முக்கியத்துவமானது, ஓர் இனத்தை எவ்வாறு உலகளாவிய ரீதியில் அடையாளப்படுத்துகிறது என்பதை மிக எளிமையான நடையில் குறிப்பிட்டார்.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் உரைகளில் வழமையாக புதிய தகவல்களை வெளியிடுவது வழமை. அதுபோல (Diaspora) என்ற ஆங்கிலச் சொல் தாவரங்களுக்கு உரியது என்றும் அது தாவரப்பரம்பலைக் குறிப்பது எனவும் தகவலை வழங்கி தனித்துவத்தை வெளிப்படுத்தினார்.
“Diaspora என்ற சொல் சிதறி வீசுகை அல்லது சிதறுகை எனப் பொருள் தரும். மலர்கள் சிறதறுதலை இது குறிக்கிறது. அந்தச் சொல்லை அடியொட்டித்தான் மக்கள் சிதறுகை எனப்பட்டது. இப்போது Sri Lankan Tamil Diaspora என்று சொல்கிறார்கள்.
தமிழ் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெறுவதற்கு புலம்பெயர் தமிழர்களும் காரணமாக அமைகிறார்கள். புதிய யுகத்துக்கு ஏற்ப தமிழ்மொழி ஆழப்படுத்தப்பட்டும் அகலப்படுத்தப்பட்டும் வருகிறது.
புலம்பெயர்ந்தோர் எப்போதுமே தாம் விட்டுச்சென்ற நாடு குறித்து தான் சிந்திப்பார்கள். அது இயல்பு. அதற்கு ஏற்ப எங்களுடைய பண்பாட்டியல்களை அவ்வந்த நாட்டு மொழிகளில் எழுத முன்வரவேண்டும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களுடைய அனுபவங்களும் பட்டறிவும் வெவ்வேறுபட்டவையாக அமைந்துள்ளன. அவற்றை அந்தந்த நாட்டு மொழிகளில் எழுதுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக வேண்டும். அது எங்களுடைய ஆழமான பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் வெளியுலகுக்குக் காட்டுவதாக இருக்கும்.
எழுத்தாளர்கள் என்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். சிருஷ்டி என்ற ஒன்று இருந்தால் தான் நடைமுறை என்பது இருக்கும். எழுத்தாளர்கள் சிருஷ்டிப்பவர்கள்.
அவர்கள் தங்களை பாரதி, கம்பன், புதுமைப்பித்தனின் வாரிசுகள் என நினைக்க வேண்டும்” எனத் தனது உரையை நிறைவுசெய்தார் பேராசிரியர் சிவத்தம்பி.
மாநாட்டு மலர் அறிமுகவுரை டாக்டர் ஜின்னாஹ் ஷெரிபுத்தீன் ஆற்றினார். கம்பவாரிதி இ.ஜெயராஜ் மலர் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.
தமிழ் மணம் கமழ்ந்த கம்பவாரிதியின் உரையில் பாரம்பரியத்தை எதிர்காலத்தில் பேணுதல் தொடர்பில் கூர்மையான அவதானம் தெரிந்தது.
மலர் வெளியீட்டுரையின் பின்னர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
அதன்பின்னர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பேராளர்களின் உரைகள் இடம்பெற்றன. இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ரஷ்யா, ஜெர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த பேராளர்கள் தமது நாடுகளில் தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் எழுத்துத் துறையின் தற்கால நிலை குறித்துப் பேசினர்.
அத்துடன் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன. எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் நிகழ்ச்சிகளை காத்திரமான முறையில் தொகுத்து வழங்கியதுடன் நேர முகாமைத்துவத்தை சரியாகக் கையாண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த பேராளர்கள் சுய அறிமுகம் செய்து உறவுகளை வளர்த்துக்கொண்டனர். ஒவ்வொரு நாட்டு தமிழ் எழுத்தாளர்களிடமும் நல்லதொரு உறவை ஏற்படுத்திக்கொள்ள முதல்நாள் நிகழ்வு களம் அமைத்திருந்தது என்றே கூறலாம்.
-இராமானுஜம் நிர்ஷன்
6 comments:
சிவத்தம்பியாருக்கு அறளை பெயர்ந்திட்டுது.
சிவத்தம்பியாருக்கு அறளை பெயர்ந்திட்டுது.
It is 100% true.
அறள பெயராத நீங்கள் என்னத்த கிளிச்சுப்போட்டீங்கள் முடிந்தால் ஏதாவது செய்யுங்கோ அல்லது மூடிக்கொண்டு இருங்கோ
[quote]புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களுடைய அனுபவங்களும் பட்டறிவும் வெவ்வேறுபட்டவையாக அமைந்துள்ளன. அவற்றை அந்தந்த நாட்டு மொழிகளில் எழுதுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக வேண்டும். அது எங்களுடைய ஆழமான பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் வெளியுலகுக்குக் காட்டுவதாக இருக்கும்.[/quote]
ஏன் இங்கேயும் வந்து அடி வாங்கவோ? வந்தமா வாழ்ந்தமா மண்டையை போட்டமா என்று இருக்க வேணும் .....பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் நிலைநாட்டி என்னத்தை கிழிக்க போயினமாம்....நேரத்திற்க்கு நேரம் கருத்துக்களை மாற்றும் பெரியவர் பாரம்பரியம் பண்பாடு பற்றி பேசுகிறார்
[quote]புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களுடைய அனுபவங்களும் பட்டறிவும் வெவ்வேறுபட்டவையாக அமைந்துள்ளன. அவற்றை அந்தந்த நாட்டு மொழிகளில் எழுதுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக வேண்டும். அது எங்களுடைய ஆழமான பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் வெளியுலகுக்குக் காட்டுவதாக இருக்கும்.[/quote]
--------------------------
உப்பிடித்தான் தமிழர்களை உசுப்பேத்தி விட்டு பிறகு தமிழர்களுக்கு எதிரானவர்களோடு கூட்டு சேருவது
அறள பெயராத நீங்கள் என்னத்த கிளிச்சுப்போட்டீங்கள் முடிந்தால் ஏதாவது செய்யுங்கோ அல்லது மூடிக்கொண்டு இருங்கோ [quote]
Tell what Sivathamy did? With "pantham" to Kailasapathy he became as Professor. Do you know how Sivathamby did his PhD?
Post a Comment