கனடாவில் கைதான புலி ஆதரவாளர் சுரேஷ் ஸ்ரீகந்தராஜா விடுதலை!

.
விடுதலைப் புலிகளுக்கு உபகரணங்களையும் நீர்மூழ்கிக் கப்பலுக்கான சாப்ட்வேர்களையும் வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கனடாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் சுரேஷ் ஸ்ரீகந்தராஜா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

4.5 லட்சம் டாலர் பிணை உறுதி பத்திரத்தின் பேரில் அவர் ஜாமீனில விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து நீதிமன்றத்தில், சுரேஷ் ஸ்ரீகந்தராஜா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

நன்றி thatstamil.oneindia.in

No comments: