வன்னி பாசாலைகளின் நலன் பேணல் நிகழ்வு

.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வன்னியில் உள்ள 6 பாடசாலைகளிலுள்ள  மாணவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் நற்பணிக்காக  கடந்த சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை றேடியோ தோன் நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி நிதி சேகரித்தது. போரினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் சப்பாத்துக்கள் புத்தக பைகள் போன்ற பொருட்களே வாங்கமுடியாத துற்பாக்கிய நிலை உள்ளது.

 இந்த இன்னலை சிறிதளவேனும் போக்கும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உதவியுடன் பாடசாலை அதிபர்களோடு தொடர்பு கொண்டு அவர்களின் தேவைகளை நேரிடையாக வழங்குவதாக குறிப்பிட்டிருந்தார்கள். 
இந்த நிதி சேகரிப்பின் போது ATBC ஆதரவாளர்கள் அன்பர்கள் நண்பர்கள் என்று பலரும் வழங்கிய நிதி 20375 டொலர்கள் என்று ATBC அறிவித்துள்ளதுடன் கீழ்க்குறிப்பிடப்படும் 6 பாடசாலைகளுக்கு இந்த நிதி பங்கிட்டு கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ATBC யின் இந்த செயற்பாட்டில் பல அறிவிப்பாளர்கள் கலந்து கொண்டு கூட்டாக செயலாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது வன்னியில் இருந்து பாடசாலை அதிபர்கள் செவ்வி வழங்கியதும் இங்குள்ள மக்களுக்கும் ATBC வானொலிக்கும் நன்றியை தெரிவித்தார்கள்
ஸ்ரத் பீல்டைச் சேர்ந்த கருணை உள்ளம் கொண்ட ஒரு தமிழர் ஒரு பாடசாலைக் கட்டிடம் ஒன்றின் முழுச்செலவான 1000 டொலர்களை தன் இரு குழந்தைகளின் பெயரில் வழங்கியது குறிப்பிடத் தக்கது.  

கீழ்க்கண்ட பாடசாலைகள் இந்த பணத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளது.

வவுனியா மாதர் பணிக்கர் மகிழன்குளம் அரச தமிழ் கலவன் பாடசாலை 
கிராம சேவை பிரிவு மருதமடு
வவுனியா ஒலுமடு அரச தமிழ் கலவன் பாடசாலை - கிராம சேவை பிரிவு: வவுனியா வடக்கு நெடுங்கேணி கோட்டம்
கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயம் - கிராம சேவை பிரிவு வேலன்குளம்
திருமுறி கண்டி இந்து வித்தியாலயம் : கிராம சேவை பிரிவு : முல்லைத் தீவு மாவட்டம் துணுக்காய்
முல்லைத் தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயம் - கிராம சேவை பிரிவு சிலாவத்தை

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்ப் பாடசாலை-கிராம சேவை பிரிவு ஊற்றுப்புலம்

2 comments:

Kiri said...

வாழ்த்துக்கள், சமூக வானொலி என்பதை மீண்டும் காட்டியிருக்கிறது உங்கள் வானொலி

saami said...

good one