நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழர்கள் 5 பேர் மரணம்
                                                                                               செய்தி தொகுப்பு : கரு

இலங்கைத் தமிழர்கள் 5 பேர் அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் கேட்டுச் சென்ற போது படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் காணமால் போனார்கள்.
64 இலங்கைத் தமிழர்கள் பயணம் செய்த இந்த படகு, அவுஸ்திரேலியா நாட்டின் எல்லையில் இந்தியப் பெருங்கடலில் பழுதடைந்தது.

ரஷிய கப்பல் ஒன்று நடுக்கடலில் சிக்தித் தவித்த பயணிகளை மீட்டது. அதில் இருந்த 59 பயணிகள் மட்டுமே கப்பலில் ஏற்றப்பட்டனர். 5 பயணிகளை காணவில்லை. அவர்கள் அணிந்திருந்த உயிர் காப்பு கவசங்கள், ரயர்கள் போன்றவை அந்த பகுதியில் மிதந்து கொண்டிருந்தன. ரஷிய கப்பல் மீட்ட பயணிகள் காகஸ் தீவில் விடுவிக்கப்பட்டார்கள். இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் உள்ள முகாமிற்கு அழைத்துச்செல்லப்படுவார்கள் என அவுஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது. காணமல் போன 5 பயணிகளை மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது.

தமது வள்ளம் உடைந்தன் பின் உதவி கேட்ட 5 ஏதிலிகள் கடலில் இறந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரனைகள் மேற்கொள்ளபட்ல் வேண்டும் என்ற அழுத்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. கடல் மீது அவதானிப்புச் செலுத்தும் அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அப் படகில் எரிபொருள், உணவு, தண் நீர் இல்லை என்பது தெரியும் எனவும் அனால் அவர்களைப் பாதுகாக்க அவர்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. அப்படகில் வந்த 59 பேர் ரஸ்ய வர்தகக் கப்பலால் காப்பாற்றப்பட்டு கிறிஸ்மஸ் தீவுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இறந்த ஐவரும் இலங்கையர்கள் எனவும் உயிர் தப்பியவர்களிடம் இறந்தவர்கள் பற்றிய விசாரனைகள் மேற்கொள்ளப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

No comments: