ஆஸ்திரேலிய பாராளுமன்ற வரவு செலவு திட்டம் 2010

சென்ற செவ்வாய்க்கிழமை மே மாதம் 11ம் திகதி ரட் அரசாங்கம் தனது மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை பாரளுமன்றத்தில் வெளியிட்;டது. மூன்று வருடத்துக்குள் பணம் “சிவப்பு” இலிருந்து “கறுப்பு” ஆக வரவு செலவு மிகுதித்தொகை மூன்று வருடங்களுக்கு முன்னராகவே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது



மருத்துவம்

• 772 மில்லியன் செலவில் மருத்துவர் (புPள) தொடர்புகள் (எந்த நேரத்திலும்)

• 523 மில்லியன் செலவில் புதிய தாதிமார்கள் (Nurses)

• 467 மில்லியன் செலவில் 2012 நடுப்பகுதியில் கணினி மருத்துவ அறிக்கைகள்

• 400 மில்லியன் செலவில் புதிய மருத்துவ நிலைய நிதி ஒதுக்கீடும் அவற்றின் நடமுறைக்கான அறிக்கையும்

• 2 ,500 மில்லியன் சேமிப்பு – மலிந்த மருந்துகளாலும் சிறந்த பார்மஷி வியாபார முறையாலும்

கைவிடப்பட்ட இரயில் வசதி

• ஏறக்குறைய 1000 மில்லியன் கூடுதலான செலவில் பொதிகள் ஏற்றி செல்லும் இரயில்

• புதிய தண்டவாளங்கள் சிலிப்பர்கள்

பாதுகாப்பு

• 25 ,700 மில்லியன் 2010-11 நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

• 1100 மில்லியன் ஆப்கானிஸ்தான் ஈராக் கிழக்கு தீமோர் போன்ற இடங்களில் தற்போது அமுலில் இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும்

• 487.1 மில்லியன் செலவில் ஆப்கானிஸ்தானில் ரடார் மற்றும் ரொக்கற்றுக்கள் வாங்குவதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

• பாதுகாப்பு நடவடிக்கையை சிறந்த முறையில் சீரமைத்து 1000 மில்லியன் செலவை 2010-11ம் ஆண்டு குறைக்கப்படும்.

• 2010 -14ம் ஆண்டுகளில் 329 மில்லியன் செலவில் அவுஸ்திரேலியா இராணுவ தளங்களின் பாதுகாப்பு உயர்த்தப்படும். அதே காலப்பகுதியில் 1700 மில்லியன் செலவில் இராணவ தளங்கள் சீரமைக்கப்படும்.

எல்லைப் பாதுகாப்பு

• 790.3 மில்லியன் செலவில் நாலு வருடங்களுக்கு கடல் மார்க்கமாக வரும் அகதிகளை குறைப்பதற்குரிய வழிவகைகளை மேற்கொள்வதற்கும் 471 மில்லியன் செலவு 2010-11 ம் ஆண்டிற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

• 143.8 மில்லியன் செலவில் விமான தளத்தை சீரமைப்பதற்கும் மற்றய தளங்களைச் சீரமைக்கவும்

• 32.9 மில்லியன் இந்தோநேசியாவிற்கு அகதிகளை கடத்திவருவதை நிற்பாட்டுவதற்கு உதவுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

• எட்டு புதிய பாதுகாப்பு படகுகள், மற்றும் 42.6 மில்லியன் அதற்குரிய செலவுகள்

• 759.4 மில்லியன் அவுஸ்திரேலியா வான்தளங்களை நாலு வருடங்களுக்கு பாதுகாப்பதற்கு ஒதுக்கப்பட்;டுள்ளது.

• 163.2 மில்லியன் களவாக மீன் பிடிக்கும் வெளிநாட்டவர்களை தடுப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை

• கல்வி தகைமையுள்யோருக்கு 113,850 இடங்களும், குடும்ப அங்கத்தவர்களோடு இணைபவர்களுக்கு 54,550 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது

• மேலும் 9150 இடங்கள் தனியார் நிறுவனங்களோடு தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

No comments: