அவுஸ்திரேலியா மெல்பனில் பத்தாவது தமிழ் எழுத்தாளர் விழா
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியகலைச்சங்கத்தின் பத்தாவது தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரையில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திருமதி அருண்.விஜயராணியின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்முறை இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக ஜெர்மனியிலிருந்து எழுத்தாளரும் ஓவியரும் வெற்றிமணி ஆசிரியருமான திரு.கே.எஸ்.சிவகுமாரன் தமிழகத்திலிருந்து மூத்ததலைமுறை படைப்பாளி திரு. எஸ்.வைதீஸ்வரன் ஆகியோர் வருகைதரவிருக்கின்றனர்.
இலக்கிய கருத்தரங்கு, மாணவர் அரங்கு, கவியரங்கு, மற்றும் ஓவியர் சிவகுமாரனின் ஓவியக்கண்காட்சி ஆகியனவற்றுடன் குறும்படக்காட்சிகளும் விழா நிகழ்ச்சிகளில் இடம்பெறுகின்றன.
பத்தாவது எழுத்தாளர் விழாவை முன்னிட்டு சர்வதேச ரீதியாக நடத்தப்பட்ட சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகளும் இவ்விழாவில் வெளியிடப்படும். சங்கத்தினால் விழாவைமுன்னிட்டு பூமராங் என்னும் சிறப்பு மலரும் வெளியாகும்.
No comments:
Post a Comment