நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அவுஸ்திரேலிய பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் அறிவிப்பு


நாடு கடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில், 4 பிரதிநிதிகளை நியு சவுத்வேல்ஸ் மாநிலத்தில் இருந்து தெரிவு செய்வதற்கான தேர்தல் திட்டமிட்டவாறு எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

ஏனைய மாநிலங்களிற்கான 6 பிரதிநிதிகள், ஏற்கனவே போட்டியின்றியே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இறுதியாக அவுஸ்திரேலியாவின் வட, தென் மற்றும் மேற்கு மாநிலங்களுக்கான பிரதிநிதியாக திரு. கனகேந்திரம் மாணிக்கவாசகர் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதையும் அறியத்தருகின்றோம்.

நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பற்றிய விபரங்கள் வருமாறு:


தேர்தல் தினம்:- 22 ஆம் திகதி சனிக்கிழமை மே மாதம் 2010,


வாக்களிப்பு நிலையம் - 1

நேரம்:- காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரை

இடம்:- Reg Byrne Community Centre, Darcy Rd, Wentworthville NSW 2145


வாக்களிப்பு நிலையம் - 2

நேரம்:- பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 வரை

இடம்:- Homebush Boys High School

Portable Rooms # 76 (at rear)

Enter via Crescent Car Park Entrance

இத்தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அவை நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்தல் தினம் அன்று தேர்தல் கடமைகளுக்கு பொறுப்பான பணிகளை மேற்கொள்வர்.

தேர்தல் அவை உறுப்பினர்கள்:-

திரு. சிறீ சுதர்ஷன் (தலைவர்)

கலாநிதி. என். கெளரிபாலன்

திரு. திருநந்தகுமார்

திரு. பத்மநாதன்

திரு. வேலுப்பிள்ளை

திரு. கந்தசாமி

இத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய மட்ட தேசிய செயற்குழுவின் விக்டோரிய மாநில உறுப்பினர்களும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்களாக நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்திற்கு வருகைதரவுள்ளனர். தேர்தல் தொடர்பான முழுமையான செயற்பாடுகளுக்கும் மேற்குறிப்பிட்ட தேர்தல் அவையே பொறுப்பாக இருக்கும் என்பதையும் அதனால் எடுக்கப்படும் முடிவே இறுதியானது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

- தேர்தல் ஏற்பாட்டுக் குழு

3 comments:

Anonymous said...

Hope this will be a genune election.

Raj said...

தோல்வி பெறுபவர்கள், இத்தேர்தல் பற்றி தேர்தல் முடிந்ததும் குறை கூறுவது நிச்சயம். இல்லாத பொல்லாத கதைகளை தோல்வி பெறுபவர்கள் நிச்சயம் சொல்லுவார்கள்.

Mylava Bala Subrhamaniam said...

In my opinion, this election is not in line with the democratic process. A bunch of dominant people nominate who they like quietly, and elect them as the members. When you look most of those people, who get elected in the NSW/ACT are not genuine people who got concern on our people, but with their own hidden agendas. Shame we are going in a wrong path.
Tholai Nokku analyst