அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010
இடம்: பிரஸ்டன் நகரமண்டபம் (மெல்பன்)
நாள்:22-5-2010 காலம்: சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை
அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி, கலை, இலக்கியம் சார்ந்து தேர்ந்த ரஸனையை வளர்ப்பதற்கும் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்வதற்காகவும் வருடாந்தம் நடைபெறும் இவ்விழா ஒன்றுகூடலில் தமிழ்கற்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் கலை, இலக்கிய ஆர்வலர்களும் பயன்பெறத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
சிறுவர் அரங்கு: இங்கு தமிழ்கற்கும் குழந்தைகள் சிலர் தமது வாழ்வனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு அரங்கு.
மாணவர் அரங்கு: சிட்னியிலிருந்து வருகைதரும் திரு.திருநந்தகுமார் தலைமையில் மெல்பன், சிட்னி மாணவர்கள் பங்குகொள்ளும் கருத்தரங்கு.
இலக்கியக்கருத்தரங்கு: தமிழ்நாடு, மலேஷியா, ஜேர்மனி முதலான நாடுகளிலிருந்து வருகைதரும் இலக்கியப்படைப்பாளிகள் கலந்துகொள்ளும் கருத்தரங்கு.
ஓவிய அரங்கு: ஜெர்மனியில் புலம்பெயர்ந்துவாழும் ‘வெற்றிமணி’ இதழின் ஆசிரியரும் எழுத்தாளரும் ஓவியருமான சிவகுமாரின் ஓவிய ஒளிப்படக்காட்சி.
கவியரங்கு: கவிஞர்களின் கவியாற்றலை வெளிப்படுத்தும் கவியரங்கு.
‘பூமராங்’ மலர் வெளியீடு:
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழாவை முன்னிட்டு சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்து உட்பட பல படைப்புகளுடன் ‘பூமராங்’ சிறப்பு மலர் வெளியீடு.
சர்வதேச சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள் அறிவிப்பு: பத்தாவது எழுத்தாளர் விழவை முன்னிட்டு சர்வதேச ரீதியாக நடத்தப்பட்ட சிறுகதை, கவிதைப்போட்டிகளின் முடிவுகள் வெளியிடப்படும்.
குறும்பட அரங்கு:
அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், தமிழ்நாடு, இலங்கை, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட சிறந்த ஆறு குறும்படங்களின் காட்சி.
அனைத்து நிகழ்ச்சிகளும் இலவசம். மதியம் பகல்போசன விருந்தும் வழங்கப்படவிருப்பதனால் வருகைதரவிரும்பும் அன்பர்கள் தங்கள் பெயர்களை பதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு:
திருமதி அருண்.விஜயாராணி (தலைவர்) 03-9499 7176
திரு. சண்முகம் சந்திரன் (பொதுச்செயலாளர்) 03-9799 8493
திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தி (நிதிச்செயலாளர்) 03-9404 2459
No comments:
Post a Comment