மகாகவி சுப்பிரமணியாரதியார் பிறந்த 125-வது ஆண்டு நினைவாக காசி இந்துப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கம்

பாரதியாரின் தத்துவப் பார்வை

                                                      சித்தாந்தரத்தினம் கலாநிதி க. கணேசலிங்கம்

இந்திய நாட்டின் ஈடிணையற்ற தமிழ்ப் புலவன் சுப்பிரமணியபாரதி;. நூற்றியிருபத்தைந்து ஆண்ருகளுக்கு முன் தோன்றிய பாரதியின்; பாடல்கள் தமிழ் இலக்கியத் துறையில் புதிய பரிமாணத்தை உண்டாக்கின. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உந்துதல் கொடுததன. அறியாமை, வறுமை, சமுதாய அநீதி போன்றவற்றை அகற்ற முயன்றன. இன மொழி மான உணர்வை ஊடடின. புல்வகைப் பண்பாடும் கலாச்சாரமுங் கொண்ட, பல்லின மக்கள் வாழும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வழிவகுப்பதாகவும் அவை அமைந்தன.

தமிழகத்தில் சிவப்பிராமணக் குலத்தில் பிறந்தவர் பாரதியார். தனது தாயின் தந்தை “செந்தமிழ்ச் செய்யுளால் மூன்று போதும் சிவனடி ஏத்துவான்”, என்று கூறுகிறார்.

பாரதி தனது பாடல்களில் பல்வேறு சமயங்கள் பற்றிப் பேசுகிறார்;. ‘சர்வமத சமரசம்’ என்ற பாடலில் ஒரு கோடி மதங்கள் உலகிலுள்ளதாகக் கூறி, பௌத்தம், கிறித்தவம், சமணம், இசுலாம் எனப் பலவற்றைக் குறிப்பிடுகிறார். கடவுள் மறுப்பாளரைப பார்த்து, ‘கடவுள் நீயே, தத்வமஸி, நீயே அஃதாம், மனத்துள் புகுந்த மாயையினால் அப்படிப் பேசுகிறாய்’ எனக் கூறுகிறார்.

‘நான் இறைவன் அல்லது பிரமம’; எனக் கருதுவது வேதாந்த வழக்கு. ‘தத்வமஸி’ என்னும் வேத மகாவாக்கியத்திற்கு வேதாந்திகள் தரும் விளக்கமாக வந்தது இது. வேதாந்தக் கருத்தின்படி நாம் பிரமத்திலிருந்து பிரிந்து இவ்வுலகில் பிறவி எடுத்துள்ளோம். ஆன்மீக சாதனையால் மீண்டும் மூலமான பிரமத்துடன் சேருவோம்.

பாரதி தனது ‘பாரதி அறுபத்தாறு’ என்ற பாடலில் இந்த வேதாந்தக் கருத்தைக் சொல்கிறார். ‘புதிய பாடல்கள்’ என்ற கவிதையிலும், ‘எல்லையி லாப்பொருள் ஒன்று …..நீயும் அதனுடைத் தோற்றம்’, என்று வேதாந்தம் பேசுகிறார். ஆயினும் அவரின் பாடல்கள் பலவற்றில்; வைசித்தாந்தம் மேலான இடம் பெறுவதைக் காணலாம்.

சிவோகம்பாவனை என்பது சிவன் எம்முள் (எம் அகத்துள்) இருக்கிறான் என்று பாவனை செய்தல். இது சைவத்தில் காணப்படும் ஒரு முக்கிய ஆன்மீகப் பயிற்சி. சுpவத்தை நோக்கி ஆன்மீக சாதனை செய்யும் ஒருவன் ‘நான் சிவமே’ என்று எண்ணினால் ஈற்றில் அவன் சிவமாம் தன்மை பெறுகிறான். ‘பாரதி அறுபத்தாறு’ என்ற பாடலில் எந்நேரமும் சிவோகம்பாவனை செய்யும்படி பாரதி வலியுறுத்துகிறார். ‘ஸதாகாலம் சிவோகமென்று ஸாதிப்பாயே’ என்பது அவரின் வார்த்தை. சைவ சித்தாந்தம் காட்டும் சிவோகம்பாவனை பரமநிலை கூட்டும் என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.
சைவத்தின் முழுமுதற்கடவுள் சிவன். தன் நிலையில் அவன் அறிவே வடிவானவன் என்பதும், அன்பே அவனின் முக்கிய பண்பு என்பதும் சைவசித்தாந்தக் கொள்கை. அறிவுக்கும் அன்புக்கும் மாறாக அறியாமையும் பொறாமை கர்வம் போன்ற தீய பண்புக்கூறுகளும் உள்ளன. இவற்றின் மூலம் ஆணவம். சைவசித்தாந்தம் மட்டுமே ஆணவம் பற்றிப் பேசுகிறது.
அவன் சுத்த அறிவினன், ஆணவத் தொடர்பற்றவன், காலத்தைக் கடந்தவன் (காலாதீதன்) போன்ற சித்தாந்தக் கருத்துக்கன் பல அவரின் ‘பரசிவ வெள்ளம்’ போன்ற பாடல்களில் வருகின்றன.
‘கண்ணன் என் சீடன்’ என்ற பாடலில் கண்ணனுக்கும் தனக்கும் உலகப் பொருட் களுக்கும் உள்ள உறவை முதலில் விளக்குகிறார். கண்ணன் தானாகவும் பிற nhருட்களாகவும் இருப்பதாகவும், ஆயினும் தனக்கும் அவற்றிற்கும் வேறாகவும் இருப்பதாகவும் கூறுகிறார். இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள இத்தகைய உறவு சைவசித்தாந்தத்தில் மட்டுமே காணக்கூடியது. உயிர் பிரமமென்றோ அல்லது அதன் பகுதியென்றோ கொள்ளும் வேதாந்தத்தில் இல்லாதது இந்த உறவு.புhரதி போதை தரும் மதுவைப் பற்றியும் பாடுகிறான். அங்குகூட சிவன், சிவானந்தம், சிவயோகம் முதலியவை பற்றிப் பேசுவதைக் காணலாம். குழந்தைகளுக்காக எழுதிய ‘ஆத்திசூடி’ சைவத்தின் முதற்கடவுளான சிவனை வணங்கியே தொடங்குகிஙது.

இறைவனைச் சச்சிதானந்தம் எனக்குறிப்பிடுவதை உபநிடதங்களில் காணலாம். இப்பெயர் சத், சித், ஆனந்தம் என்னும் மூன்று சொற்களால் ஆனது. சைவசித்தாந்தத்தில் சத் என்பது நிலையான மாறுதலற்ற உள்பொருள். சித் என்பது அறிவு அல்லது ஞானம். ஆனந்தம் என்பது இன்பம். ‘பிரமாஸ்துதி’ என்ற பாடலிலே, இவற்றை ‘ஆமெனும் பொருள்’, என்றும் ‘அறிவுடன் ஆனந்த இல்புடையது’ என்றும் கூறி விளக்குகிறார். சச்சிதானந்தம் என்னும் நின்மலப்பொருளான இறைவனைத் தான் நினைப்பதாகவும் கூறுகிறார்.

மனமும் உடலும் இணைந்த ஆன்மீகப் பயிற்சிகள் இறைருளும் மெஞ்ஞானமும் பெறுவதற்கு ஏற்ற சாதனங்கள். இப்பயிற்சிகள் சரியை, கிரியை ஆகிய தவங்கள் எனச் சைவசித்தாந்தத்தில் கூறப்படும். இவற்றின் முடிநிலையாக உள்ளது யோகம். யோகம் என்றால் (சிவத்துடன்) ஒன்றுதல் என்பது பொருள். பாரதி இப்பயிற்சிகளைத் தவயோகம் எனக் குறிப்பிட்டு, ‘நன்றுசெய் தவயோகம், சிவ ஞானமும் பக்தியும் நண்ணிடவே’ என வலியுறுத்துகிறார்.

சிவனும் அவனின் அருளான சக்தியும் பிரிவில்லாதவர்கள், உலகுக்கு அம்மையப்பராக அவர்கள் உள்ளனர,; அனைத்தும் அவன் அருளாலேயே நடைபெறுகின்றன. பாரதியின் ‘விநாயகர் நான்மணி மாலை’யில் இத்தகைய சைவசித்தாந்தக் கருத்துக்களைக் காணலாம். சிவனின் சக்தி ஞானசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி என மூன்றாக உள்ளது எனச் சித்தாந்தம் விளக்கும். இதனைப் பாரதியும், ‘இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாங்கு மூலசக்தியின் முதல்வா போற்றி’, என்று பாடி விளக்குவதைக் காணலாம்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய பலனுண்டு, வினை செய்தவனே அதன் பலனை அனுபவிக்கவேண்டும், என்பது வினைக்கொள்கை. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’, என்பது சங்க இலக்கியத்தில் காணும் அனுபவ வாக்கு. இது வினைக்கொள்கையைச் சுருக்கமாக விளக்குகிறது. வினை அனுபவத்திற்கு வராமலிருப்பதற்கு, எமது செயல்கள் சிவத்தின் வழியில் அமைய வேண்டும். ‘பிரமாஸ்துதி’ என்ற பாடலில், ‘செய்க செயல்கள் சிவத்திடை நின்று’, என்று கூறி பாரதி இதனை விளக்குகிறார்.

வினைப்பயனைக் கூட்டி அனுபவத்திற்கு வரச்செய்வது இறைருளே. இது அவனின் தெய்வ நீதியாகும். பாரதி இதனை விளக்கி, ‘வெய்ய கர்மப் பயன்களில் நொந்து நான் மெய் உணர்ந்திடல் ஆகும் என்றாக்கிய தெய்வமே இது நீதி…’ என்று கூறுகிறார்.

வினை அல்லது கன்மம் சேரும் வழிகள் ஆறு. இவற்றை அத்துவாக்கள் என்று சித்தந்தம் கூறும். அத்துவா என்றால் வழி என்பது பொருள். பாரதி இதனை ‘மூல அத்துவாக்கள் எனும் கால்கள் ஆறு’ ஏன்று குறிப்pடுவதைக் காணலாம்.
பலகோடி ஆண்டுகளின்முன் இப்பிரபஞ்சம் சிறு முட்டையாக இருந்து வெடித்துப் பரந்து கோடிக்கணக்கான விண்மீன்களும் கோள்களுமாக இன்று விரிந்துள்ளது. இன்னும் விரிந்து கொண்டு செல்கின்றது. ஆனால், காலப்போக்கில் .இந்த நிலை மாறி, சுருங்கத்தொடங்கி மீண்டும் பிரபஞ்ச முட்டையாக மாறும்.. சென்ற நூற்றாண்டில் வெளிவந்த ‘பெருவெடிப்புக் கொள்கை’ (டீபை டீயபெ வுhநழசல) எனும் விஞ்ஞானக் கொள்கையும் அதளைத் தொடர்ந்தெழுந்த கருத்துக்களும் இதனை உண்ர்த்துகின்றன.

இந்த விஞ்ஞானக் கருத்தைச் சைவத்தின் சாத்திர தோத்திர நூல்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. சைவசித்தாந்தத்தில் மாயை என்பது ஒரு உள்பொருள்; அது பொய்த்தோற்றம் இல்லை. மாயையிலிருந்து அனைத்தும் தோன்றி அதில் மடியும் என்பது சித்தாந்தக் கொள்கை பிரபஞ்சத் தோற்றம் முடிவு குறித்த விஞ்ஞானக் கொள்கையை ஒத்தது இது. எட்டாம் நூற்றாண்டளவில் வந்த மணிவாசகரின் திருவாசகம் இப்பிரபஞ்சத்தின் விரிவு பற்றிக் கூறுகையில், ‘நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன’ என்கிறது. இச்சித்தாந்தக் கருத்து சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ‘இது ஒரு விரியும் பிரபஞ்சம்’ (‘ஐவ ளை யn நஒpயனெiபெ ரniஎநசளந’) என்ற கருத்தாகவுள்ளது.

பிரளய காலத்தில் எல்லாமே மாயையில் ஒடுங்கும் எனச் சித்தாந்தம் கூறுகிறது. மாயை சக்தியில் ஒடுங்க, சக்தி சிவனில் ஒடுங்கும். அதாவது சிவனைத் தவிர அனைத்தும் மறைந்துவிடும். மாயா காரியமான காலமும் மறைந்துவிடும். இச்சித்தாந்த உண்மை பாரதியின் ‘காளியின் மகாபுகழ்’இ ‘ஊழிக்கூத்து’ ஆகிய பாடல்களில் உணர்த்தப்படுகிறது. ‘காலத்தோடு நிர்மூலம் படுமூவுலகமும்’இ ‘...எரியும் கோலம் கண்டே சாகுங் காலம்’ என்பவை இது குறித்த தொடர்கள்.

இறையருள் கிட்டிய ஞானியை இன்ப துன்பங்கள்; பாதிப்பதில்லை. அவன் எதனையும் சிவமாகக் காண்பான். எச்செயலையும் சிவன் செயலாகவே செய்வான். பாரதி தன் ‘ஊழிக் கூத்து’ என்ற பாடலில் ‘சாவு நோவுஞ் சிவனடா! சண்டையும் வாளும் சிவனடா’, என்று பாடுகிறார். வைணவத்தில் வரும் கண்ணனைக்கூட சைவத்திலுள்ள சிவனாகவே அவர் காண்கிறார். அவரின் ‘விநாயகர் நான்மணி மாலை’ என்ற பாடலில் ‘சிவனாம் கண்ணா!’ என்று போற்றுகிறார். இவை சிவனருளில் தோய்ந்த சிவஞானியின் வார்த்தைகள்!

மகாகவி பாரதியார் தலைசிறந்த கவிஞன் மட்டுமல்ல, சிறந்த தத்துவ ஞானியாகவும் திகழ்ந்தார்.

No comments: