நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வீடு வாங்குவோருக்கு புதிய வரி
                                                                                             செய்தி தொகுப்பு கரு
வீடு அல்லது ஏதாவது காணிகள் $500,000 யிற்கு மேலே பெறுமதியுடையனவாயின் அவற்றை வாங்குவோருக்கு புதிய வரி அறவிடப்படும் என காணி நில மந்திரி ரொனி கெலி சென்ற வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தார். சிட்னியில் சராசரி வீடு ஒன்றுக்கு ஏறக்குறைய $200 கூடுதலான வரி செலுத்த நேரிடும். $1 மில்லியன் வீட்டிற்கு $1000 வரை வரி செலுத்த வேண்டும். $600இ000 பெறுமதியுள்ள வீட்டிற்கு $200 வரியும் $1.2 மில்லியன் வீட்டிற்கு $1500 வரியும் செலுத்த வேண்டும்.

இந்த புதிய வரி மூன்று கிழமையில் வெளியாகும் வரவு செலவுத் திட்டத்தில் ஒரு அம்சமாகும் என குறிப்பிட்டிருந்தார். இந்த புதிய வரி யூலை மாதம் 1ம் திகதியிலிருந்து அமுலாக்கப்படும். இந்த வரியை வீடு வாங்குவோர் மட்டும் தான் செலுத்தவேண்டும்.


சுரங்கத் தொழில் மீது விதிக்கும் புதிய வரி

மத்திய அரசு சுரங்கத் தொழில் மீது விதிக்கும் புதிய வரிக்கு எதிராக தான் ஒரு பேராட்டம் நடத்த உள்ளதாக எதிர் கட்சித் தலைவர் ரோணி அபேட் அறிவித்தள்ளார். இவ் வாழ அவுஸ்திரேலியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்குத் தடையாக அமையும் எனவும் உலக பொருளாதார நெருக்கடியில் இருந்த அவுஸ்திரேலியா மீழ உதவிய தொழில் துறையை அழிக்கும் திட்டம் இது எனவும் அவர் சொன்னார். அரசு அதனது புதிய வரவு செலவுத் திட்டத்தில் 2012 ம் ஆண்டு முதல் சுரங்க நிறுவனங்களின்; உச்ச லாபத்தின் மீது 40 வீத வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: