பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - ஆதி பராசக்தி - ச. சுந்தரதாஸ் - பகுதி 15

 .



குடும்ப கதைகளை உருவாக்கி வசனம் எழுதி இயக்கி பல வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன் . இவர் 1971ம் ஆண்டு தன் பாணியில் இருந்து மாறி ஓர் பக்திப் படத்தை உருவாக்கினார் அந்த படம் தான் ஆதி பராசக்தி.


பெரும் பொருட்செலவுடன் பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்து வண்ணப் படமாக ரசிகர்களுக்கு படைத்தார் இதுவே கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கிய முதல் கலர் படமும் ஆகும்அம்பாளின் பரம பக்தரான சுப்பிரமணியம் அமாவாசை அன்று நிலவு வரும் என்று பக்தி பரவசத்தில் சரபோஜி மன்னனிடத்தில் கூறி விடுகிறார் அதனை நம்பாத மன்னன் நிலத்தில் தீயை மூட்டி அதன் மேல் ஊஞ்சல் ஒன்றை கட்டி சுப்பிரமணியனை நிறுத்தி விடுகிறார் அம்பாள் மீது பூரண பக்தி வைத்திருக்கும் சுப்பிரமணியம் அவளை நினைத்து மனம் உருகி பாட தரிசனம் கொடுக்கும் அம்பாள் தன் காதணி ஒன்றை கழற்றி வீச அதில் இருந்து நிலவு தோன்றுகிறது எல்லோரும் அதிசயிக்கிறார்கள் மன்னனோ அதிர்ச்சி அடைந்து சுப்ரமண்யத்திடம் மன்னிப்பு கேட்கிறான் அதோடு அபிராமி பக்தரான அவரை அபிராமி பட்டர் என்று பெயர் சூட்டி மகிழ்கிறான்அபிராமி பட்டர் அரசனுக்கு ஆதி பராசக்தியின் அற்புதங்களை ஒவ்வொரு கதையாக கூறுகிறார் இதுவே படமாக விரிகிறது

தஞ்சையில் அருள் பாலிக்கும் முத்துமாரியம்மன் வெள்ளைக்கார தளபதிக்கு தான் யார் என்று உணர்த்துவது பேச முடிய சிறுவனான குமரகுருபரனுக்கு குரல் கொடுத்து பாட வைப்பது உண்மையான பக்தியை தவிர வேறு ஏதும் அறியத அப்பாவி மீனவன் வீட்டுக்கு வருகை தந்து பொங்கல் உண்பது தட்சன் மகளாகி சிவனை மணந்து தட்சனின் ஆணவத்தை அழிப்பது என்று புராணங்களில் இருந்து சில கதைகளை தெரிவு செய்து படமாக்கி இருந்தார் கே எஸ் ஜி.



ஆரம்பத்தில் மீனவன் கதை படத்தில் இல்லாத போதும் ஜனரஞ்சக காட்சியும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சிலர் கூறியதால் மீனவன் கதை படத்தில் சேர்க்கப்பட்டது .ஆனால் இந்த காட்சியே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மீனவனாக வரும் சுருளிராஜன் நடிப்பு பலரையும்ஈர்ந்தது . அதே போல் தட்சனாக வரும் எஸ் வீ ரங்காராவ் தன நடிப்பால் உண்மையான தட்சனை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் சிவனை பிரிந்த சக்தி தன் மகளாக தன்னிடம் இருப்பதால் தான் விரும்பும் ஒருவனுக்கே அவளை மணமுடித்து கொடுத்து புதிய சிவன் ஒருவனை தன்னால் உருவாக்க முடியும் என்று அவர் கொக்கரிப்பது அமர்க்களம் மகிஷாசுர வதம் அதனை முன்னிட்டு கொண்டாடப் படும் நவராத்திரி விரதமும் படத்தில் காண்பிக்கப்படுகிறது



ஆதி பராசக்தியாக எஸ் வரலட்சுமியும் பார்வதியாக ஜெயலலிதாவும் முத்துமாரியம்மனாக பத்மினியும் பாத்திரங்களை ஏற்றிருந்தார்கள் அபிராமி பட்டராக வரும் எஸ் வீ சுப்பையா உணர்ச்சி பிழம்பாகவே மாறி இருந்தார் இவர்களோடு ஜெமினி கணேசன் சுந்தரராஜன் நம்பியார் முத்துராமன் நிர்மலா ஓ எ கே தேவர் எ கருணாநிதி வாணிஸ்ரீ எஸ் வி சகஸ்ரநாமம் ஜி சகுந்தலா ராகினி இ ஆர் சகாதேவன் என்று ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர்



படத்தின் அரங்க அமைப்புகளை அமைத்த பி நாகராஜன் பாராட்டுக்குரியவர் அதே போல் தந்திர காட்சிகளை ஒளிப்பதிவு செய்த ஜீ கே ராமுவும் ஏனைய காட்சிகளை படமாக்கிய கே எஸ் பிரசாத்தும் பாராட்டுக்குரியவர்கள் பாடல்களை கவிஞர் கண்ணதாசன் அருமையாக எழுதி இருந்தார் சொல்லடி அபிராமி, தான் ஆட்சி செய்து வரும், ஆத்தாடி மாரியம்மா, வருகவே வருகவே ஆகிய பாடல்கள் குறிப்பிட தக்கவை ஒரு காலத்தில் சீர் திருத்தப் பாடல்களையே எழுதி வந்த பழம் பெரும் கவி உடுமலை நாராயண கவி படத்தின் ஆரம்ப பாடலான ஆதிபராசக்தி எனும் அம்மனின் புகழ் பாடும் பாடலை புனைந்திருந்தார் 50ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆதிபராசக்தி வெற்றிப்படமாக ஓடி தமிழகத்திலும் இலங்கையிலும் ரசிகர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டது.




No comments: