கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பதினொன்று ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ... அவுஸ்திரேலியா

                                  

    தென்னையினைப் பிள்ளை என்றே யாவரும் அழைத்து

மகிழ்வா
 ர்கள். அப்படிக் கற்பகதருவான பனையினை அழைத்து மகிழ்வதும் இல்லை. ஆனால் கற்பகதரு என்று வியந்து மட்டுமே  நிற்பதையே காணுகிறோம்.தமிழ் மூதாட்டி ஒளவைகூட தென்னையினைப்  பார்த்து " தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் " என்று நட்பினைப் பற்றிச் சொல்லும் பொழுது - மூது ரையில் சொல்லி தென்னையினை முன்னிறுத்திக் காட்டுகிறார். நாலடியாரோ வேறு விதமாய் காட்டுகிறது. நாலடியாரின் நோக்கில் தென்னையை விடப் பனையே சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

 

கடையார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையார் தெங்கின் அனையர் - தலையாயர்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே
தொன்மை யுடையார் தொடர்பு 

    தென்னையைவிடப் பனைதான் நட்பு என்று வரும் பொழுது உச்சத்தில் நிற்கிறது என்று நட்பின் நிலைபற்றி சொல்லும் நிலை யில் நாலடியார் இப்படிப் பார்க்கிறது.பாக்கு மரத்துக்கு தினமும்


தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போது தான் அது பயன்தரும். நாளும் உதவினால் நட்புடன் இருப்பவர் கமுகு போல்வர். இது கடை நட்பா கும்.இடையிடையே நீர்பாய்ச்சி வந்தால்த்தான் தென்னை உதவும். அவ்வப்போது உதவி செய்தால்த்தான் உதவிடுவார் போல.அந்த நட்பை இடை நட்பு எனலாம். ஆனால் பனை அப்படியல்ல. ஒரு முறை செய்த நன்மையினை நினைத்து நட்புப் பாராட்டும் நட்பு டையார் போல் இருப்பதுதான் பனை.பனை விதையினை வைத்து ஒருதரம் நீர் ஊற்றி விட்டால் அது தனது காலம்வரை உதவிய படியே இருக்கும் என்று நாலடியார் பார்க்கும் பார்வை கற்பகத ருவின் முக்கியத்துவத்தை எப்படிக் காட்டுகிறது பார்த்தீர்களா !

   தென்னையினைப் பிள்ளை என்று போற்றி வீட்டில் நீரூற்றி வளர்க்கிறோம். தென்னையும் பலனைக் கொடுக்கிறது. தென்னை ஓலையாபனை ஓலையா கூடிய பயனை நல்கிறது என்று பார்க்கும் பொழுது - பிள்ளையெனப் பேணும் தென்னையின் ஓலையைவிட - முரட்டு மரம் கருக்குகள் நிறைந்த


மரம் . கறுத்த மரம் என்றெல் லாம் எண்ணி நிற்கும் பனை மரத்தின் ஓலைகள் பல மடங்கில் உதவி நிற்பதைக் காண்கிறோம். தென்னையின் ஓலையில் கருக்கு இல்லை. அது மென்மையாய் இருக்கும்.தென்னை ஓலையின் பயன் பாடு என்பது ஒரு குறிப்பிட்ட அளவுடன் நின்றுவிடுகிறது. ஆனால் பனை ஓலையின் பயன்பாடு - அதன் ஆயுட்காலம் முடிந்த பின்பும் பயன் கொடுத்தே நிற்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய தென லாம்.

   பனையும் தென்னையும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. ஆனாலும் பனை கொடுப்பதுபோல் தென்னையால் கொடுத்திட முடி யாது.தென்னையின் நிலை வேறு. பனையின் நிலை வேறு. தென் னையின் ஓலையால் வீடு வேய்கிறோம். பனையின் ஓலையினா லும் வீடு வேய்கிறோம். தென்னையின் ஓலைகளை அப்படியே எடுத்து வீடு வேய்ந்திடப் பயனாக்கிட முடியாது. அதனைக் காய விட்டு பின் நீரில் ஊறவிட்டு பின் அதனை பின்னி கிடுகு என்னும் நிலைக்குக் கொண்டுவந்த பின்பே பயன்படுத்த முடிகிறது. ஆனால் பனையின் ஓலையினை சற்று வதங்க விட்ட


பின்னர் ஓலையின் மட்டைகளை நீக்கியவுடன் அவற்றை அப்படியே வீடு வேய்வதற்கு பயன்படுத்தி விடுகிறோம். கிடுகினால் அடைக்கும் வேலிகளை விட பனை ஓலைகளினால் அடைக்கும் வேலிகள் மிகவும் பாதுகாப்பா னதாகவும் கருதப்படுகின்றன. தென்னையின் ஓலைகளில் பன்ன வேலைகள் செய்வது என்பது பொருந்தாமலே இருக்கிறது. பனை ஓலைகளே பன்ன வேலைகளுக்கு பெரும் பயன் உள்ளவையாக அமைகின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

   தென்னையின் ஓலைகள் ஒரு குறிப்பிட்ட அளவுடன் தனது பயனை நிறுத்தி விடுகிறது.ஆனால் பனையின் ஓலையின் நிலையோ பன்மடங் காகி - ஒரு கைத்தொழிலுக்கான மூலப்பொருளாய் ஆகி - பல பேருக்குத் தொழிலினையும் அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கான வருவாயினையும் வழங்கும் நிலையில் உதவி நிற்கிறது என்பதையும் கருத்திருத்தல் அவசி யமேயாகும். பனையின் ஓலைகளைக் கொண்டு ஆடம்பரப் பொருடகள் முதல் அவசியமான பொருட்கள்வரை ஆக்கப்படுகின்றன.பனை ஓலை யினாலான பல பொருட்கள் விவசாயத்திலும் துணையாக வந்து நிற்கின் றன என்பதும் நோக்கத்தக்கதாகும்.

  படுக்கப் பாய் ஆகிறது.குழந்தைகளை எண்ணெய் வைத்து


சூரிய ஒளியில் வைப்பதற்கு நல்ல ஆரோக்கியாமான தடுக்காகிறது. இன்று இந்த நடைமுறை கிராமங்களில் இருப்பதைக் காணமுடிகிறது. குழந்தைகளுக்கு தலை முதல் கால்வரை எண்ணெய் தடவி தடுக்கு என்னும் பெயர் தாங்கி நிற்கும் பனை ஓலையினாலான சின்னப் பாயில் முற்றத்தில் குழந்தையை வைப்பார்கள். குழந்தையும் - கையையும் காலையும் ஆட்டி அசைந்து இருந்து கொடுக்கும் காட்சியை பார்ப்பதற்கு மிகவும் பரவசமாய் இருக் கும்.அந்தப் பரவசத்துக்கு கைகொடுக்கும் பனை ஓலைத் தடுக்கினை நினை த்துப் பாருங்கள் ! எத்தனை ஆனந்தமான உணர்வு உள்ளத்தில் வரும் !     நெற்கதிர்களை சூடு மிதிக்கவும் நெல்மணிகளை வெய்யிலில் காய வைக் கவும் களப்பாய் என்னும் பெயரில் கைகொடுத்தும் நிற்கிறது பனை ஓலை. களம் என்றாலே வயலும், சூடு மிதிப்பதும்மாடுகளும்நெற்கட்டுகளும் அங்கு நிற்கும் ஆண்களும் பெண்களும்தான் நினைவில் வந்து நிற்கிறது

அல்லவா ! களத்தில்
  சூடு மிதித்து வந்த நெல்மணிகளை வீட்டுக்கு எடுத் துச் செல்வதற்கு பெரிய கடகமாய் பனை ஓலை அமைவதும் நோக்கத்தக் கது.கடகம் என்றால் அதில் பலவகைகள் இருக்கின்றன.பெரிய கடகங்க ளும் இருக்கின்றன. சிறிய கடகங்களும் இருக்கின்றன. கடகம் என்றாலே அது பனை ஓலைக்கு மட்டுமே சொந்தமான பொருள் என்று தான் சொல்ல வேண்டும்.தென்னை ஓலையினால் கடகம் என்பதை எண்ணியே பார்க் கவே  முடியாது. பாரங்களைத் தாங்கும் நிலை தென்னோலை பெற்றிருக் கவில்லை.தூரமானாலும் பாரத்தைத்தாங்கி சுமந்து செல்லும் வலிமையி னைப் பனை ஓலைதான் பெற்றிருக்கிறது என்பது மனங்கொள்ளத் தக்க தேயாகும்.

  நெல்லினைக் குற்றி அதனை அரிசியாக எடுக்கும் பொழுதும்


அந்த அரிசி யினை  நிரப்பி வைக்கவும் கடகங்கள் வந்து நிற்கும்.அரிசியை உரலில் இட்டு இடித்து மாவாக்கி நிற்கும் வேளையிலும் மாவினை வைக்கும் பாத்திரமாய் கடகங்கள் மாறியே விடுகின்றன.அரிசியைச் சோறாக்கி வயலில் தோட்டத்தில், வேலை செய்யும் அப்பாவுக்கோ.  கணவனுக்கோமாமனுக்கோ எடுத்துச் செல்வதற்கும் பனை ஓலையினால் ஆகிய அழ கான ஓலைப் பெட்டிகளே வந்து நிற்கும். பனை ஓலைப் பெட்டிகளில் கொண்டு செல்லும் உணவுகள் சுவையாகவும்,நல்ல வாசத்தைத் தருவன வாகவும் இருக்கும். இவையெல்லாம் அனுபவித்தவர்களுக்கே தெரிய வரும்.வயல் வரப்புகளில் கொய்யகம் வைத்த கண்டாங்கிச் சேலையி னைக் கட்டிக்கொண்டு தலையிலே பனை ஓலையினாலாகிய ஓலைப் பெட்டியை பெண்கள் கொண்டு

செல்லும் காட்சியை ஒரு தரம் எண்ணிப் பாருங்கள்.என்னதான் நாகரிகங்கள் வந்து குவிந்தாலும் இந்த காட்சிக்கு ஈடு இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

  தோட்டத்தில் நீரிறைக்கப் பட்டை என்னும் நிலையில் பனை ஓலை வந்து விடும். கிணற்றில் நீரினை அள்ளி தோட்டத்து வாய்க்காலுக்கு நீரினைப் பாய்ச்சிட உதவிடும் பட்டை மிகவும் பெரியதாய் இருக்கும்.அதில் கொள்ளப்படும் நீரானது வீச்சுடன் ஓடி வாய்க்கால் வழியே பயிர்களின் பாத்தியை நிரப்பி நிற்கும் காட்சியை அனுபவித்தர்களுக்கு மட்டுமே தெரியும்.நீரிறைக்கும் இயந்திரங்கள் வருமுன்னர் - அதிகளவு நீரினை கிணற்றினின்றும் மொண்டு மேலே இலகுவாய் கொண்டுவர பனை ஓலைப் பட்டைகளே கைகொடுத்தன


என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். பயிரிடப்பட்ட பயிர்களுக்கு ஏற்றபடி நீரினை வழங்குவதற்கும் கைப்பட்டை என்னும் வடிவில் சிறிய பட்டையும் பனை ஓலையினால் ஆக்கப்பட்டது.

  தோட்டத்தில் காய்த்துக் குலுங்கும் காய்கறிகளைப் பிடிங்கிப் போடுவத ற்கும் பனை ஓலையினாலான பெட்டிகள் உதவி இருக்கின்றன.குரக்கனை அறுவடை செய்து அதன் தாள்களிலிருந்து மணிகளை வேறாக்குவார்கள். அங்கும் களப்பாய் வந்துவிடும். களப்பாயிலிருக்கும் குரக்கன் மணிகளை அளந்து எடுப்பதற்கும் கூட பனை ஓலையினாலாகிய பெட்டிகளையே பய ன்படுத்தினார்கள்.குரக்கன் மணியினை மாவாக்குவதற்கு திரிகை என்பது பயன்படுத்தப்படும்.அந்தத் திருகைக்கல் வைத்திருக்க அடித்தளமாய் பனை ஓலையினால் ஆகிய வட்டச் சுளகு அங்கே கைகொடுக்கும். அரைத்த குரக் கன்

மாவினால் பிட்டவிக்க பயன்படும் நீத்துப் பெட்டியும் பனை ஓலை தான். அவித்த குரக்கன் பிட்டினை இறக்கி வைக்க வந்து நிற்பதும் பனை ஓலைப் பெட்டிதான். அந்தப்பிட்டுடன் இணைத்து சாப்பிட இனிப்பாய் நிற் கும் குட்டானும் பனை ஓலையின் பாதுகாப்பில்த்தான் இருக்கும் என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.     
 சமையல் கட்டில் பயன்படுத்துவதற்கு என்று ஒரு பெட்டி இருக்கும் அதன் பெயர் அஞ்சறைப் பெட்டியாகும்.அஞ்சு அறைகள் கொண்டதாய் பனை ஓலையில் அந்தப் பெட்டியை இளைப்பார்கள். அந்தப் பெட்டிக்கு பொருத்தமாய் மூடியும் இருக்கும்.இதில் சமையலுக்கான முக்கிய கறிச் சரக்குகளை வைத்திருப்பார்கள்.காய்கறிகளை, அரிசியை, பருப்பு வகை களை பனை ஓலைப் பெட்டிகளில் வைக்கும் பொழுது உடலுக்கு ஆரோக் கியமாகவும்,சுவையினைக் கொடுப்பதாகவும் இருப்பதாய் -சொல்லப்படு கிறது.
     
      தடுக்காவேன் குழைந்தைக்கு
      சமைத்த உணவினை
      எடுப்பதற்கும் கொடுப்பதற்கும்
      என்னாளும் துணையாவேன்
      படுத்திருக்கப் பாயாவேன்
      பனங்குட்டான் உறையாவேன்

      நிலத்தில் பலகாயவிட
      நீள்களப்பாய் ஆகிடுவேன்
      நீரிறைக்கப் பட்டையாவேன்
      நெல்சுமக்க கடகமாவேன் 
      புட்டவிக்க உதவிடுவேன்
      புட்டையேந்த வந்திடுவேன்
      தட்டாவேன் சுளகாவேன்
      சகலதுமாய் நானாவேன் 
      தென்னோலை உதவிடினும்
      என்போல அதுவிருக்கா
      நானென்றும் மக்களுக்காய்
      நாளுமே உதவிடுவேன் 
      பனையோலை என்றெண்ணி
      பரிகாசம் செய்யாதீர் !

No comments: