ஆரோக்கியம் என்பது ஆனந்தமான வாழ்வாகும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...  அவுஸ்திரேலியா

 

உடல்நலம்மனநலம்சமூகநலன் சிறப்பாய் இருந்தால் ஆரோக்கியம் என்பது அழகாக மலர்ந்துவிடும். ஆரோக்கியம் காத்திட வேண்டும் என்பதுதான் உலக சுகாதார அமைப்பினது முக்கிய நோக்கமாகும். ஆரோக்கியம் என்பதுதான் உலகத்தின் அத்திவாரம் ஆகும். " நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த நோயற்ற வாழ்வினை வாழ்கிறோமா என்பதுதான் பெருங் கேள்வியாய் தொக்கி நிற்கிறது. நோயற்ற சமூகம் என்பது உலகம் முழுவதும் வரவேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் தலையாய நோக்கம் எனலாம். அதற்காக உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் எவை எவை முக்கியதுவத்துக்கு உட்படுத்தப் படவேண்டுமோ அவையனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முயன்று வருகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

  உலகில் எந்தக் கோடியில் மக்கள் வாழ்ந்தாலும் - அவர்கள் எந்த இனமாக , எந்த மதமாகஎந்த கலாசாரம் பண்பாடுகளை உடையவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் உலகப் பந்திலே உலக மக்கள் என்னும் வடத்துக்குள்ளேதான் வருகிறார்கள். நிறத்தால்உருவத்தால் வேறு பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் உடலும் இருக்கிறது. அந்த உடலை இயக்க உயிரும் இருக்கிறது. அதனால் அவர்கள் அனைவரும் நலத்துடன் வாழ்ந்தால் உலகமே நலமாக இருக்கும் என்பதுதான் முக்கியம். இக்கருத்தை மூலமாக்கியே உலக சுகாதார அமைப்பு " உலக சுகாதாரத்தை மையமாக்கி உலகசுகாதார தினத்தை " வெளிச்சமிட்டுக் காட்டுகிறது எனலாம்.

  உலகத்தின் நல் வாழ்வுக்கான மன்றத்தின் கூட்டம் 1948 ஆம் ஆண்டில் இடம் பெற்றது. அந்தக் கூட்டத்தில் ஏப்ரல் மாதத்தில்வரும் 7 ஆந் திகதியை உலகத்தின் சுகாதாரத்துக்கான தினமாக அதாவது நலவாழ்வு தினமாகக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. தீர்மானிக்கப் பட்ட காலத்தில் இருந்து வருடந்தோறும் அக்காலத்தில் உலகினுக்கு என்னவகையான சுகாதார நலன் அவசியமோ அதனை மையப்படுத்தி உலகினுக்கு விழிப்புணர்வு அதாவது உலகமக்கள் மத்தியில் நல்லதோர் விழிப்புணர்வை நலன் காக்கும் வகையில் ஏற்படுத்தி வருகிறது என்பதை நாமனைவரும் விளங்கிக் கொள்ளுதல் அவசியமாகும்.

  நலவாழ்வு என்னும் பொழுது அதில் பல விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன. உடல் நலம்உளநலம்சுற்றுச்சூழல் நலன்இவை அனைத்தையும் அடக்கியதாய் விரிவடையும் சமூகநலன். இவ்வாறு விரிவடையும் நலனானது பல சவால்களுக்கு உட்படுவதையும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது. " சவாலே சமாளி " என்பதனை உலக சுகாதார அமைப்பான மிகவும் கவனத்தில் கொண்டுதான் தனது செயற்பாடுகளை ஆற்றி வருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

  நாளும் பொழுதும் உலகில் பலவிதமான நோய்கள் வந்தபடியே இருக்கின்றன. இந்த நோய்கள் நாடுகளின் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்பக் கூடியும் குறைந்தும் காணப்படுகின்றன. தாக்கத்தையும் ஏற்படுத்தியே வருகின்றன. ஆனால் கூடவோ குறையவோ மக்கள் உலகில் இப்படியான நோய்களினால் துன்பப்படுகிறார்கள் என்பதுமட்டும் உண்மையேயாகும்.

  அம்மை நோய்காசநோய்தொழுநோய்பாலியல் நோய்மனநோய்இதய நோய்சர்க்கரைநோய்மறதி என்னும் நோய்டெங்கு நோய்சிக்கின் குனியா நோய்செங்கமாரி நோய்வாந்திபேதி நோய்புற்று நோய்தற்போது கொரனா என்னும் கொடிய நோய் - இப்படி நோய்களின் வருகை காலத்துக் காலம் உலகை உலுக்கியபடியே இருக்கிறது. பல உயிர்களைப் பலி எடுத்தபடியே இருக்கிறது. இப்படி நோய்கள் வருகின்ற வேளை உலக சுகாதார அமைப்புக்கு வேலைப்பழு கூடிவிடுகிறது எனலாம்.

  இப்படியான காலங்களில் இந்த நோய்கள் தொடர்பாக உலகமக்கள் மத்தியில் விழிப்புணர்வை  ஏற்படுத்தவும்நாடுகளுக்குகிடையே ஆலோசனைகளை வழங்கவும்விஞ்ஞானிகளைஆராய்ச்சியாளர்களை நோய்களுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க ஊக்கப்படுத்தவும் உலக சுகாதார அமைப்பானது முன்னிற்கி றது   என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    உலகில் இருக்கின்ற மக்கள் அனைவருமே நலமான வாழ்வினை வாழவேண்டும் என்னும் கருத்தானது மிகவும் முக்கியனாதாகும்.அந்தக் கருத்தினை வலியுறுத்தும் அமைப்பாக உலக சுகாதார அமைப்பானது விளங்குகின்றது என்பது உண்மையாக இருந்தாலும் - அந்த எண்ணக் கருவானது உலக மக்கள் அனைவரதும் உள்ளத்திலும் பதிந்தால்த்தான் உலகம் நலமான உலகமாக அமையும் என்பதுதான் உண்மை எனலாம்.

  அமைப்பின் நோக்கம் சரியாக உயர்வாக இருந்தாலும் - அந்த நோக்கம் நிறைவேற உலக மக்களின் மனங்கள் திருந்த வேண்டும். சுகாதாரம் என்பது வீட்டிலிருந்தே ஆரம்பமாகிறது. தனி மனித சுகாதாரம் குடும்பத்துக்கு ஆதாரம் ஆகிறது. வீட்டின் சுகாதாரம் கிராமத்தின் சுகாதாரம் ஆகிறது. கிராமத்தின் சுகாதாரம் நகரத்தின் சுகாதாரம் ஆகிறது.நகரங்களின் சுகாதாரம் நாட்டின் சுகாதாரம் ஆகிறது. நாடுகளின் சுகாதாரம் உலகத்தின் சுகாதாரமாக விரிவடைகிறது. இதனையே உலக சுகாதார அமைப்பானது விரும்புகிறது. இதனை உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கின்ற மக்கள் உணர்ந்தால் அதுதான் சுகாதாரத்தின் வெற்றி என்று கொண்டாடி மகிழலாம் அல்லவா !

      வெள்ளப் பெருக்கால்போரினால்தொழிற்சாலைகளின் பெருக்கத்தால்நோய்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்ல - நீரில் ஆராய்ச்சிநிலத்தில் ஆராய்ச்சிநீண்ட வானில் ஆராய்ச்சிமலையில் ஆராய்ச்சிமடுவில் ஆராய்ச்சிஎன்று ஆராய்ச்சிகள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுத்தப்படும் பலவிதமான இரசாயானங்கள் பலவற்றால் ஏற்படும் தாக்கங்கள் விதம் விதமான நோய்களுக்கு வடிகாலாய் இருப்பதையும் கண்டு கொள்ள முடிகிறது. ஒருபக்கம் நவீனத்தின் பெருக்கம் ! அதனால் நவீனமான நோய்களின் அணி வகுப்பு ! விஞ்ஞானம் விந்தைகளுக்கு வித்துத்தான் ; ஆனால் விபரீதங்களுக்கும் அல்லவா வித்தாகி விருட்சமாய் விரிகிறதே ! 

    ஆனந்தமாய் வாழவே அனைவரும் விரும்புகிறோம். அதேவேளை ஆடம்பரம்தான் ஆனந்தம் என்னும் கருத்தும் பரவி இருப்பதையும் காண முடிகிறது. ஆனந்தம் என்னும் நிலை எப்பொழுது ஏற்படுகிறதென்றால் எல்லா நலன்களும் அமையும் பொழுதான் என்பதை மட்டும் மறந்து விடுகிறோம். எல்லா நலன்களும் அமைதல் வேண்டும் என்பதுதான் உலக சுகாதர மைப்பின் தலையாய நோக்கமாகும். அது கிடைக்கிறதா என்பதுதான் பெரும் சவாலாய்  இருக்கிறது எனலாம் !

    " சுத்தம் சுகம் தரும் " , " கந்தையானாலும் கசக்கிக் கட்டு கூழானாலும் குழித்துக் குடி " , " அமுதமேயானாலும் அளவோடு உண்ணு " , "  அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு " , " பசிக்கும் முன்னே புசிக்காதே ", " கண்டதை எல்லாம் உண்ணாதே ", " உண்டியைச் சுருக்கு உடலைப் பேணு ", " வண்டி பெருத்தால் வந்திடும் வியாதி ", " சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம் " இவையெல்லாம் சுகாதாரத்தை வலியுறுத்தும் பொன்னான வாங்கியங்கள். தமிழில் இப்பொன்னான வாக்கியங்கள் இருப்பதுபோல மற்றைய உலக மொழிகளிலும் இப்படியான கருத்துடை வாக்கியங்கள் நிறையவே இருக்கின்றன.

  இந்த வாக்கியங்களை எந்த ஒரு சுகாதார அமைப்புமே வெளியிடவில்லை. இவையனைத்தும் காலம் காலமாய் வாழ்வோடு வளர்ந்து வந்த மொழிகள் ஆகும். இதனை வழங்கியவர்கள் அனுபவமிக்க எங்களின் முன்னோர்களே ஆவர். அனுபவமிக்க இப்பொன்மொழிகளை வாழ்விலே அனைவரும் கையாண்டால் ஆரோக்கியம் அனைவருதும் வீட்டுக்கதவை தட்டியபடி இருக்கும் அல்லவா ?

    பிறப்பு உண்டேல் இறப்பும் உண்டு என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் இருக்கும்வரை சிறப்பாய் இருக்கவேண்டும்.கிடைத்த வாழ்வினை பாழ்படுத்தும் வகையில் வாழ்துவிடக் கிட்டாது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது வாழ்க்கை அல்ல.வாழ்க்கை என்பது ஒருமுறைதான் வரும். விட்டால் விட்டதுதான். ஆரோக்கியத்தை இழந்தால் அனைத்துமே இழந்ததாகவே ஆகிவிடும்.

  மயக்கும் மது வாழ்க்கைக்கு அவசியமா ? வண்ண வண்ணச் சுருட்டுகள் வாழ்வினுக்கு தேவையா ? வினோதமான போதை மாத்திரைகள்போதை ஊசிகள் நிச்சயம் தேவைதானா ? கணநேர இன்பத்தைத்தருகின்ற விபசாரம் தேவைதானா ? அந்த விபசாரத்தின் விளைவால் வருகின்ற வியாதிகளை நாடுவது வாழ்வினுக்கு அவசியம்தானா ? ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டியதே ! " ஊரைத்திருத்த முதல் உன்னைத் திருத்து " , " உலகைத் திருத்த முதல் உன்னையே திருத்து " இவையெல்லாம் அறிந்திருந்திருந்தும் விட்டில் பூச்சிகளால் வீழ்ந்து மடிதல் முறைதானா ?

    உலக சுகாதார அமைப்பு என்பது ஒரு நல்வழி காட்டுவதற்கு அண்மையில் தோற்றுவிக்கப் பட்டதாகும். ஆனால் எங்களின் முன்னோர்கள் வழங்கிவிட்டுச் சென்ற அத்தனை நலன்சார்ந்த விடயங்களுமே மிகப்பெரிய சுகாதார அமைப்பேயாகும். உலக சுகாதார தினமாக ஏப்ரல் ஏழாம் நாளைகொண்டாடி மகிழுவோம். ஆனால் ஒவ்வொரு நாளையுமே சுகாதாரத்துக்கான நாளாக அனைவருமே எண்ணினால் உலகின் சுகாதாரம் பட்டொளிவீசி சுகாதாரக் கொடி விண்ணினைத் தொட்டு நிற்கும் அல்லவா !


No comments: