இலங்கைச் செய்திகள்

 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனக் கடிதம்

20ஆவது திருத்தத்திற்கு அமைய நாட்டிற்கு முழுமையான புதிய அரசியலமைப்பு

நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட சிவாஜிலிங்கம் கைது

விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ்

கைதான சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் செப். 23 வரை தடுப்பில்

விக்கி - டெனிஸ் விவகாரம்; இருதரப்பு புரிந்துணர்வு இன்மையே இத்தனை நாள் தாமதத்துக்கு காரணம்

ஷானி அபேசேகரவுக்கு ஒக். 02 வரை வி.மறியல் நீடிப்பு

கடவுச்சீட்டு உள்ளிட்ட இரகசிய ஆவணங்கள் அச்சிடுவதில் மாற்றம்

வாகனங்கள் மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்கள் இறக்குமதி தடை

மோடியின் 70 ஆவது பிறந்த தினம்: பிரதமர் மஹிந்த தொலைபேசியில் வாழ்த்து

யாழ். மாவட்ட வீட்டுத்திட்ட பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு


12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனக் கடிதம்

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

பன்னிரெண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (14) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள்     முன்னர் வகித்த பதவி
01. டபிள்யூ.ஏ. பெரேரா - மாவட்ட நீதிபதி
02. திருமதி சீ. மீகொட - மாவட்ட நீதிபதி
03. செல்வி ஏ.ஐ.கே. ரணவீர - மாவட்ட நீதிபதி
04. செல்வி கே.எஸ்.எல். ஜயரத்ன - பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி
05. ஆர்.எஸ்.ஏ. திஸாநாயக்க - நீதவான் நீதிமன்ற நீதிபதி
06. டபிள்யூ.எம். தல்கொடபிட்டிய - மாவட்ட நீதிபதி
07. W W.M.R.C.P. குமாரி தேல - மாவட்ட நீதிபதி
08. எச்.எஸ். பொன்னம்பெரும - மாவட்ட நீதிபதி
09. செல்வி எஸ்.ஐ. காலிங்கவன்ச - மேலதிக மாவட்ட நீதிபதி
10. டி.ஏ.ஆர். பத்திரண - நீதவான் நீதிமன்ற நீதிபதி
11. திருமதி என்.டி. விக்ரமசேகர - சிரேஷ்ட அரச சட்டத்தரணி
12. திருமதி A.G.U.S.N.K. செனவிரத்ன - சிரேஷ்ட அரச சட்டத்தரணி

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

நன்றி தினகரன் 


20ஆவது திருத்தத்திற்கு அமைய நாட்டிற்கு முழுமையான புதிய அரசியலமைப்பு

ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரமென தவறான பிரசாரம்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கமைய நாட்டிற்கு முழுமையான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டியது அவசியமென கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். விடயங்களை ஆழமாக ஆராய்ந்து அரசியலமைப்பை தயாரிக்க வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர்,

மக்கள் ஆணையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டி யவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 20வது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரம் பெற்றுக்கொடுக்கப்படுவதாகவும் அது ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சில தரப்பினர் தெரிவித்து வருவது தவறான சிந்தனையாகும்.

20வது அரசியலமைப்பு திருத்தம் நாட்டின் அரசியல் யாப்பை மாற்றுவதற்கான முதலாவது நடவடிக்கையாகும்.

காலத்திற்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படவேண்டும். முழுமையான அரசியலமைப்பு தயாரிப்பதானது முக்கியமானது என்றும் அதற்காக அனைவரினதும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதும் அவசியமெனவும் தெரிவித்துள்ள அமைச்சர் அதற்காக சில காலம் எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டு அதற்காக நாம் முழுமையான காலத்தை எடுத்துக்கொள்ள முடியாததால் 20வது அரசியலமைப்பு திருத்தம் அவசியமாகிறது.

அரசாங்கமே அரசியலமைப்பை முன்வைக்கின்றது. அதற்கு அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் அதனை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கம் முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. அதேவேளை அது தனி நபரொருவரினால் தயாரிக்கப்பட்டது அல்ல என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தலைவருக்கு நாட்டின் பொறிமுறையை தயாரிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் உரிமை இருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக மனிதவள அபிவிருத்திக்கு அவசியமான ஐந்து நிறுவனங்களை இணைத்து ஒரு அமைச்சின் கீழ் அதற்கான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட சிவாஜிலிங்கம் கைது

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் கோப்பாயில் நேற்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். திலீபனின் 33ஆவது நினைவு தினம் நேற்று (15) அனுஷ்டிக்கப்பட்டது நினைவு தினத்தை அனுஷ்டிக்க பொலிஸார் யாழ் நீதிமன்றத் தில் தடை உத்தரவை பெற்றிருந்தனர்.

இந்நிலையில், சிவாஜிலிங்கம் கோண்டாவில் பகுதியில் உள்ள சிறி சபாரத்தினத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய போதே, கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக அறிய வருகிறது.   யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - நன்றி தினகரன் விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ்

விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ்-Condemn of Court Case Against CV Vigneswaran Terminated

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், எடுத்துக் கொள்ளப்பட்டபோது, முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், ஓய்பு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, சீ.வி.விக்னேஸ்வரன் எம்.பி. உள்ளிட்ட இருவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

சீ.வி. விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், கே. சிவனேசன் ஆகியோர், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் வகையில் தன்னை அமைச்சராக செயல்படுவதைத் தடுத்ததாக, முன்னாள் வட மாகாண உறுப்பினர்  பி. டெனீஸ்வரன், குற்றம் சாட்டியிருந்தார்.

இதன்போது, சீ.வி. விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டை வாபஸ் பெறுவராயின், தனது கட்சிக்காரர் இவ்வழக்கு தொடர்பில் உடன்பாட்டுக்கு வர விரும்புவதாக, பி. டெனீஸ்வரன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சுரேன் பெனாண்டோ மன்றில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த, சீ.வி. விக்னேஸ்வரன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, கே. கனகேஸ்வரன், தனது கட்சிக்காரர் அதற்கு உடன்படுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

முதலமைச்சராக இருந்த சி.வி. விக்னேஸ்வரன், ஊழல் குற்றச்சாட்டுகள் முன் வைத்து வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களை பதவி விலக்கிய போது பி. டெனீஸ்வரனையும் பதவி விலக்கியிருந்தார். இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு குறித்த அமைச்சுப் பதவியை மீண்டும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் விக்னேஸ்வரன் அதனை மேற்கொள்ளாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் விசாரணைக்கு அமைய, முன்னாள் முதலமைச்சர் குற்றவாளியாக இனம் காணப்படுவதற்கே அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும், அவ்வாறு அவர் குற்றவாளியாக இனம் காணப்பட்டால் சிறைத் தண்டனைக்கு உள்ளாக வேண்டி ஏற்படலாம் என்பதை  கருத்தில் கொண்டு, வழக்கை வாபஸ்பெறுமாறு கோரி பலரும் தன்னிடம் கோரிக்கை விடுத்த நிலையில், நான் எதிர்பார்த்த நீதி, எனக்கான நியாயம் கிடைத்தமையால் இனத்தின் நலன் கருதி முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான வழக்கை வாபஸ்பெறுவதாக, டெனீஸ்வரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் கைதான சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும்  தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவுகூர்ந்தமை உள்ளிட்ட குற்றசாட்டின் கீழ்  யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை மன்று கடுமையாக எச்சரித்து 2 இலட்ச ரூபாய் கொண்ட சரீரப் பிணையில் விடுவித்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்று (15) வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராயில் நினைவேந்தல் நிகழ்வை செய்திருந்தார். அதனை அறிந்த கோப்பாய் பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சிவாஜிலிங்கத்தையும் அவருக்கு வாடகைக்கு முச்சக்கரவண்டியைச் செலுத்திய சாரதியையும் கைது செய்தனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான லெப்டினன்ட் கேணல் திலீபனை, நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவுகூர்ந்த குற்றச்சாட்டின் கீழ் இருவருக்கும் எதிராக மன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

சந்தேக நபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணிகளான என். சிறீகாந்தா, வி. திருக்குமரன் உள்ளிட்ட 8 சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர்.  அதனை தொடர்ந்து  நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே மன்று சிவாஜிலிங்கத்தை எச்சரித்து 2 இலட்ச ரூபாய் கொண்ட சரீர பிணையில் செல்ல அனுமதித்து , வழக்கினை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

குறித்த வழக்கு விசாரணையின்போது, தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி அஞ்சலி செலுத்தியமை, அஞ்சலி நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட பதாகையில் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தியமை மூலம் நாட்டை பிரிக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு பிணை வழங்கக் கூடாது  என பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளால் லெப். கேணல் பதவி வழங்கப்பட்ட திலீபனுக்கு முதலாவது சந்தேகநபர் சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதற்கு இரண்டாவது சந்தேக நபர் உடந்தையாக இருந்துள்ளார்.

திலீபனுக்கு நினைவேந்தல் செய்வதற்கு இந்த நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு முதலாவது சந்தேக நபரின் மனைவியிடம் பொலிஸாரால் கையளிக்கப்பட்டது.

அந்த தடை உத்தரவை மீறி அவர் இந்த நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளார்.

அத்துடன் நினைவேந்தல் நிகழ்வில் சந்தேக நபர்களால் பயன்படுத்தபட்ட பதாகையில் ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது இலங்கையிலிருந்து பிரிக்க முற்படும் நாட்டைக் குறிக்கும்.

எனவே நீதிமன்றத் தடையை மீறி மேலும் பலர் அஞ்சலி நிகழ்வை நடத்த உள்ளதால் சந்தேக நபர்கள் இருவரையும் பிணையில் செல்ல அனுமதிக்காது 14  நாட்கள் விளக்கமறியல் உத்தரவை மன்று வழங்க வேண்டும் என பொலிஸார் மன்றுரைத்தனர்.

நீதிமன்ற தடை உத்தரவு பிரதிவாதியிடம் ஒப்படைக்கப்படவேண்டும். எனினும் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பிரதிவாதியின் மனைவி உள்ளிட்ட உறவினர்களிடம் ஒப்படைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சந்தேக நபர் தெரியும் வகையிலாவது நீதிமன்றத் தடையை பொலிஸார் ஒட்டியிருக்கவேண்டும்.

அதனால் சந்தேக நபர் நீதிமன்றத் தடை உத்தரவை மீறவில்லை. ஏனைய விடயங்களுக்குச் செல்ல நாம் விரும்பவில்லை. மேலும் ஈழம் என்ற சொல்லு தமிழர் பகுதிகளைக் குறிக்கிறது. அதில் தவறில்லை. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் பதிவு செய்த கட்சியாக உள்ளது. அதன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி வகித்துள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) பொதுச் செயலாளர் அரசில் அங்கம் வகித்து தற்போது அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார். எனவே ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தியமை தவறில்லை என்று மூத்த சட்டத்தரணி என். சிறீகாந்த மன்றுரைத்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று,  சிவாஜிலிங்கத்தை எச்சரித்து 2 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்து , வழக்கினை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது  (யாழ்.விசேட நிருபர் – மயூரப்பிரியன்) - நன்றி தினகரன் 


 
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் செப். 23 வரை தடுப்பில்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் செப். 23 வரை தடுப்பில்-Hejaaz Hizbullah Case-Detention Extended Till Sep 23

- இன்று CID அறிக்கை சமர்ப்பிக்கவில்லை; விரைவுபடுத்துமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் விசாரணை குறித்த இறுதி அறிக்கையை, 2 அல்லது 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான், சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்றையதினம் (16) கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.

இது குறித்தான வழக்கு கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் அஹமட் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை ஆராய்ந்த நீதவான், இன்றையதினம் (16) குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிலையிலான அதிகாரத்திற்கு அமைய, வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், அவரை தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனவும், எனவே அவரை விடுவிக்குமாறும் தெரிவித்து, அவரது சட்டத்தரணி கணேஷ்வரி முத்துசாமி தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை தடுத்து வைப்பதற்கான உத்தரவு எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு, 150 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சுபாஷினி சேனாநாயக்க) - நன்றி தினகரன் 


விக்கி - டெனிஸ் விவகாரம்; இருதரப்பு புரிந்துணர்வு இன்மையே இத்தனை நாள் தாமதத்துக்கு காரணம்

இது ஒரு துன்பியல் சம்பவம். இரு தரப்பாருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். டெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு நேற்று முடிவுகள் வந்த பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து  தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். மாகாண சபையில் தொடங்கிய டெனீஸ்வரனுடனான இந்தப் பிரச்சினை நீதிமன்றம் சென்றது குறித்து

என்ன சொல்கின்றீர்கள்?"

என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:  

இது ஒரு துன்பியல் சம்பவம். அதாவது, இருதரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டுவந்துள்ளது.  

அண்மையில் நான் கதிர்காமத்தில் இருந்த போது, டெனீஸ்வரன் தொலைபேசியூடாக என்னை அழைத்தார். அப்போது நான் அவருடன் பேசியபோது ஒரு விடயத்தை அறிந்துகொண்டேன். தன்னை குற்றவாளியாக நினைத்து அமைச்சர் குழாமிலிருந்து நான் அவரை வெளியேற்றியதாக அவர் நினைத்திருந்தார்.  

 ஆனால், அவரை வெளியேற்றியமைக்கான காரணம் அவர் சம்பந்தமாக முறைப்பாடு செய்த ஒருவர் அமைச்சரவையில் அப்போது இருந்தார்.

குற்றம் சுமத்தியவரையும், குற்றம் சுமத்தப்பட்டவரையும் அமைச்சரவையில் வைத்திருத்தல் உசிதம் இல்லை என்ற காரணத்தினால்தான் நான் அவரை பதவியிலிருந்து நீக்கினேன் என்ற விடயத்தை அவருக்கு அறியப்படுத்தினேன்.  

அதன் பின்னர் பல சம்பவங்கள் நடைபெற்று  நேற்று வழக்கை அவர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.  நன்றி தினகரன் 


ஷானி அபேசேகரவுக்கு ஒக். 02 வரை வி.மறியல் நீடிப்பு

Thursday, September 17, 2020 - 1:31pm

சாட்சியங்களை மறைத்த மற்றும் மாற்றியமைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இவர்கள் இன்று (17) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக பல நபர்களை  பயன்படுத்தி சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பில் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது    நன்றி தினகரன் கடவுச்சீட்டு உள்ளிட்ட இரகசிய ஆவணங்கள் அச்சிடுவதில் மாற்றம்

கடவுச்சீட்டு உள்ளிட்ட இரகசிய ஆவணங்கள் அச்சிடுவதில் மாற்றம்-Printing Passport and Confidential Documents From Govt Press

கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான இரகசிய ஆவணங்களை அரசாங்க அச்சக திணைக்களத்தில் அச்சிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான இரகசிய ஆவணங்கள் தற்போது வெளிநாட்டு அச்சக நிறுவனங்களில் அச்சிடப்படுவதனால் நாட்டில் இருந்து வெளியே செல்லும் அந்நியச் செலாவணியை நாட்டிற்குள் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று (17) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறானவற்றை அரசாங்க அச்சக திணைக்களத்தில் அச்சிடுவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அது தொடர்பான திட்டம் குறித்து விரிவான வகையில் மதிப்பீடு செய்வதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  நன்றி தினகரன் வாகனங்கள் மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்கள் இறக்குமதி தடை

வாகனங்கள் மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்கள் இறக்குமதி தடை-Temporarily Holding Vehicles and Other Non Essential Items

பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க நடவடிக்கை

உள்நாட்டில் பயிரிடக்கூடிய அல்லது தயாரிக்கக்கூடியதுமான அத்தியாவசியமற்ற பொருட்கள், வர்த்தக பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்தலை தற்காலிகமாக இடை நிறுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகள் அடங்கிய வர்த்தமானிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக வெளிநாட்டு நாணய மதிப்பின் மீது ஏற்பட்ட தாக்கத்தை குறைக்கும் நோக்குடன் இறக்குமதியை முறையாக முன்னெடுத்தல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை வழமை நிலைக்கு கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை, கடந்த ஏப்ரல் 01ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டது.

அதற்கமைவாக 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டுதல் மற்றும் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக, சுங்க வரிகளை தீர்மானிக்கும் குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. அத்தோடு அந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இடைக்கால நடவடிக்கை என்ற ரீதியில் இறக்குமதியை முறையாக முன்னெடுப்பதற்காக இறக்குமதி பொருட்களை 3 பிரிவுகளாக வகைப்படுத்தி பின்வருமாறு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • உள்நாட்டில் பயிரிடக்கூடிய அல்லது தயாரிக்கக்கூடியதுமான அத்தியாவசியமற்ற பொருட்கள், வர்த்தக பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்தலை தற்காலிகமாக இடை நிறுத்துதல்
  • வழங்குனர்களால் பெற்றுத் தரப்படும் கடன் வசதியின் அடிப்படையில் அல்லது வெளிநாட்டு செலாவணி செலவிடப்படாத வகையில், தெரிவு செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்குதல்
  • உள்நாட்டு கைத்தொழில்கள், விவசாயக் கைத்தொழில், ஏற்றுமதி தயாரிப்பு, உள்நாட்டு நுகர்வுக்கு அவசியமான தெரிவு செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குதல்.

இதற்கமைவாக மேலே குறிப்பிடப்பட்ட படிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 1969 ஆம் ஆண்டு இலக்கம் 1 இன் கீழான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான விதிகளை அறிந்து வெளியிடப்பட்ட 04 விஷேட வர்த்தமானிகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கென சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
1979 ஆம் ஆண்டு இலக்கம் 40 இன் கீழான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ்கண்ட இலக்கை அடைவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புக்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைகள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

  • சுகாதார அமைச்சினதும், முப்படை மற்றும் கொவிட் மத்திய நிலையத்தினதும் கோரிக்கையின் அடிப்படையில் கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமையை தடுப்பதற்கு தேவையான மருந்து, இரசாயன பொருட்கள், சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள், இயந்திர தயாரிப்பு மற்றும் இறக்குமதி செய்யும் போது அல்லது இறக்குமதி செய்து வழங்கும் போது அல்லது இறக்குமதி செய்து நன்கொடையாக வழங்கும் போது, செஸ் வரி செலுத்துவதில் இருந்து விடுவித்தல்.
  • போட்லண்ட் சீமெந்து இறக்குமதியின் போது அதற்கான செஸ் வரியை விகித அடிப்படையில் அறவிடுவதற்கு பதிலாக, எண்ணிக்கைக்கு அமைய அறவிடுதல்.
  • சீமெந்து அச்சுகளை இறக்குமதி செய்யும் போது செஸ் வரியை நீக்குதல்.
  • காலணிகளை தயாரிப்பதற்கு தேவையான ஒருசில பாகங்கள், இழை பல்புகள் (Filament Bulbs) மற்றும் எளிதில் வளையக்கூடியதாக பொதியிடும் பொருட்களை இறக்குமதி செய்யும் போது செஸ்வரியை விதித்தல்   நன்றி தினகரன் 
மோடியின் 70 ஆவது பிறந்த தினம்: பிரதமர் மஹிந்த தொலைபேசியில் வாழ்த்து

தந்தையாகி விட்ட நாமலுக்கும் மோடி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தொலைபேசியில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். நேற்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த, இந்தியப் பிரதமரிடம் நலம் விசாரித்ததுடன் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் அவருக்குத் தெரிவித்தார். பிரதமர் மஹிந்தவிற்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி, பிரதமரின் குடும்பத்தில் புதிய வாரிசாக பிறந்துள்ள நாமல் ராஜபக்‌ஷவின் மகனுக்கும் தனது வாழ்த்தையும் மகிழ்வையும் தெரிவித்துள்ளார். இரு தலைவர்களும் பரஸ்பரம் நாட்டு நடப்பு மற்றும் கொரோனாவின் தற்போதைய நி​ைலவரம் குறித்தும் தமது உரையாடலில் பகிர்ந்து கொண்டனர்.  நன்றி தினகரன் யாழ். மாவட்ட வீட்டுத்திட்ட பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு

அங்கஜன் இராமநாதன் உறுதி

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

வீட்டுத்திட்டம், மீள்குடியேற்றம், காணிக்கொள்வனவு மற்றும் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் கட்டுமானங்கள் காலதாமதம் தொடர்பான கலந்துரையாடல் ேநற்று (18) தெல்லிப்பளை பிரதேச செயகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வீட்டுத்திட்டம் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக களவிஜயம்  மேற்கொண்டு நிலமைகள் தொடர்பில் அறிந்து கொண்டுள்ளார்.

அவர்களுக்கு நானும் யாழ். மாவட்டத்தின் வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் விளக்கம் தெரிவித்திருந்தேன்.

அந்த விடயம் தொடர்பில் அதிகூடிய கரிசனை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த உறுதியளித்தார்.

அது மட்டுமன்றி வீடமைப்பு தொடர்பான அமைச்சராக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வடபகுதி மக்களின் வீட்டுத்திட்ட பிரச்சினை தொடர்பில் அதி கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.

எமது இந்த புதிய அரசாங்கம் மூலம் விரைவில் காணி அற்றவர்களுக்கான காணி கொள்வனவு, வீடுகள் இல்லாமல் தவிப்போருக்கான வீட்டுத்திட்டங்களை இனங்கண்டு வழங்கல், நலன்புரி நிலையங்களில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடுகள் வழங்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம்.   நன்றி தினகரன் No comments: