அறமதை நினைப்பவன் அமைக்கிறான் நல்வழி ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... ஆஸ்திரேலியா            விதைத்தவன் உறங்குவான் விதை உறங்காது
             கதைப்பவன் மறையினும் கரு மறையாது 
             கொதித்தவன் அடங்கினும் கொதி அடங்காது
             பறித்தவன் பதுங்கினும் பறி  பதுங்காது   ! 


             படித்தவன்  ஒதுங்குவான்  படிப்பு  ஒதுங்காது 
             உழைத்தவன் உழலுவான் உழைப்பு உழலாது 
             நடிப்பவன் பெருகுகினும் நடிப்புப் பெருகாது 
             கொடுப்பவன் காட்டிடான்   கொடுப்பது  காட்டிடும்   !


            படைப்பவன் தெரிகிலான் படைப்பு தெரிந்துவிடும்
            பொறுப்பவன் புகழ்கிலான் பொறுப்பு புகழ்துவிடும் 
            இறப்பதை உணர்கிலான் இறப்பு உணர்த்திவிடும் 
            பிறப்பதை காண்கிலான் பிறப்பு காட்டிவிடும் 


            அடிமையாய் இருப்பவன் அடிமையை அறிந்திடான்
            கொடுமைய இழைப்பவன் கொடுமையத் தெரிந்திடான்
            கருணையை மறப்பவன் கடவுளை மறக்கிறான் 
            அறமதை நினைப்பவன் அமைக்கிறான் நல்வழி 

No comments: