போற்றிடும் வாழ்வு புலருமே நாளும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


                குறையும் கறையும் குறளால் அகலும்

               நிறையும் பொறையும் படித்தால் பதியும் 

               துறையும் தொழிலும் அமைந்தால் நலமே 

               அறையும் சிறையும் அடிமை தருமே 

 

               கேளா மக்கள் கீழ்மை தருவார்

               தாளாக் கோபம் தக்கதை அழிக்கும் 

               வாழா மனிதர் மரமென ஆவார்

               வாழக் குறளைப் படிப்பது நலமே 

 

               தக்கது அகலின் தகைமைகள் மறையும் 

               பக்குவம் நிறையின் பண்புகள் மலரும்

               பெற்றிட யாவரும் பெருந்துயர் படுவார்

               பெறுமதி வந்திடின் பேரின்ப மடைவார் 

 

              வேற்றுமை வந்தால் வினைகள் பெருகும்

              சாற்றிடும் அனைத்தும் சகதியில் புதையும் 

              தோற்றிடு மனதை துணிவுடன் நிறுத்து 

No comments: