Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை முயற்சி


கனடாவில் இன்று மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர் வாழும் சூழலில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் வாய்ப்பைத் தேடி வந்து வழங்கியிருக்கிறார்கள் பல்கலைகழகத்தார். 

இந்த மாதிரியானதொரு வாய்ப்புக் கிடைக்க பல்லாண்டுகளுக்கு முன்னர் முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இப்போது ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று நிறுவப்பட்ட சூழலில் அந்த வெற்றிகரமான முயற்சியைக் கண்டு Toronto பல்கலைக்கழக இயக்குநர்கள் தமிழ் மக்களிடம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான சம்மதத்தை வழங்கி வரவேற்றிருக்கிறார்கள்.

ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ எப்படித் தன்னார்வலர்கள் மில்லியனில் இருந்து உண்டியல் கணக்கு வரை உலகெங்குமிருந்தும் அள்ளிக் கொடுத்து ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிரப்பி நிறுவினார்களோ அது போன்றதொரு இன்னொரு முன்னெடுப்பு இது. இம்முறை இந்தத் தமிழ் இருக்கைக்கான வைப்பு நிதியாக மூன்று மில்லியன் டொலர்கள் தேவை. இதுவரை 1.3 மில்லியன் டொலர்கள் திரட்டப்பட்டுள்ளன.
Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இணையப்பக்கம் 


இது ஒரு நிரந்தரச் சொத்துக்கான முதலீடு, இதன் மூலம் கற்பித்தல், ஆராய்ச்சி, கருத்தரங்கு உள்ளிட்ட பன்முகப்பட்ட வாய்ப்பு செம்மொழியான தமிழ் மொழிக்குக் கிட்டப் போகிறது.

இது குறித்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் பகிர்வு


அத்தோடு இந்த முயற்சிக்கு நிதி ஆதரவு தர முனையும் உள்ளங்கள் கீழ்க்காணும் வைப்புக் கணக்கு விபரத்தைப் பயன்படுத்தலாம்.


இந்தச் சூழலில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்க்கான முனைப்பில் இருக்கும் தன்னார்வலர்களில் டாக்டர் சம்பந்தம் அவர்கள் தன் கருத்துகளை இங்கே முன் வைக்கிறார்.


சிறு துளி பெரு வெள்ளம். தமிழ் இருக்கை என்பது எதிர்காலத்துக்கான மாமர விளைச்சலாகக் கை கொடுப்போம்.
இந்தச் செய்தியை அனைவருக்கும் பகிர்வோம்.



No comments: