தென்னையைப் பார்ப்போம்
தெரிவோம் நல்லதை
எடுத்துண்ட நீரை
கருக்குநிறை பனைமரம்
காலிருந்து தலைவரைக்கும்
செருக்கின்றிக் கொடுக்கிறதே
சிந்தித்தால் சிறப்பாகும் !
கொடுக்கின்ற கனியாலே
மரத்துக்கு ஏதுபயன்
விதம்விதமாய் சுவைகொண்ட
பலகனிகள் வருகிறதே
அதையுண்டு சுவையறியும்
ஆனந்தம் எமக்கன்றோ
உணர்வின்றி மரமழித்தல்
உவப்பான செயலாமோ !
ஊர்நடுவே ஆலமரம்
கிளைபரப்பி நிற்கிறது
யார்வருவார் யார்செல்வார்
ஆலமரம் பார்ப்பதில்லை
வெப்பமதை உணராமல்
வந்திருப்பார் மகிழ்வடைய
ஆலமரம் அமைவதனை
அகமிருத்தல் அவசியமே !
காலநிலை சமநிலை
காட்டுமரம் தருகிறது
சாலையோர மரமெல்லாம்
தளர்வுதனை போக்கிறது
உணர்வற்ற மரமென்று
உறவுகளைத் திட்டுகிறோம்
உணர்வுள்ள நாம்மட்டும்
மரமழித்தல் முறையாமோ !
பூவை அணைப்போம்
புறப்படும் புத்துணர்வு
காயாம் மனத்தைக்
கனியாய் காண்போம்
செடியாய் முளைத்து
விருட்சமாய் நிமிர்வோம்
நிழலாய் இருப்போம்
நிம்மதியைக் கொடுத்திடுவோம் !
No comments:
Post a Comment