Dil Bechara திரை விமர்சனம்


ஒரு சில படங்கள் தான் நம் நினைவிற்கு மிக நெருக்கமாக இருக்கும், அப்படி மிக நெருக்கமான ஒரு படமாக அமைந்துள்ளது சுஷாந்த் நடிப்பில் இன்று OTYயில் வெளிவந்துள்ள Dil Bechara படம், ஆம், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்களின் கடைசி படம் இது, இதனாலேயே இப்படத்தை பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கதைக்களம்
சஞ்சனா கேன்சரால் பாதிக்கப்பட்டவர், அவருக்கு எங்கு சென்றாலும் ஆக்சிஜன் சிலிண்டருடன் செல்லும் ஒரு கொடுமையில் இருந்து வருகிறார், கிட்டத்தட்ட வாழ்க்கையே ஒரு போரிங் என்று தான் செல்கிறது.
அப்போது அவருக்கு சுஷாந்தின் அறிமுகம் கிடைக்க, அவரும் கேன்சரில் ஒரு கால் இழந்து ரஜினி போல் ஆகவேண்டும் என்று தன் நண்பனுடன் இணைந்து ஜாலியாக வாழ்க்கையை நடத்துகிறார்.
அப்போது சுஷாந்த் சஞ்சனாவை பார்க்க, பார்த்தவுடன் பிடிக்க, சஞ்சனாவும் ஒரு கட்டத்தில் அவருடன் பயணப்பட இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் இன்பம், துன்பம், சந்தோஷம், துக்கம், இழப்பு ஆகியவை மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
இப்படத்திற்கு பலரும் விமர்சனம் செய்யவில்லை, இது சுஷாந்திற்கான டிரிபியூட் என்று தான் சொல்கிறார்கள், அப்படியாகவே தான் படமும் அமைந்துள்ளது.
இத்தனை துறுதுறு இளைஞரை இந்திய சினிமா இழந்துவிட்டதே என்ற ஏக்கம் ஒவ்வொரு காட்சியிலும் அவரை பார்க்கும் போது தோன்றுகின்றது.
அதிலும் சஞ்சனாவின் அப்பாவிடம் ' நீங்கள் நான் சஞ்சனாவை காதலிப்பதை சில்லி என்கிறீர்கள், என் காலை எடுக்கும் போது என் அப்பாவிடம் வேண்டாம் என்றேன்.
என்னால் இனி எப்போது பேஸ்கட் பால் விளையாட முடியும் என்று கேட்டேன், அப்போது என் அப்பா கூட சில்லி என்றார், ஆனால், காலை எடுத்த பிறகும் நான் பேஸ்கட் பால் விளையாண்டேன், என்னுடைய கனவு பெரிது, ஆனால், சஞ்சனா கனவு சிறிது, அதை நான் நிறைவேற்ற வேண்டும்' என அவர் பேசும் காட்சி சுஷாந்த் என்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க மாட்டார்.
மேலும், சஞ்சனாவிற்கு பிடித்ய விஷயங்களை சுஷாந்த் செய்ய, சுஷாந்திற்கு பிடித்தது போல் சஞ்சனா அவருடன் படத்தில் நடிக்க, அதை கிளைமேக்ஸில் நண்பர்களுடன் போட்டு காண்பிப்பது செம்ம டச்.


ஆனால், சுஷாந்த் நினைவுகள் தாண்டி இதை ஒரு படமாக அனுகினால், இன் கம்ப்ளிட் மூவியாக தான் இருக்கும், ஒரிஜினல் மூவியில்(The fault in our stars) உள்ள ஒரு கனேக்ட் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங்.
ஆனால், சுஷாந்த் பற்றி சஞ்சனா சர்ச்சில் பேசும் காட்சி கண்டிப்பாக ஒவ்வொரு ரசிகனின் மனநிலை தான். மிக எமோஷ்னல் நிறைந்த காட்சி.
இப்படத்தின் மிகப்பெரிய பலம் ரகுமான் இசை தான். பாடல்கள் எல்லாம் ஆல்ரெடி சென்சேஷ்னல் ஹிட்.
மொத்தத்தில் க்ளாப்ஸ், பல்ப்ஸ், மார்க் இதையெல்லாம் பார்க்காமல் சுஷாந்திற்காக கண்டிப்பாக ஒவ்வொருவரும் பார்க்கலாம் இந்த Dil Bechara.   நன்றி CineUlagam


No comments: