அரும்பொன்று கருகியது - செ .பாஸ்கரன்

.

More than 80 children under two-years-old test positive for COVID-19 in single US county

மரணித்த குழந்தை நேற்றைய செய்தி கேட்டதில் எழுதியது.அரும்பொன்று மலர்ந்து
ஆகிய நாட்களோ தொண்நூறு
தாயின் மடியில் தவழ்வதற்கு
விழுந்த சிறு குஞ்சு
ஒன்பது மாதங்கள்
காத்திருந்த அன்னையவள்
கேட்டாள்
பாலகனின் அழுகுரலை
முத்தமழை பொழிந்தாள்
முகத்தோடு முகம் வைத்தாள்
பட்டுத்துணியின் வழுவழுப்பு
அவன் சின்ன உடம்பில் தெரிகிறது
ஆசையுடன் அரவணைத்து
பாலூட்டி
பார்த்து ரசித்திருந்தாள்
சிறு தும்மல்
மெல்ல சிணுங்குமொலி
கணச்சூடு கண்டது போல்
உடல் சூடு ஏறியது
குளிராக இருக்குமென
கம்பளியால் மூடிவிட்டாள்
உறக்கம் கொள்ளாமல்
விடியும் இரவுதனைக் கடந்தாள்
மருத்துவரை தேடி
மருந்தொன்று வேண்டுமென்றாள்
கொரோனா குழந்தைக்கு
தனிமையில் விடு என்றார்
பிஞ்சுக் கரமிரண்டும் மூடிக்கிடக்க
காற்றைத் தேடி
எழுகின்ற மார்பகங்கள்
விம்மித தணியும் வேதனைத் தீ
என்ன கொடுமை
இளம் தளிரை
தீயில் இட்டது யார்
விலகி இரு என்றசெய்தி
காற்றில் மிதக்கிறது
கேட்பதட்கு யாருமில்லை
சிறு குழந்தை
சிரிப்பின்றிக் கிடக்கிறதுNo comments: