பிரான்ஸ் துணை முதல்வராக இலங்கை தமிழ் பெண்மணி
பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழரான செர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez யோடு இணைந்து 50.84% வாக்குகளப் பெற்று நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவர் Franceல் 95 ஆம் பிராந்தியத்தில் மீண்டும் துணை முதல்வராகவும், பல உயர் பதவிகளை வகித்துள்ளார். மேலும் இந்த மாநகரசபைத் தேர்தலில் ஆதி பரமேஸ்வரி சதாசிவம் (பாண்டிச்சேரி) மற்றும் கார்த்திக் சந்திரமூர்த்தி ஆகியோரும் மாநகரசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் .  


No comments: