சண்முகம் சிவலிங்கம் ஈழத்தின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவர். அடிப்படையில் விஞ்ஞான ஆசிரியரான இவர் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் பலவற்றை எழுதி அவை நூலுருப் பெற்றும் உள்ளன, அவற்றுள் நீர் வளையங்கள் என்ற கவிதைத் தொகுதி குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
ஈழத்தின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர், இலக்கியம் கடந்து தமிழ் இன உணர்வாளராக வாழ்ந்து மடிந்தவர். டிசம்பர் 19, 1936 – ஏப்ரல் 20, 2012)
“ஆக்காண்டி ஆக்காண்டி” என்ற இவரது நாட்டாரியல் சார்ந்த கவிதை ஈழத்துப் போர் வடுக்களை மறை பொருளாகக் கொண்டு வலியெழுப்பும் படைப்பாகும். இதற்குக் குரல் வடிவம் தந்து உணர்வு பூர்வமாகப் பகிர்கிறார் சங்கீதா தினேஷ் பாக்யராஜா.
No comments:
Post a Comment