நாடகத் துறையும் அரசியல் தலைவர்களும் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

.
பெரியாரும் அறிஞர் அண்ணாவும்



கலைமூலம் நசுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் உயர்வும் தேட வேண்டும்; சுபீட்சம்  கிட்ட வேண்டும் என்று உழைத்த கலைஞர்களுக்கு உலக அரங்கில் முக்கியமான இடம் உண்டு.

கல்வி அறிவு இல்லாத மக்கள்; எதுவும் கற்று அறிய முடியாதவர்கள்; மூட நம்பிக்கை என்ற இருளிலே வாழ்ந்து மடிபவர்கள்; ஜாதி அடக்குமுறையின் தாங்க முடியாத கஸ்டங்களை அனுபவிப்பவர்கள்; அத்தனைக்கும் காரணம் தம் முற்பிறப்பில் செய்த பாவம் என நம்பும் அப்பாவிகள் மலிந்த இடமாக இருந்தது தமிழ்நாடு.

தாழ்த்தப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்தார் ஒருவர். அவர்தான் பிற்காலத்தில் மக்களால் பெரியார் எனப் போற்றப்பட்ட ஈ.வே.ராமசாமி நாயக்கர். படிப்பறிவற்ற  மக்களுக்கு நாடகம் மூலம் அறிவுக்கண்ணைத் திறந்தார் பெரியார். அதனால் அதுவரை அடிமைத் தனமே தமது வாழ்வு என நம்பியிருந்த மக்கள் சிந்திக்க வழி பிறந்தது. திராவிடக்கழகமும் அதன் ஊழியர்களும் இவரோடு முன்னின்று உழைத்தார்கள். அவர்களில் முக்கியமானவர் க.நா. அண்ணாத்துரை என்ற கலைஞர்.


பெரியாரின் சிந்தனைக்கு நாடக வடிவம் கொடுத்து மக்களின் சிந்தனையைத் தூண்டியவர் அண்ணாத்துரை. பட்டி தொட்டி எங்கும் இவர்களின் நாடகங்கள் நடந்தன. க.நா. அண்ணாத்துரையின் நூல்களை வெளியிட்ட பாரி புத்தக நிலைய அதிபர் செல்லப்பன் ஒருமுறைஇ’ நாடகம் நடக்கும் இடங்களிலே இருக்கைகள் இருக்காது; தென்னோலைகளை வெட்டிக் கிடுகாகப் பின்னி அதன் மேல் உட்கார்ந்துஇ வெட்ட வெளிகளிலே தான் கிராமங்களிலே அண்ணாவின் நாடகங்களை மக்கள் பார்த்தார்கள்’ எனக் கூறினார். ஆனாலும் அடக்கப்பட்டவர் என வாழ்ந்த சமூகத்தின் வாரிசுகள் இன்று தலைநிமிர்ந்து மற்றவர்களுக்குச் சமமாகக் கல்வியிலும் தொழில் முறையிலும் வளர்ந்துள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் அன்று திராவிடக்கழகம் செய்த அயராத முயற்சிகளே எனலாம்.






க.நா. அண்ணாத்துரை என்ற கலைஞனின் பெயர் பரவலாக நாடு பூராகவும் பரவி இருந்த காலம் அது. ஒரு நாளைக்கு 4இ5 இடங்களிலே ஓடி ஓடி நாடகம் நடத்திய காலம் அது. நாடகம் ஒன்றே மக்களின் கண்களைத் திறக்கும் என்ற நிலை. அதனால் ஓய்வு ஒழிச்சல் இல்லாது நாடகங்களை நடத்தினார்கள். நாடகம் எழுதித் தயாரிப்பது அத்தனையும் அண்ணாத்துரை அவர்களின் பொறுப்பு. அவரைப் பார்க்க வேண்டும் அவரோடு பேச வேண்டும் என மக்கள் விரும்பிய காலம் அது!

ஒரு நாள் ஒரு நகரத்துக்கு இந்த நாடகக் குழு போய் இறங்கியதாம். வந்தவர்கள் விறு விறு என மேக்கப் போட்டுக்கொண்டு மேடை ஏறவேண்டியளவு நேரம் தான் இருந்தது. அதனால் முன் கூட்டியே நேர விரயம் ஏற்படாதிருக்கக் கருதிஇ அந்த நகரத்தில் இருந்த மேக்கப் கலைஞரும் உதவிக்கு அழைக்கப்பட்டிருந்தாராம். அவர் தான் எப்படியாவது அண்ணாத்துரைக்கு மேக்கப் போடவேண்டும் என ஆசைப்பட்டாராம். ஆனால் வந்த வேகத்திலே ஒரு நடிகர் அவரது கையைப் பிடித்துஇ உட்காரவைத்துஇ ’நேரமாகிறதுஇ  சீக்கிரம் போடு’ என்றாராம். வேறு வழியில்லாது அவரும் அந்த அசிங்கமான முகத்திற்கு மேக்கப் போட உட்கார்ந்தார். அண்ணாவுக்கு மேக்கப் போடவேண்டும் என்ற ஆசையெல்லாம் நிராசையான நிலையில்இ முன்னால் உட்கார்ந்திருந்த முகத்திற்கு மேக்கப் களியை எடுத்து பொட்டு வைத்தார்.



சம்பிருதாயமாக முதலிலே மேக்கப் களியை பொட்டு போன்று நெற்றியில் வைத்து பின்  முகத்தில் தடவப்படும் களிம்புடன் அதைச் சமப்படுத்தி விடுவது மேக்கப் சம்பிருதாயம். இதைச் செய்து முடித்ததும் மேக்கப் கலைஞர் தனது ஆர்வத்தை அடக்க முடியாது அவரைப் பார்த்துஇ ’யாரப்பா அண்ணா’ எனக் கேட்டாராம். அவருக்கு முன்னால் உட்கார்ந்திருந்தவர்இ ‘நான் தான் அப்பா அண்ணா’ என்றாராம். ஒருபுறம் தாம் அண்ணாத்துரைக்கு மேக்கப் போட்டோம் என்ற சந்தோஷமும்இ மறுபுறம் அவரது கற்பனையில் ஆஜானுபவமான வாட்டசாட்டமான ஆளாக அவர் எதிர்பார்த்த அண்ணா அவர் இல்லையே என்ற ஏமாற்றமுமாகப் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளானாராம்.

இவ்வாறு மக்களின் விடிவுக்காகத் தனது எழுத்தாலும் பேச்சாலும் நடிப்பாலும் உழைத்தவர் அறிஞர் அண்ணா.அரிதாரம் போட்டு நடித்த செயல்வீரர். மக்கள் தலைவன். பின்னர் தமிழ் நாட்டின்முதலமைச்சரும் ஆனார்.



அண்ணாத்துரை இறந்த போது தமிழ்நாடு என்றுமே கண்டிராதளவு கூட்டம் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்த சென்னையை நோக்கி வந்தது. மக்கள் தலைவனாக வாழ்ந்தவர் மாண்டபோது சென்னை மாநகர் பல நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளானது. பல பகுதிகளிலும் இருந்து வந்த மக்களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடியது சென்னை நகர். உணவுப் பற்றாக்குறையும் தண்ணீர் பற்றாக்குறையும் தங்குமிடப் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதற்கென அவசரகால அடிப்படையில் அண்டை மாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் உடனடியாக  வரவழைக்கப்பட்டன.

நாடகமானது பலரின் சிந்தனையைத் தூண்டுவது. அதே சமயம் அதில் நடிப்பவரோ தம்மில் இருக்கும் திறமையை தாமே உணரவும் வைப்பது. நடிகனானவன் இப்போது இருப்பதுபோல் அந்தக் காலத்தில் பயிற்சிக்கு உட்படுத்தப்படுபவன் அல்ல. நடிப்பு என்பது ஒருவனது சொந்தத் திறமை. இது கற்றுக் கொடுத்து வருவதல்ல. அவர்கள் தொடர்ந்தும் நாடக உலகில் இருப்பதால் அவர்களது திறமை மேலும் புடம் போடப்பட்டு செப்பனடைகிறது.


இலங்கையில் பிரதமராக இருந்த பிரேமதாஸ அதுவரை இலங்கையின் பிரதமர்களாக இருந்தவர்களைப் போல் கல்லூரிப் பட்டதாரியல்ல; சட்டத்தரணியும் அல்ல. இவர் சிறுவனாக இருந்த காலத்தில் வுழறநச ர்யடட வுhநயவசந என்ற நாடக சாலையில் நாடகம் சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டவர். இவரது குடும்பம் அப்போது பிந்தங்கிய குடும்ப பொருளாதார நிலையில் சிக்கியிருந்தது.  மேற்படிப்பைப் பற்றிச் சிந்திக்கக் கூட முடியாத நிலை. அதனால் பிரேமதாசாவை வளர்த்ததெல்லாம் வுழறநச hயடட வாநயவசந இலிருந்த குழுக்களே.



இங்கு தான் இவர் தான் ஒரு சிறந்த எழுத்தாளன் என்பதை உணர்ந்தார். சிங்களம்இ தமிழ்இ ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வல்லமையோடு சரளமாகப் பேசும் நாவன்மை படைத்திருந்தார். பிறேமதாசாவின் பேச்சைக் கேட்டவர்கள்இ ’அவரது பேச்சு மக்களின் நரம்புகளிலே மின்சாரம் பாய்வது போன்ற உனர்வை ஏற்படுத்த வல்லது’ என்பார்கள். இதையெல்லாம் அவர் ழுஒகழசன லோ ஊயஅடிசனைபந லோ  கற்றுக் கொள்ளவில்லை. நாடக மேடையே இதற்கு வழிகாட்டியது.

அத்துடன் சிறுவர்களுக்கான நாடகங்களை எழுதுவதில் கைதேர்ந்தவர் பிறேமதாஸா. இவர் அரசியலில் நுழைந்ததும் அரசியல் அறிவை வளர்ப்பதற்காக இலங்கைப் பாராளுமன்றத்தில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து வெளியான ர்யளெயசன எனப்படும் பாராளுமன்ற நடவெடிக்கைகளை தொகுத்துத் தரும் நூல்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் படித்து அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார்.


எங்களுக்கொரு ஆங்கில நாடகத் தயாரிப்பாளரான நண்பர் ஒருவர் இருந்தார். அவரின் பெயர் ர்யபை முயசரயெசயவநெ. இவர் ஒரு ஆசிரியர். இவரது பாடசாலையில் தொழில் பார்த்த பிறிதொரு ஆசிரியர் பின்நாளில் பெரிய தொழிலதிபராக மாறினார். பெரிய உல்லாசப்பயணிகளுக்கான ர்ழவநட கட்டினார். என்னுடய கணவர்இ எங்கள் நாடகத் தயாரிப்பாளரான முயசரயெசயவநெ ஐப் பார்த்து ‘ஏனப்பாஇ உன்னைப்போல ஆசிரியர்களெல்லாம் பெரிய தொழிலதிபர்களாகி விட்டார்கள்; ஆனால் நீ ஏன் இன்னும் நாடகம் போட்டுக்கொண்டு திரிகிறாய்’ என்று ஒரு நாள் கேட்டார்.  அதற்கு அந் நண்பர்இ ’ஆமாம்இ அந்த ஆசிரியனின் கற்பனைகள் யாவும் கொங்கிறீற் கற்களாக உருவெடுக்கிறது; என் கற்பனைகள் யாவும் மேடையில் உருவாகிஇ மக்களின் மனதிலே வாழ்கிறது.’ என்று பதிலளித்தார்.

ஆமாம்இ கலையிலே தன்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்ட கலைஞன் தனது கற்பனைகளுடன் ஒன்றாகி வாழ்கிறான். அதிலே திருப்தியும் காண்கிறான். அவனுக்குப் பணமும் பொருளும் கொடுக்கும் இன்பம் அவன் உருவாக்கும் கலைகளுக்கு ஈடாகுமா? இது ஒரு கலைஞன் தன் கலை மூலம் பெறும் இறுமாப்பு.




இதையே இராமனைப் பாடுவதை தனது இலட்சியம்; சங்கீதமே தனது முழுமூச்சாக வாழ்ந்த தியாகப்பிரம்மம் எனப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர்இ மன்னன் தன் புகழைப் பாடும் படி கேட்டு  பல்லக்குஇ பொன்இ மணிஇ பொருள்கள் என்பவை யாவும் கொடுத்தனுப்பிய போதும் அதை ஏற்க மறுத்துஇ மன்னனைப் பார்த்துஇ ‘நிதிசால சுகமா’ எனப் பாடினார்.  ’எனது ஒப்பற்ற இசையை இராமபிரானுக்கே அர்ப்பணிப்பேன்; உனக்கல்ல; எனக்கு நீ கொடுக்கும் செல்வங்கள் எனது இசைக்குப் பேசும் விலை. இராமபிரானுக்கு என் இசையை அளித்து இன்பம் காண்பேன்; அவை நீ கொடுக்கும்   செல்வத்தினை விடப் பெரியது’இ என பொருள் படும் ‘நிதி கால சுகமா’ எனப் பாடினார்.

அந்தத் தியாகராஜரின் இறுமாப்பை; திருப்தியை எமது நண்பர் ர்யபை இலும் நான் கண்டேன்.

(இக் காட்டுரையும் ’பிறவி மேதைகள்’ என்ற கட்டுரையைத் தொடர்ந்து யுவுடீஊ வானொலியில் 11.5.2007 அன்று ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது; இங்கு இரு பகுதிகளாக அவை பிரசுரமாகிறது )

No comments: