பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 8 - அனாதை ஆனந்தன்- சுந்தரதாஸ்

.குடும்ப கதைகளை தொடர்ந்து படமாக தயாரித்துக் கொண்டிருந்த ஏவிஎம் படநிறுவனம் வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவதற்காக தாராளமாக செலவு செய்து தயாரித்த படம் அனாதை ஆனந்தன். இந்தியில் தயாரிக்கப்பட்ட சண்டா அவுர் பிஜிலி என்ற படத்தை தழுவி தமிழில் இப்படம் உருவானது.

இந்தியில் கதாநாயகியாக பத்மினி நடித்திருந்தார். தமிழில் தயாரானபோது ஜெயலலிதா கதாநாயகியாக நடித்தார், அவருக்கு ஜோடியாக ஏவிஎம் ராஜன் நடித்தார் இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்த படங்கள் இரண்டு தான். எம்ஜிஆர் சிவாஜி என்று மாறி மாறி நடித்து வந்த ஜெயலலிதா இடையில் ராஜனுடன் நடித்தது ஒரு மாறுதல் தான் ஆனாலும் அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்கள் பெரிய அளவில் ரசிக்கவில்லை.

செல்வந்தரின் பேரனான ஆனந்தன் சந்தர்ப்பவசத்தால் அனாதை விடுதியில் வசிக்கிறான் அங்கே அவனுக்கு ஏற்படும் கொடுமைகள் அவனை அங்கிருந்து தப்பி பட்டணத்துக்கு வரப்பண்ணுகிறது பட்டணத்தில் சிறுவர்களை வைத்து திருட்டுத் தொழில் நடத்தும் ரத்தினம் என்னும் கொடியவனிடம் சிக்கினான் அங்கே அவனுக்கு ஆறுதலாக கிடைத்தது மோகினி எனும் நடன பெண்ணாகும். மோகினியின் காதலன் சேகரும் ரத்தினமம் சேர்ந்து ஆனந்தனின் தாத்தாவின் வீட்டை கொள்ளையடிக்க திட்டம் இட்டு அதற்கு ஆனந்தனை பயன்படுத்த முனைகிறார்கள். .இதற்கிடையே ஆனந்தனை ஒழித்துவிட்டு சொத்து முழுவதையும் அபகரிக்க அவனின் ஒன்றுவிட்ட அண்ணன் சூழ்ச்சி செய்கிறான் .


இப்படி அமைக்கப்பட்ட கதையில் அனாதை ஆனந்தன் ஆக மாஸ்டர் சேகர் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொண்டார். மோகினியாக ஜெயலலிதா நடித்தார் மோகினி என்ற பெயருக்கு ஏற்றாற்போல் படம் முழுவதும் கவர்ச்சியாக நடித்திருந்தார். நனைந்தால் நனையட்டுமே என்ற பாடலில் அவர் குளித்துக்கொண்டு நடித்து ரசிகர்களை அசர வைத்தது.

ஏவிஎம் ராஜன் முத்துராமன் நாகேஷ் மூவருடைய பங்கும் படத்தில் சரிசமமாக வழங்கப்பட்டிருந்தது இவர்களுடன் டி கே பகவதி அஞ்சலிதேவி தேங்காய் சீனிவாசன் என்று பலரும் நடித்தனர் அனாதை சிறுவர்கள் எவ்வாறு அவர்களிடம் சிக்கி பின்னர் கெடுகிறார்கள் என்பதை படத்தின் கதை உணர்த்தியது.கொடூர முக அமைப்புடன் படுகாயத்துடன் ஆர்எஸ் மனோகர் வில்லனாக வருகிறார் அவர் காட்டும் முகபாவம் அச்சமூட்டும் விதத்தில் இருந்தது நாகரீக வில்லனாக முத்துராமன் நடித்தார் படத்தின் வசனங்களை குகநாதன் எழுதினார் படத்தில் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார் கே வி மகாதேவன் இசை அமைத்தார் அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் என்ற பாடலுடன் படம் தொடங்குகிறது இது தவிர கண்ணாடி முன்னாடி என்ன இது இங்கு பார்ப்பதை யாருக்கும் சொல்லாதே ஆகிய பாடல்களும் பிரபலமாகின ஒளிப்பதிவு படத்திற்கு கூட்டியது குடும்ப கதைகளையே தயவு செய்து வந்த கிருஷ்ணன் பஞ்சு மசாலா படமாக இதனை இயக்கியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது கலரில் வழி வந்து சுமாரான வெற்றியையே பெற்றதுNo comments: