அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 22 – தவண்டை- தோல் கருவி - சரவண பிரபு ராமமூர்த்தி

.

இடையில் சுருங்கிஇ இரு முனைகளிலும் விரிந்து உடுக்கை அமைப்பிலேயே இருந்தாலும்இ அதைவிட அளவில் பெரியது இக்கருவி. இருமுகக் கருவி என்றாலும் ஒருபுறத்தில் மட்டுமே வாசிக்கப்படும். உடுக்கையைப் போலன்றிஇ தக்கையைப் போல குச்சியைக்கொண்டே வாசிக்கப்படுகிறது. உறுதியான பலா மரத்தின் வைரக்கட்டையைக் கொண்டு இக்கருவியின் உடல்பகுதி செய்யப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர்இ மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் வெண்கலத்தால் செய்யப்பட்ட தவண்டை இசைக்கப்படுகிறது. உடுக்கையின் தோலைவிட கனத்த ஆட்டுத்தோல் கொண்டு முகங்கள் வார்க்கப்படுகின்றன.

தந்திகள் என்றதோர் கருவியின் பெயர் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது ஒளி படுகின்ற கருதி என்றும் கூறப்படுகிறது என்ற பெயருடன் கண்டிகை விளங்கியதாக நமக்குத் தெரிகிறது தில்லைஸ்தானம் கிரீஸ்வரர் கோயில் கல்வெட்டில் பற்றிய குறிப்புகள் உள்ளது மத்தளம் கரடிகை 161 என்பது கல்வெட்டுத் தொடர் இக்கல்வெட்டு முதலாம் ஆதித்தன் காலத்தியது என்று தெரிகிறது என்பது நீண்ட ஒரு அடி மரத்தை துண்டித்து உட்கொள்ள செய்து அதன் இரு வாயில்கள் மூடுவது என்பது துண்டித்தல் என்பதையும் கண்டித்தல் தொண்டு செய்தல் கண்டிக்கப்பட்டது என்று கூறப்பட்டது ஒப்புநோக்குக







குறிப்பு

கண்டைஃ தவண்டைஃ வீரவண்டிஃ எச்சரிக்கை என்பது வேறு பெயர்கள்.

இதை இசைக்கப் பயிற்சிகள் ஏதும் தேவையில்லை. மேலோட்டமாக வாசிக்கும்போது தொய்வான சத்தமும் கொங்காரத்தை அழுத்திப் பிடித்து வாசிக்கும்போது வீரியமான சத்தமும் எழும்பும். தோளில் தொங்கவிட்டுக்கொண்டே வலது கையால் இக்கருவியை இசைக்கிறார்கள்.

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தவண்டையை ‘எச்சரிக்கை’ என்கிறார்கள். சுவாமி புறப்பாட்டுக்கு முன் அறிவிப்பு செய்யவும்இ பூஜைகளின்போதும் தனித்தனி தொனிகளில் இக்கருவி இசைக்கப்படுகிறது.



ஸ்ரீரங்கத்தில் தவண்டையை ‘வீரவண்டி’ என்கிறார்கள்.  ரஞ்ஜித்குமார் என்கிற கலைஞர் இசைக்கிறார். நம்பெருமாள்

கருவறையிலிருந்து வெளிப்படும் நேரத்தில் 2 வீரவண்டிகள் சேமக்கலத்துடன் சேர்த்து படிகளில் நின்று இசைக்கபடுகிறது. மேலும் குதிரைவையாளி எனப்படும் வேடுபறி திருவிழாவில் அனைத்து வாத்தியங்களும் நிறுத்தப்பட்டு வீரவண்டியும் சேமக்கலம் மட்டுமே இசைக்கப்படுகிறது.

வட தமிழக பகுதிகளான செங்கல்பட்டுஇ காஞ்சிபுரம் வட்டாரங்களில் திருமுறை பாடும்பொழுது தவண்டைஇ உடுக்கைஇ சங்குஇ சேமக்கலம் ஆகியவை இசைக்கப்படுகிறது. காஞ்சிபுரம் அருகில் உள்ள திம்மராயன்பேட்டையில் சுந்தரமூர்த்தி என்கிற கலைஞர் இவ்வாறு தவண்டையுடன் தேவாரம் பாடும் குழுவை நடத்தி வருகிறார்.

புழக்கத்தில் உள்ள இடங்கள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் (கலைஞர் கணேசன் – திருவிழா பலிஇ நவராத்திரிஇ மார்கழி மாத எண்ணெய்க்காப்பு விழா)

பவானி சங்கமேஸ்வரர் கோயில்

கும்பகோணம் சக்கரபாணி கோயில்

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில்

மயிலை கபாலீஸ்வரர் கோயில்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்

 நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

மன்னார்குடி ராஜகோபால பெருமாள் கோயில்

திருவெள்ளறை செந்தாமரைக்கண்ணன் திருக்கோயில்

கும்பகோணத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் உபயோகத்தில் உள்ளது

திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்



பாடல்

சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி

வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி

பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்

மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க திருமுறை 12.581

பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து

அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்

முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன்

நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341

“தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயர்ந்துக்கத்

     தகண்டத்தர்க் குடன்பட்டுற் ...... றசுராரைச்” - திருப்புகழ்



“திமிர்த தவில் மிருக (இ)டக்கைத் திரள் சலிகை பக்கக் கணப்

பறை தவண்டை பேரி வகை வகையின் மிக அதிர” – திருப்புகழ்



“தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத ச(ல்)லிகை

தவில் முரசு கரடிகை மத்தளி தவண்டை அறவைத் தகுணி

துந்துமிகள் மொகுமொகு மொகு என அலற” – திருப்புகழ்



ஆர்த்த தேர்த்தொகுதி ஆர்த்தன வாசி

     ஆர்த்த தந்திநிரை ஆர்த்தனர் வெய்யோர்

          ஆர்த்த வால்துவசம் ஆர்த்தன கண்டை

               ஆர்த்த தார்நிரைகள் ஆர்த்தது மூதூர். ......    49












No comments: