19/09/2019 18 ஆண்டுகளுக்கு முன்னர் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கருப்பு நிறத்தில் வண்ணங்களை பூசிக் கொண்டு பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்ட புகைப்படத்தை டைம் சஞ்சிகை பிரசுரித்துள்ளது.
இந்தப் புகைப்படத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய கனேடிய முஸ்லிம் மன்றம், ஜஸ்டின் ரூடோவின் இந்த செயல் கவலை அளிப்பதாகவும், இதுபோன்ற கருப்பு வண்ண நிற முகமூடிகளை அணிவது நிந்திக்கும் செயல் எனவும் சுட்க்காட்டியுள்ளது.
அதுமாத்திரமல்லாது கனேடிய புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங், இந்த புகைப்படமானது பிறரை அவமதிப்பது போல உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி கனடாவில் தேர்தல் ஆரம்பமாகவுள்ள நிலையில் இப் புகைப்படம் வெளிவந்துள்ளமை ரூடோவுக்குப் பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ரூடோ, அரேபிய இரவுகளைக் கருப்பொருளாகக் கொண்டு கொண்டாடப்பட்ட நிகழ்வு அது. அதன் காரணமாக நான் அவ்வாறாக உடை அணிந்து இருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நன்றி வீரகேசரி