முதலாவது அனைத்துலகச் சிலப்பதிகார மாநாடு 2019


சிலப்பதிகாரம் தமிழர் இலக்கியப் படைப்புக்களிலே ஒரு முக்கிய இடத்தைப் பெற்ற அற்புதக் காவியமாகும்.
இதனால் தான் பண்டைத் தமிழர் அதனை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக வைத்துப் போற்றி வந்தார்கள்.
இது தமிழர் பண்பாட்டை எடுத்துச் சொல்லும் காப்பியமாக அமைந்துள்ளது.  இராமாயணம், பாரதம் போன்றின்றித் தமிழர்களையே கதாபாத்திரங்களாகக் கொண்டது.  சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு ஆகிய மூன்று தமிழ் நாடுகளிலும் நடக்கும் கதையாக அமைந்தது.
இந்தக் காப்பியத்தின் சிறப்புக்கள் மேலும் நீளும். 
இவற்றையெல்லாம் புலம்பெயர் தமிழருக்கு நினைவு படுத்தவும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவும் இந்த மாநாட்டை சிட்னியின் தமிழ் இலக்கியக் கலை மன்றத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.  இந்த மாநாடு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றது.  நிகழ்ச்சிகள் சனிக்கிழமை 28 ஆம் திகதியும் ஞாயிற்றுக்கிழமை 29 ஆம் திகதியும் நடைபெற இருக்கின்றது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் தமிழகம், மலேசியா, இலங்கை ஆகிய இடங்களில் இருந்து வந்து கலந்து கொள்கின்றார்கள்.
சிலம்பைப் படைத்த இளங்கோவடிகளுக்கு ஒரு சிலையும் எதிர்வரும் 27ஆம் திகதி நிறுவப்பட இருக்கின்றது.
நிகழ்ச்சியிலே சிலப்பதிகாரத்தைப் பல்வேறு கோணங்களில் கண்டு தமிழறிஞர்கள் பேச இருக்கின்றார்கள்.  இது தவிர, வில்லுப்பாட்டு, நாட்டிய நாடகம், கவியரங்கம் என்று பல்வேறு சிலம்பை ஒட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.
சுமார் 700 பக்கங்களிலே மாநாட்டு மலரும் வெளியிடப்பட இருக்கின்றது.
அவுத்திரேலியா வாழ் தமிழர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த மாநாட்டில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று தமிழ் இலக்கியக் கலை மன்றத்தின் தலைவர் திரு மகேந்திரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கவிஞர் த. நந்திவர்மன்
    
-->








No comments: