சிறுவர்க்கான வர்ணம் தீட்டும் போட்டி 2019 (முடிவுத் திகதி 28.09.19)இவ்வருட அவுஸ்திரேலியக் கம்பன் விழா ஒக்ரோபர் 12 - 13ஆம் திகதிகளில் சிட்னியில் கோலாகலமாக அரங்கேறவிருக்கின்றது.

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் 2016ஆம் ஆண்டு அரங்கேற்றிய கம்பன் விழாவினை முன்னிட்டு நடாத்திய வர்ணம் தீட்டும் போட்டியைப் போன்று,
இவ்வருடமும் "சிறுவர்க்கான வர்ணம் தீட்டும் போட்டி" ஒன்றை அறிவித்திருக்கின்றார்கள்.
தங்கள் சிறார்களை இப்போட்டியில் கலந்து கொள்ள ஊக்குவியுங்கள் என அன்போடு கேட்டுக் கொள்கின்றார்கள்.
*******
**உலகின் எப்பாகத்திலிருந்தும் சிறுவர்கள் பங்கேற்கலாம்.
**5-8 மற்றும் 9-14 என இரு வயதெல்லைகள்.
**வரைபடங்கள் தரப்பட்டுள்ளன.
**சிறுவர்க்கான பரிசில்கள் வழங்கப்படவிருக்கின்றன.
**போட்டி முடிவுத்திகதி செப்டெம்பர் 28, 2019.
**மேலதிக விபரங்களுக்கு இங்கு தரப்பட்டுள்ள இணைப்பைப் பார்க்க: 
http://www.kambankazhagam.org/site/news.htmlNo comments: