தமிழ் சினிமா - மகாமுனி திரைவிமர்சனம்

ஆர்யாவுக்கு ஒரு தனி ஸ்டைல் உண்டு. அவரின் படங்களுக்கென ஒரு எதிர்பார்ப்பு எப்போதும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. லவ் ஹீரோவாக சுற்றி வந்த இவர் தற்போது திரில்லர், சஸ்பென்ஸ் உடன் மகாமுனியாக வந்திருக்கிறார். மகா முனியின் பின்னணி என்ன? கதைக்குள் செல்வோமா..

கதைக்களம்

ஆர்யா மகா, முனி என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார். சிறுவயதில் தாய், தந்தை ஆதரவில்லாமல் பிரிந்து தனித்தனியே ஒருவரை ஒருவர் தெரியாமலேயே வாழ்கிறார்கள்.
இதில் முனியை ரோஹினி தத்தெடுத்து வளர்த்து ஆளாக்குகிறார். இந்த முனி அமைதி, படிப்பு என யார் வம்புக்கும் போகாமலிருப்பார். அவரின் மீது ஊரில் உள்ள செல்வந்தர் மகளான மஹிமா நம்பியாருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதற்கிடையில் தாழ்த்தப்பட்டவராக கருதி முனியை கொலை செய்ய திட்டம் நடக்கிறது.
அதே போல மகா அரசியல்வாதி ஒருவரின் உதவியாளராக இருக்கிறார். இவருக்கு ஜோடியாக இந்துஜா இருவருக்கும் ஒரு மகன். மகா அடியாளாக கொலை செய்யும் வேலைக்கு கூலிப்படையாக ஏவப்படுகிறார். இதற்கிடையில் ஏதோ ஒரு விசயத்திற்காக மகா ஐ கொல்ல பெரிய திட்டம் போடப்படுகிறது.
இறுதியில் என்ன ஆனது? உயிர் ஆபத்தில் மகா தப்பித்தாரா? அவரை கொலை செய்ய முயலும் பின்னணி என்ன? முனி என்ன ஆனார் என்பதே இந்த மகாமுனி.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ ஆர்யாவுக்கான கிரேஸ் எப்போதும் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே அவர் நான் கடவுள் படத்திற்காக மிகுந்த ரிலிஸ் எடுத்து நடித்தை ரசிகர்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள்.
தற்போது மகா, முனி என இரண்டு கெட்டப்களில் இப்படத்தில் இறங்கியிருக்கிறார். அவரின் கதை தேர்வு சரியானது. அவருக்கான கதைக்களமாக அமைந்திருக்கிறது. படத்திற்காக அவர் ரிஸ்க் எடுத்தது நன்றாக இருக்கிறது.
இதில் முனி ஆர்யா மனப்பக்குவம் அடைந்த நபராக ஜாதி எப்படி உருவானது, கடவுள் பற்றிய புரிதல் இவை பற்றி மிக எளிமையாக எல்லோரும் உடனே புரிந்துகொள்ளும் விதத்தில் எடுத்துச்சொல்லும் காட்சி சரியான தேர்வு.
ஹீரோயின் மகிமா நம்பியார் இதழியல் படிக்கும் பெண்ணாக, மாற்று சிந்தனை கொண்டவராக கேரக்ரில் மிளிர்கிறார். அவருக்கு சின்ன ரோல் தான் என்றாலும் அதிலும் அழுத்தமான விசயத்தை பதிவு செய்கிறார்.
அதே போல மகா ஆர்யாவின் பின்னணியில் ஒரு ஞாயம் இருக்கிறது என்பதை கேரக்டரே வெளிப்படுத்துகிறது. வினை வினைத்தவன் வினை அறுப்பான் என்பது போல படத்தில் பளிச்சிடும் விசயங்கள் மகா காட்டுகிறார்.
மேயாத மான் இந்துஜா மகாவுக்கு ஜோடியாக வெகுளியான படிப்பறிவில்லாத கிராம பெண்ணாக உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். அவருக்கு வரும் இக்கட்டான சூழ்நிலையும் சோகமயமானது. எல்லோருக்கும் ஷாக் தான். எதார்த்தமான நடிப்பு.
இயக்குனர் சாந்த குமாரின் இந்த மகாமுனி கதை மிக ஆழமானது. கேரக்டர்கள் அனைவரையும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். முழுக்க முழுக்க கிராம பின்னணி கதைக்கு இயற்கையாக கொண்டு செல்கிறது.
தமனின் இசை படத்தின் கதைக்கு பக்க பலம், காட்சிகளுக்கு இடையில் உணர்வுப்பூர்மான நகர்வு.
அதே போல காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டதும் பொழுது சாயும் அந்த மாலை வேளையில், இரவில் தான். இயல்பான தோற்றத்தை வரவைக்கும் எடிட்டிங்.

கிளாப்ஸ்

ஆர்யா, இந்துஜா, மஹிமாவின் உணர்வுப்பூர்மான நடிப்பு.
தமனின் பின்னணி இசை சீரியஸான கதை நகர்வு.
இயக்குனர் கடைசிவரை சஸ்பென்ஸ் ஐ கொண்டு சென்றவிதம்.

பல்பஸ்

படத்தின் காட்சிகள் அங்கும் இங்கும் செல்வதால் நிறையவே ட்விஸ்ட். எனவே நோ ஃபிரீ ஃபீல் மொமென்ட்.
மொத்தத்தில் மகாமுனி நல்ல முயற்சி.. ஒரு சீரியஸான கதைப்பயணம்.
நன்றி CineUlagam

No comments: