"மனமோகனா "ஒரு ரசிகையின் பார்வையில்


ஒரு இனத்தினுடைய முகவரி அந்த இனத்தினுடைய மொழியும்,
கலையும், கலச்சாரமும் பண்பாடும் ஆகும். ஒரு கலையை தொடர்ந்து கற்று அதில் அரங்கேற்றம் செய்து, தான் கற்ற அந்த கலையோடு தொடர்ந்து பயணிப்பது என்பது இளைய சமுதாயதினருக்கு ஒரு சவாலாக இருப்பது தான் நிதர்சனம்..

கடந்த வெள்ளிக்கிழமை சிட்னி முருகன் ஆலயத்தில் அமையந்துள்ள கல்வி காலச்சார மண்டபத்தில் மனமோகனா எனும் பாரதநாடிய நிகழ்ச்சி. செல்வி திவாஷினி ரமேஷ், ரன்ஜீவ் கிருபராஜா அவர்களின் நெறியால்கையில், பக்கவாத்திய கலைஞர்களாக கேஷிகா அமிர்தலிங்கத்தின் குரலிலும், ஆதித்தன் திருநந்தகுமாரின் மிருதங்கம், திவ்யா விக்னேஷ் புலாங்குழலும், ரன்ஜீவின் நட்டுவாங்கத்தில் இந்த நாட்டிய நிகழ்வு அமைந்திருந்தது.அன்றைய காலத்தில் ஆலயம் என்பது தனியே வழிபாட்டு  அன்றைய காலத்தில் ஆலயம் என்பது தனியே வழிபாட்டு நிலையமாக மட்டுமின்றி ஒரு சமூக நிறுவனமாகவும் இயங்கியது. அதேபோல் இன்று புலம் பெயர்ந்த மண்ணில் ஆலயங்கள் சமூக நிறுவனமாக இயங்குவது மகிழ்ச்சியான விடயமே. அந்த வகையில் சிட்னியில் வைகாசி குன்றில் அமைந்திருகின்ற முருகன் ஆலய சைவமன்றத்தினர் இங்கு வளர்ந்து வருகின்ற இளைய தலைமுறையினர்களை ஊக்குவிக்கும் முகமாக பல கலை கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்தவகையில் மாதந்தோறும் ஒரு கலைநிகழ்ச்சியினை கலாச்சார மண்டபத்தில் நடாத்திவருகின்றனர். இங்கு வளர்ந்து வருகின்ற இளம் பிள்ளைகள் தமது கலை ஆர்வத்தினை வெளிக்காட்டவும், வளர்ப்பதற்கும் நல்லதொரு களம் அமைத்து கொடுப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ்வுலகில் வெவ்வேறு விடையங்களை பூர்த்தி செய்வதற்கு, எவ்வளவு சிறிதான காரியமாக இருந்தாலும், பெரும்பாலும் ஒரு முன்மாதிரியான நபரையோ, உதாரணமாக அல்லது ஒரு குருவை தொடர்ந்து செயல்படுவது வழக்கமாகும். இவ்வகையில் இவ்வுலகில் வாழும்  மானிடர்கள் ஆகிய நாம் தெய்வங்களை பல வழிகளில் வணங்குகின்றோம். பக்தி மார்க்கம் என்பதை நாயன்மார்கள் ஆழ்வார்கள் போன்றவின் மூலமாக நாம் அறிந்திருகின்றோம். இந்த நாட்டிய நிகழ்வில் கேசவனை பக்தி மார்கமாக அமைந்த மூன்று நாயகிகளின் வரலாற்றை மையமாக கொண்டு நாட்டியம் அமைந்திருந்தது.

திவாஷினி ரமேஷ் ஆண்டாளாக பெரியாள்வாரின் மகள்ளாக பிறந்து கண்ணன் மேல் தீராத காதல் கொண்ட காட்சியை


உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது ஆதி தாளத்தில் கங்கைமுத்து நட்டுவனர் இயற்றிய ‘ஆண்டாள் கௌத்துவத்தை’ வழங்கினார். கோதை மாலை சூடிய காட்சி, விஷமாகார கண்ணனின் லீலைகளை தோழிகளோடு பகர்ந்து கொண்டதை, ஜோக் ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘மடல் தந்தானடி’  ரன்ஜீவ் கிருபராஜா இயற்றிய பதம் கேஷிகாவின் குரலிலும்,  பக்கவாத்திய கலைஞர்களின் துணையோடு மிகவும் சிறப்பாக அரங்கத்தில் உள்ளவர்களை மெய் சிலிர்க்க வைத்தார்கள்.


பிரேம பக்தியை கொண்ட ஆண்டாள் கண்ணனின் கதைகளை கேட்டும் மகிழ்ந்தும் கண்ணன் காலிங்க நர்த்தனம் ஆடிய காட்சியை எம் கண் முன்னே கொண்டு வந்து காட்டினார்.

அடுத்து பிருந்தாவனத்தில் கண்ணனின் குழல் ஓசையோடும் அவரது லீலைகளுக்கு வசப்பட்டு கோவிந்தனின் பக்தையாக அவன் மேல் தெய்வீக காதல் கொண்டு பிரிந்தவனநிலையே என்னும் கீர்த்தனம் ரீத்திகௌளை ராகத்தில் அமைந்த நடனம் மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்தது. ராதா தன்னை மறந்து கண்ணனோடு இணைந்த காட்சியினை ‘சக்கி ஹே’, சுத்த சாரங்க ராகத்தில் அமைந்த அஷ்டபத்தியில் அமைந்த பரதம் திவாஷினி கண்களாலும், முக பாவத்தாலும் தன்னை ராதை ஆகவே நினைத்து ஆடியது குறிப்பிடதக்கது. 

ராஜஸ்தான் மாநகரின் ராஜ வம்சஸத்தின் பிறந்த மீரா கிருஷ்ண சிலையை தன் அன்னையிடம் இருந்து பரிசாக பெற்று அந்த சிலையோடு விளையாடி பரம பக்தையான கதையை யமுனா கல்யாணி ராகத்தில் அவர் இயற்றிய ‘குஞ்சன் பன் ஜாடி’, பஜனையில் நாட்டியம் அமைந்திருந்தது.
 திருமண வயதடைந்தப்பின், தனது விருப்பத்திற்குமாராக அமைந்தாலும் அவளது கடமையெய் பூர்த்தி செய்யும் வண்ணம், மேவார் நகர இலவரசன்னோடு விவாகம் இடம்பெற்றது. அனால் இலவரசனின் குடும்பத்தினரோ மீரா கண்ணன் மீது வைத்திருந்த பக்தியை ஏற்கவில்லை.


மீராவின் மனதிலிருந்து கண்ணனை நீக்குவதற்கு பல முயற்சிகள் செய்து நஞ்சினை கலந்த பாலை கொடுத்து, மீராவின் உயிரை மாய்க்க முயன்றார். அனால் கிரிதரனின் கிருபையால் அது அமிர்தமாய் மாறி, கேஷவனின் பூரண தரிசனத்தை மீராவின் ஆண்மா உணர்ந்த கதையை மியன் கி மல்ஹார் ராகத்தில் அமைந்த “மாறா ரே’ பஜன் நடனமாக அமைந்திருந்தது.

நாட்டிய நிகழ்வில் மிகவும் விறு விருப்பாக அமைய கூடிய நடனம் தில்லான. டாக்டர் பாலமுரளிக்ருஷ்ணா இயற்றிய பிரிந்தவனி ராகத்தில் அமைந்த தில்லான நாட்டிய கலைஞரின் திறமையை மேலும் சிறப்படைய செய்திருந்தது. இறுதியாக மங்களம் இடம் பெற்றது.
இளைய தலைமுறையின் இந்த முயற்சி மிகவும் பாராட்ட கூடிய விடயம். இவர்களுக்கு துணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.


No comments: