சிட்னியில் இளங்கோ அடிகளிற்கு சிலை திறப்புவிழா 27/09/2019


சிலப்பதிகாரம் உலக மக்கள் அனைவருக்கும் குடிமக்கள் காப்பியமாக விளங்கும் காப்பியமாக அமைந்துள்ளது. சமய நல்லிணக்கத்தைப் போற்றவும் நல்லறத்தை வலியுறுத்தவும் தமிழும் தமிழினமும் உலகப் புகழ் பெறக் காரணமான சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இயைந்த காப்பியமாகின்றது. தமிழக்துத் தமிழர்களை மட்டுமல்லாது உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்த இளங்கோ அடிகளிற்கு முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மகாநாட்டில் 6 அடி உயர திருஉருவச் சிலை திறப்புவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிட்னியில் தமிழர் மண்டபத்திற்கு முன்பாக மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியல் கழகம் சென்னை தலைவர் நாவுக்கரசி பா. வளர்மதி அவர்களால் மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவார்கள்

தமிழ் வளர்ச்சித்துறை சென்னை இயக்குநர் முனைவர் கோ விசயராகவன் அவர்கள் மாநாட்டை தலைமை ஏற்று இளங்கோவடிகள் சிலையைத் திறந்து வைப்பார்கள்.

சென்னை அம்மா தமிழ்பீடம் தலைவர் சொல்லின் செல்வர் ஆவடிக்குமார் அவர்கள் மாநாட்டில் நிறைவுப் பேருரையை ஆற்றுவார்கள்.


மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் இயக்குநர் (ஒய்வு) முனைவர் கா மு சேகர் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நோக்க உரை ஆற்றுவார்கள்.


No comments: