உலககிலிப்போ பலவடிவில் நிறைந்திருக்கே கூட்டம் ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


போகவிட்டுப் புறஞ்சொல்லி திரியுதொரு கூட்டம்
பொய்பேசி புழுகுரைத்து நிற்குதொரு கூட்டம்

வாழவிடா வழிதேடி வதைக்குதொரு கூட்டம்
வையகத்தில் நிறைந்திருக்கு வகைவகையாய் கூட்டம்
தாயிடத்துப் பரிவுகொளா தானுமொரு கூட்டம்
தள்ளாடும் முதுமைதனை தவிர்க்குமொரு கூட்டம்
நீதிநெறி தனையொதுக்கி நிற்குமொரு கூட்டம்
நீள்புவியில் இப்படியே நிறைந்திருக்கே கூட்டம் !

கடவுளில்லை என்றுரைத்து கட்சிகூட்டும் கூட்டம்
கடமை செய்வார் கழுத்தறுக்க காத்திருக்கும் கூட்டம்
தனியுடமை என்றுரைத்து தான்பிடுங்கும் கூட்டம்
சகலதுமே தெரியுமென்று சவால்விடுக்கும் கூட்டம்
தத்துவத்தை சமயத்தை சாடிநிற்கும் கூட்டம்
சன்மார்க்க நெறிமுறையை தகர்த்துநிற்கும் கூட்டம்  
உத்தமர்கள் போல்நடித்து உருக்காட்டும் கூட்டம்
உலககிலிப்போ பலவடிவில் நிறைந்திருக்கே கூட்டம் !

No comments: