பிர­தமர் ரணிலின் உறு­தி­மொழி !


ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்று  ஆட்சி அமைத்­ததும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கி  இனப்­பி­ரச்­சி­னைக்கு  ஒரு­வ­ரு­ட­கா­லத்­திற்குள் தீர்வை வழங்­குவேன் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிடம்  உறு­தி­ய­ளித்­துள்ளார்.  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன்  தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் சந்­தித்து  பேசி­யி­ருந்தார்.  
இந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வா­றான உறு­தி­மொ­ழி­யினை வழங்­கி­யி­ருக்­கின்றார். அத்­துடன் கல்­முனை வடக்குப் பிர­தேச செய­லக விவ­கா­ரத்­திற்கும் ஒரு­வா­ரத்­திற்குள் தீர்வு வழங்­கு­வ­தா­கவும் பிர­தமர் கூறி­யி­ருக்­கின்றார்.
ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில்  ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்யும் விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள் முரண்­பா­டான நிலைமை நில­வி­வ­ரு­கின்­றது.  கட்­சியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ தன்னை வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்றார். அவ­ருக்கு கட்­சியின் பெரும்­பான்­மை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர்.  இதே­போன்று  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் பங்­காளி கட்­சி­களின் ஆத­ர­வையும் சஜித் பிரே­ம­தாஸ பெற்­றுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.


இந்த  நிலை­யி­லேயே நேற்று முன்­தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அழைத்து சந்­தித்து பேசி­யி­ருந்தார். இதன்­போது  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன்  ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பிலும் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை பூர்த்தி செய்­ய­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எடுத்­துக்­கூறி­யுள்ளார்.
ஜனா­தி­பதி  தேர்­த­லுக்­கான ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வேட்­பாளர் தெரிவு எமது பிரச்­சி­னை­யல்ல. அது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரச்­சினை.  ஆனால் அவ்­வாறு தெரி­வு­செய்­யப்­படும் வேட்­பாளர் தேசிய பிரச்­சி­னைக்கு  தீர்வை வழங்க முன்­வைக்கும்  வாக்­கு­றுதி என்ன என்­பதை தெரி­விக்­க­வேண்டும். புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­படுமா? எமது நீண்­ட­கால பிரச்­சி­னைக்­கான உறு­தி­யான தீர்­வாக எதனை முன்­வைக்­கப்­போ­கின்­றீர்கள்  என்­பதே எமக்கு அவ­சி­ய­மாகும்.
ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தீர்­மானம் என்ன என்­பதை எமக்கு கூறினால் மட்­டுமே எமது அடுத்த கட்ட தீர்­மா­னத்தை எடுக்க முடியும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
இத­னை­ய­டுத்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  அடுத்த ஒரு­வ­ரு­ட­கா­லத்­திற்குள்  புதிய அர­சி­யல் ­யாப்பை கொண்­டு­வந்து அதன்­மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும்.  அதே­போன்றே கல்­முனை வடக்கு பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­படும் என்று  வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ளார்.
அண்­மையில்  யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம்  செய்­தி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அங்கு இடம்­பெற்ற  பொதுக்­கூட்­ட­மொன்றில்  உரை­யாற்­றி­ய­போதும் அர­சியல் யாப்பு பேர­வையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள  யோச­னைக்­க­மைய அதி­கா­ரப்­பகிர்வின் மூலம் அர­சியல் தீர்வுகாண்­பதே  தனது எண்ணம் என்­பதை  சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.  இந்த பொதுக்­கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்  பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற  உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன்  ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அர­சியல் தீர்வு தொடர்­பான நிலைப்­பாடு என்ன என்­பதை பிர­தமர் அறி­விக்­க­வேண்டும் என்று கேட்­டுக்­கொண்­டி­ருந்தார். இதற்கு இணங்­கவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது நிலைப்­பாட்டை  எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தார்.
நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து  இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண­மு­டியும் என்று  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைமை பெரும் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தது.  தென்­ப­கு­தியில்  எதிரும் புதி­ரு­மான கட்­சி­க­ளான  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒன்­றி­ணைந்து ஆட்சி அமைத்­த­தை­ய­டுத்து இந்த நம்­பிக்கை ஏற்­பட்­டி­ருந்­தது.  2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்­திற்குள்  இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று  சம்­பந்தன் பல தட­வைகள் நம்­பிக்கை வெளி­யிட்­டி­ருந்தார். அதன் பின்னர் கூட 2017ஆம் ஆண்டு இறு­திக்குள் தீர்வு காணப்­படும் என்றும் அடுத்த தீபா­வளி பண்­டி­கைக்குள் தீர்­வினை காண முடியும் என்றும் அவர் எதிர்­பார்த்­தி­ருந்தார்.
2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடை­பெற்­ற ­ஜ­னா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட்­டி­ருந்­த­போது  அவரை ஆத­ரிப்­பது குறித்த கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. இதில் பொது எதி­ர­ணியின் சார்பில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, அப்­போ­தைய எதிர்க்­கட்சித் தலை­வரும்  தற்­போ­தைய பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகிய மூவரும் சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வர்­களை சந்­தித்து பேசி­யி­ருந்­தனர்.  
இந்த சந்­திப்­பின்­போது தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் அடிப்­படைப் பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்­டிய  விவ­காரம் தொடர்­பிலும் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.  இதன்­போது அர­சியல் தீர்­வுக்­கான உறு­தி­மொ­ழி­யினை எழுத்­து­மூலம் வழங்­கு­வ­தற்கு  முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க விருப்பம் தெரி­வித்த  போதிலும் அத்­த­கைய நிலைப்­பாடு  ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ர­ணியின் வேட்­பா­ள­ருக்கு தோல்­வியை  கொண்­டு­வந்­து­விடும் என்று கரு­திய கூட்­ட­மைப்பின் தலைமை அத்­த­கைய எழுத்­து­மூல உடன்­பாடு தேவை­யில்லை என்றும் வாய்­மூல இணக்­கப்­பாடு போது­மா­னது என்றும்  தெரி­வித்­தி­ருந்­தது.
அவ்­வாறு  பெரும் நம்­பிக்கை கொண்டே கூட்­ட­மைப்­பின் ­த­லைமை  செயற்­பட்­டி­ருந்­தது.  இதற்கு காரணம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான  அர­சாங்­கத்தை மாற்­ற­வேண்டும் என்ற நிலைப்­பாடு மேலோங்­கி­யி­ருந்­த­மையே ஆகும். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது பொது எதி­ரணி வேட்­பா­ளரை ஆத­ரிப்­பது குறித்து தீர்­மானம் எடுப்­ப­தற்கு முன்­னரே தமிழ் மக்கள் அத்­த­கைய தீர்­மா­னத்தை எடுத்­தி­ருந்­தனர்.  தபால் மூல வாக்­க­ளிப்பின் பின்­னரே  கூட்­ட­மைப்பு தனது முடிவை அறி­வித்­தி­ருந்­தது. ஆனால் தபால் மூல வாக்­க­ளிப்­பி­லேயே தமிழ் மக்கள் எதி­ரியின் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தமை  பின்னர் தெரி­ய­ வந்­தி­ருந்­தது.
இவ்­வாறு  இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டி­ருந்­த­மை­யி­னா­லேயே  விரைவில் தீர்­வினை கண்­டு­வி­டலாம்  என்று கூட்­ட­மைப்பு நம்­பிக்கை கொண்­டி­ருந்­தது.  இதற்­கி­ணங்க புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்கி அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்ட போதிலும் அவை துரி­த ­க­தியில் இடம்­பெ­ற­வில்லை என்­பதே உண்­மை­யாகும். அத்­துடன்  நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­வுடன் அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருந்தால் அந்த முயற்­சியில் ஓர­ளவு வெற்­றியும் கண்­டி­ருக்க முடியும். ஆனால்  நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி  முறைமை ஒழிப்பு விட­யத்­திலும்  தேர்தல் முறை மாற்­றத்­திலும் காட்­டிய அக்­கறை அர­சியல் தீர்வு விட­யத்தில் காட்­டப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு மேலெ­ழுந்­தி­ருந்­தது.  அர­சியல் தீர்வு விட­யமும் புதிய அர­சியல் யாப்பில் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்டும் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யதை அடுத்தே அதற்கான முயற்சியும் எடுக்கப் பட்டது என்பதே  உண்மையாகும்.
அரசாங்கம் பதவியேற்றவுடனேயே ஏனைய விடயங்களுக்கு முன்னராக அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்ந்திருந்தால் உடனடி நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஆட்சி மாற்றம் இடம்பெற்றவுடன் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ்  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  அதன் போது அரசியல் தீர்வு தொடர்பில் ஆராயப்படவில்லை.
காலம் பிந்தி ஆரம்பிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான முயற்சி  தற்போது இடைநடுவில் கைவிடப் பட்டிருக்கின்றது.  அடுத்த ஜனாதி­பதி தேர்தலும் தற்போது வந்து விட்டது. இவ்வாறான நிலையில் தான் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றதும் ஒருவருட காலத்திற்குள்  புதிய அரசியலமைப்பை உருவாக்கி தீர்வை வழங்கு­வதாக பிரதமர் உறுதி வழங்கியிருக்கிறார்.  தற்போதைய நிலையில் மாற்று வேட்பாளர்களின்  நிலைப்பாடுகளையும் கேட்டறிந்து  சிறந்ததொரு முடிவுக்கு வருவதே  கூட்டமைப்பினரின் பணியாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்பு­கின்றோம்.

No comments: