சல்மான் கானுக்கு தண்டனை வாங்கி தந்த போலிஸ்காரருக்கு நடந்த கொடூரம்!

.


12 வருடம் முன்பு இரவொன்றில்..மும்பை பாந்த்ராவில்..சல்மான் கான் தன் வண்டியை...பேக்கரி வாசலில் படுத்திருந்த ஏழைகள் 5 பேர் மீது ஏற்றியதில், ஒருவர் இறக்க, மீதி நான்கு பேருக்கு மரண அடி.

சல்மானின் போதாத வேளை, இதை கண்ணால் பார்த்தது ரவீந்திர பாடில் என்ற மும்பையின் கடை நிலை காவலர்.. இவருக்குமே இது போதாத வேளையாய் அமைந்தது..

ரவீந்திர பாடில் கோர்ட்டில் சல்மான் தான் வண்டியை ஓட்டினார் அவர் தான் இடித்தார் என்று ஆணித்தரமாய் சாட்சி சொல்லி எப் ஐ ரும் கைப்பட போட.... சல்மானால் இதில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை. இதற்கு நடுவில், பாடில் இப்படி சொன்னது, காவல் துறை மேல் அதிகாரிகளுக்கு பிடிக்கவே இல்லை. தினம் தினம் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்து, உன்னுடைய சாட்சியை வாபஸ் வாங்கு என்று கெஞ்சி, மிரட்டி இன்னும் குடும்பத்துக்கும் தொல்லை கொடுத்தனர்.

இதைவிட, சல்மான் தன் நிபுணத்துவ வக்கீல்களால் ஒரு சாதாரண காவலரை கோர்ட்டில் குடைய, வெறுத்துப்போன பாடில், ஒரு நாள் வீட்டை விட்டு கிளம்பி காணாமல் போனார். காணாமல் போன பாட்டில் மும்பைக்கு 28 கிலோ மீட்டர் அருகில் உள்ள, மஹாபலேஷவர் என்ற சிறிய மலை ஊரில் தங்கிக்கொண்டு, வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு இருந்தார்.

அப்போது, கோர்ட்டு நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப்போனது . சல்மானுக்கு எதிராய் சாட்சி சொன்ன பலரும் பல்டியடிக்க ,ஏன் கார் ஏறிய ஐந்து பேருமே கூட ஒரு ஸ்டேஜில் சல்மானா..? இவர் மாதிரி இல்லையே எங்கள்


மேல் இடித்த காரின் டிரைவர் என்று பல்டியடிக்க.., பாடில் மட்டும் தன் சாட்சியில் பிடிவாதமாய் இருக்க.., அப்போதுதான் மும்பை போலிஸ் விழித்துக்கொண்டது..

பாடில் காணாமல் போனதோடு.. லீவ் கூட போடாமல் போனார் என்று.. அவரை, வேலையில் இருந்து தூக்கியதுமட்டும் அல்லாமல், கோர்டில் இந்த காணமல் போன சாட்சியை காவலில் வைக்க ஆவன செய்யப்பட்டது.
விதி வலியது. சாட்சி மற்றும் எப் ஐ ஆர் போட்ட நேர்மையான போலிஸ்காரர் ... ஜட்ஜின் ஆணைப்படி சிறப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, ஆர்தர் ரோடு ஜெயிலில் கிரிமினல்களோடு அடைக்கப்பட்டார்.
கிரிமினல்களுக்கு, போலிஸ் ஆசாமி கைதாகி ஜெயிலுக்குள் வந்தால் அல்வா மாதிரி... இவர் தனி செல்லில்.. அடைக்கப்பட.. கொஞ்ச நாளிலேயே , டிபி வியாதியும் வந்தது.

வேலை திருப்பிதரச் சொல்லி கேட்டு போட்ட மனு எல்லாம் குப்பைக்கூடையில்.. இவரை வெளியில் விட்ட ஒரு சில நாளில்..இவரின் குடும்பம் இவரை மொத்தமாய் கைகழுவியது, ஜெயிலில் இருந்து வெளியில் வந்து தெருவில் பிச்சை எடுத்து அலைந்து கொண்டிருந்தார். 4ஆவது வார்டில், 189ஆம் பெட்டில், சீவ்டி முனிசிபல் ஆஸ்பத்திரியில் அக்டோபர் 4 2007இல் செத்தும்போனார். இவர் உடலை வாங்க இவர் குடும்பம் கூட வரவில்லை...

நம்ம சல்மான் கான்.. பீயிங் ஹியுமன் என்று ஒரு இமேஜ் மேக் ஓவர் செய்து வலம் வந்தார், பிக் பாசில் குப்பை ஆசாமிகளை வைத்து நடத்திய ஷோக்களில் கோடிகள் கிடைத்தது, சினிமா கைவிடவில்லை. நான் ரொம்ப நல்லவன், என் டிரைவர் தான் இடித்து கொன்றார் என்றெல்லாம் சொன்னதை கோர்ட் ஏற்கவே இல்லை. .. பணபலம், கை தேர்ந்த வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், போலிஸ் வேடமணிந்த ப்ரோக்கர்கள்.. கதறும் ரசிக குஞ்சுகள் என்று யாராலுமே தடுத்து நிறுத்த முடியவில்லை...

பாடிலின் சாட்சியையும்,எப்ஐஆரையும். கோர்ட் தீர்ப்பு மட்டும் 5 வருடம் என்று இல்லாவிட்டால்.. மாம்பழ மனிதர்களும், வாழைப்பழ குடியரசும் என்று ராபர்ட் வாத்ரா சொன்னது நிரூபிக்கப்பட்டிருக்கும். 


nantri http://pokkizham.blogspot.com/

No comments: