.
காவிரிமைந்தன்
வாழ்க்கையென்பது இன்ப துன்பங்களின் சங்கிலித் தொடர்தான்! இங்கே வலி இல்லாமல் வழி இல்லை! சில வழிகளை நாம் சந்தித்திருக்கிறோம்! அவை நம்மை கடந்து போயிருக்கின்றன! சில வழிகளை நாம் சந்திக்கப் போகிறோம்! ஒவ்வொரு வலியிளிரிந்தும் விடுபட ஏதோ ஒரு வழி கிடைக்கத்தான் செய்கிறது! வெறும் வலியோடு வாழ்வது வாழ்க்கையில்லை! அதில் மீண்டு வாழத்துவங்குகிற திறனும் அறிவும் நம்மைச் சார்ந்ததே! எத்தனை முறை நாம் விழுகின்றோம் என்பது முக்கியமல்ல.. அப்போதெல்லாம் எத்தனை முறை எழுந்து விடுகிறோம் என்பதே முக்கியமானது! எண்ணியதெல்லாம் கிடைத்து விட்டால் பிறகு ரசிப்பதற்கு ஒன்றுமிருக்காது! அதாவது.. வாழ்வில் ரசமிருக்காது! ஏதோ ஒன்றை நோக்கிய நகர்வு இருந்து கொண்டே இருக்க வேண்டும்! இன்று அல்லது நாளை அது நடந்துவிடும் அல்லது கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கைதான் வாழும் வாழ்க்கைக்கு ஆதாரம்! சில நேரங்களில் நமது முயற்சிகள் பலன்அளிக்காமல் போகலாம்! ஆனாலும் முயற்சிப்பதை நாம் நிறுத்திவிடக் கூடாது! உயிருள்ளவரை.. 'மூச்சும், பேச்சும்' நிற்பதில்லையே.. எனவே இயக்கம் என்று வந்து விட்டால் இயங்கும் நிலையிலிருந்து மாறுபடக் கூடாது!
வாழ நினைப்பதும் வாழ்ந்து காட்டுவதும் நமது இலட்சியங்கள்! எந்த மனிதனுக்குத் துன்பமில்லை? எந்த மனம் வெறும் இன்பங்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டிருக்கிறது? இல்லையே.. பிறக்கும்போதே அழுது பிறப்பதும்.. இறக்கும்போது பிறரை அழ வைப்பதும் ரகசிய சாசனமாய் படைத்தவன் எழுதி வைத்திருக்கிறான். சிரிப்பு பாதி.. அழுகை பாதி.. சேர்ந்ததல்லவோ மனித ஜாதி என்று கவியரசரின் கரம் பல்லவியிலேயே ஒரு தீர்ப்பை எழுதி வைத்திருகிறது! எல்லாம் சரி.. இவை யாவும் பிரச்சினைகள்.. இவைகளுக்குத் தீர்வு எங்கே? இவைகளைக் கடக்கும்போது மனதை எப்படி பக்குவப் படுத்துவது? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடைகளைக் காண்போமா?
தனி மனிதன் ஒவ்வொருவரும் வாழ வழியிருக்கிறது என்றாலும் தனி மனிதன் மட்டும் வாழ்வதற்காக இந்த உலகம் படைக்கப்படவில்லை.. நமக்காக.. நம்மைச் சுற்றி.. பல்வேறு சொந்தங்கள்.. உறவுகள்.. தோழமைகள்.. இவர்களில் நம் வாழ்வில் உண்மையான அன்பும் அக்கறையும் செளுத்துபவர்களிடம் இதயம் திறந்து உரையாடலாம்! கருத்துக்கள் பரிமாறலாம்! தனக்கென்று ஓர் உறவு.. தனக்கென்று ஓர் உலகம் என்கிற தாத்பரியங்கள் இங்குதான் தொடங்குகின்றன!
"அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும்" என்று ஆண்டவன் கட்டளையில் அருள்மொழி பொழிந்திருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்..பெண்மையும் ஆண்மையும் கொண்டாடப்படும்போது எந்த துன்பங்களும் இல்லாமல் போகும்! ஏதோ ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை அவனுக்கு அவளும்.. அவளுக்கு அவனும் தந்துவிட முடியும்!
அன்பு வாசகர்களே.. இதோ ஓர் கீதாஞ்சலி..
வரிக்கு வரி வசந்த விழா எடுக்கலாம் பட்டுக்கோட்டையார் பாடலுக்கு..
ஆம் இசைக்கு ஒரு சக்தி இருக்கிறது!
இசைகூட நம் திசை மாற்றலாம்! இன்பம் ஊட்டலாம்!
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
கிள்ளாத ஆசையை கிள்ளூம்
இன்பத்தேனையும் வெல்லும் - இசை
இன்பத்தேனையும் வெல்லும்
துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத்தருவதும் கீதம்
எங்கும் சிதறும் எண்னங்களையும் இழுத்து வருவது கீதம்
இணைத்து மகிழ்வது கீதம் - துயர் இருளை மறைப்பதும் கீதம் ......(துள்ளாத மனமும்)
சோர்ந்த பயிரும் நீரைக்கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக்கண்டால் தாவி அணைத்தே படர்ந்திடும்
மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும்
உறவு கொண்டால் இணைந்திடும் அதில் உண்மை இன்பம் விளைந்திடும் --- (துள்ளாத மனமும்)
சொல்லாத கதைகள் சொல்லும்
கிள்ளாத ஆசையை கிள்ளூம்
இன்பத்தேனையும் வெல்லும் - இசை
இன்பத்தேனையும் வெல்லும்
துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத்தருவதும் கீதம்
எங்கும் சிதறும் எண்னங்களையும் இழுத்து வருவது கீதம்
இணைத்து மகிழ்வது கீதம் - துயர் இருளை மறைப்பதும் கீதம் ......(துள்ளாத மனமும்)
சோர்ந்த பயிரும் நீரைக்கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக்கண்டால் தாவி அணைத்தே படர்ந்திடும்
மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும்
உறவு கொண்டால் இணைந்திடும் அதில் உண்மை இன்பம் விளைந்திடும் --- (துள்ளாத மனமும்)
சந்திப்போம் அடுத்தப் பகுதியில்...
No comments:
Post a Comment