.
மே 9, 1945 சோவியத்தில் வெற்றி தினம் கொண்டாடப்பட்ட நாள்
1945ஆம் ஆண்டு இதே நாளில்தான் இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவிடம், ஜெர்மனி தோல்வி அடைந்ததை ஒப்புக்கொண்டதற்கான ஒப்பந்தம் நிறைவேறியது. 1941ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மீது ஹிட்லர் போர் தொடுத்தார். தொடக்கத்தில் ஜெர்மனி படைகள் வெற்றிகளைக் குவித்து தலைநகர் மாஸ்கோ நோக்கி வேகமாக முன்னேறின.
1945ஆம் ஆண்டு இதே நாளில்தான் இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவிடம், ஜெர்மனி தோல்வி அடைந்ததை ஒப்புக்கொண்டதற்கான ஒப்பந்தம் நிறைவேறியது. 1941ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மீது ஹிட்லர் போர் தொடுத்தார். தொடக்கத்தில் ஜெர்மனி படைகள் வெற்றிகளைக் குவித்து தலைநகர் மாஸ்கோ நோக்கி வேகமாக முன்னேறின.
எனினும் ரஷ்யாவின் கடுங்குளிர், செம்படைகளின் கடும் தாக்குதல் போன்றவற்றால் ஜெர்மனி படைகளுக்குப் பின்னடைவு ஏற்படத் தொடங்கியது. இதைப்பயன்படுத்தி செம்படையினர் ஜெர்மனி படைகள் கைப்பற்றிய பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு முன்னேறத் தொடங்கினர்.
1945ஆம் ஆண்டு செம்படைகள் பெர்லினை நெருங்கியதை அறிந்த ஹிட்லர் ஏப்ரல் 30ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஜெர்மனி ராணுவம் தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடையும் ஒப்பந்தம் 1945ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி நள்ளிரவு பெர்லின் நகரில் கையெழுத்தானது.
அப்போது ரஷ்யாவில் மே 9ஆம் தேதியாக இருந்ததால் அன்றைய தினம் வெற்றி தினமாகக் கொண்டாடப்பட்டது. 1955ஆம் ஆண்டு இதே நாளில் மேற்கு ஜெர்மனி நேட்டோ எனப்படும் வடஅட்லாண்டிக் ராணுவக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவில் சோவியத் கைப்பற்றிய ஜெர்மனி நாட்டின் பகுதிகள் கிழக்கு ஜெர்மனி என்றும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கைப்பற்றிய பகுதிகள் மேற்கு ஜெர்மனி என்றும் அழைக்கப்பட்டன. உலகப் போர் நிறைவடைந்து
மே 9, 1955 நேட்டோவில் மேற்கு ஜெர்மனி உறுப்பினரான நாள்
10ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்தி இருந்த நேட்டோ எனப்படும் ராணுவக் கூட்டமைப்பில் 1955ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி, மேற்கு ஜெர்மனி உறுப்பினராக இணைந்தது. ரஷ்யா தனது கூட்டணியை விரிவுபடுத்துவதைத் தடுக்கவும், மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பைப் பெறவும் மேற்கு ஜெர்மனி இவ்வாறு செயல்பட்டது.
இதற்கு பதிலடியாக சோவியத் ஒன்றியம், வார்சா ஒப்பந்த நாடுகள் என்ற ராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்தியது. இதில் கிழக்கு ஜெர்மனி உட்பட சோவியத் கூட்டணி நாடுகள் உறுப்பினர்களாகச் சேர்ந்தன.
சுமார் 35 ஆண்டுகள் வரை இரண்டு ஜெர்மனிகளும், தனித்தனியாக இரண்டு ராணுவக் கூட்டமைப்பில் நீடித்தன. சோவியத் ஒன்றியம் சிதறிய பிறகு 1990ஆம் ஆண்டு இரு ஜெர்மனிகளும் இணைந்து ஒரே நாடானது. ஒன்றுபட்ட ஜெர்மனி நேட்டோ கூட்டமைப்பில் நீடித்தது.
No comments:
Post a Comment