தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை

.
             --பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி          
   
 சென்ற ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 .30 மணிக்கு தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2015 அருள்மிகு துர்க்கை அம்மன் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் அவை நிறைந்த தமிழ் அன்பர்களுடன் கோலாகலமாகவும் வெற்றி விழாவாகவும்;  நடைபெற்றது.

திருவள்ளுவரைக் கௌரவித்தமை --
சான்றோர் விழா ஆரம்பமாவதற்குப் 15 நிமிடங்கள் முன்பதாக திருவள்ளுவர் சிலைக்கு மலர்மாலை அணியப்பட்டது.
இவ்வருடம் உலக சைவப் பேரவை புதிதாகவும் ஒரு முன்மாதிரியுமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதாவது உலகத் தமிழ் மறை நூலெனப் போற்றப்படும் திருக்குறளை யாத்த பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தபின் குறளில் இருந்து  சில குறட்பாக்களைப் பேராசிரியர் பரமேஸ்வரன் அவர்கள் இசைத்தார்கள். இதைத் தொடர்ந்து திருமதி  பரமேஸ்வரனும்   மிகவும் அழகாகப்      பாடினார்கள்.(அம்மன் வளாகத்தில் தமிழர் மண்டபத்திற்கு முன்பாகத் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவர்) இந்த நிகழ்ச்சி எல்லோரையும் பரவசப்படுத்தியது.தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2015
திருவள்ளுவரைக் கௌரவித்ததைத்  தொடர்ந்து ‘யாழ் நூல்’தந்த விபுலானந்த அடிகளாரையும் ‘தமிழ்த்;தென்றல்’ திரு வி. கல்யாணசுந்தரனாரையும் நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்ட சான்றோர் விழா ஆரம்பமானது.
 ;    உத்தமனார் உறைவதற்கே உள்ளமென்ற கமலம் உகந்ததென்று பாடி நற்றமிழர் போற்றிவந்த நாடகமும் இசையும் நலியாது காத்திட யாழ்நூல் தந்தவர் மீன்பாடும் மட்டுநகர் சுவாமி விபுலானந்தர்   அவர்கள். அமிழ்தமாம் இளமை குன்றா அருந்தமிழ் மொழிக்கு அளப்பரிய பணியியற்றி அணிகள் பூட்டித் தமிழ் மணக்க உலகரங்;கிற் பெருமை சேர்த்துத் தமிழ்ப் பணி செய்தவர் தமிழ் நாடு தந்த “தமிழ்த் தென்றல்” திரு வி. கல்யாணசுந்தரனார் அவர்கள். திருமதி அபரஞ்சனி ஹரன் அவர்களின் தேவார இசையுடன் மங்கல விளக்கேற்றப்பட்டது. ‘இல்லற விளக்கது’ என்ற தேவாரம் இசைத்தபொழுது சிட்னியின் பிரபல ஓவியரும் சைவ-தமிழ் ஆர்வலருமான திருவாளர் ஞானசேகரம் அவர்கள், உலக சைவப் பேரவையின் முன்னாள் தலைவர்; கலாநிதி திருமதி அனந்தசயனன், பிரபல சட்டத்தரணி திரு செந்தில்ராஜன் திருமதி செந்தில்ராஜன், கலாநிதி கௌரிபாலன் ஆகியோர் மங்கல விளக்கேற்றினார்கள்..


(தேவாரம் பாடிய திருமதி அபரஞ்சனி ஹரன்


செல்வி  மகிசா  பூபாலசிங்கம்  - செல்வி அபிசா  பூபாலசிங்கம் செல்வி சிறீ வேதா சிங்கராயர் செல்வி சுஸ்மிதா, செல்வி சுலஸ்மி ஆகியோர் தமிழ்த் தாய் வாழ்த்தும் தேசிய கீதமமும் இசைத்தார்கள்.


திருமதி பாலம் லஷ்மணன் அவர்கள்  ஆசி உரை வழங்குகையில் “உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியாவும் தமிழ் இலக்கியக் கலை மன்றமும் இணைந்து இரு பெரும் சான்றோர்களுக்கு விழா எடுப்பது மகிழ்ச்சி தருகின்றது. கிழக்கிலங்கை மண்ணின் மைந்தரான விபுலானந்த அடிகளார் அவர்களுக்கும் தமிழகத்தின் சிறந்த அறிஞரும் சமூக சிந்தனையாளருமான திரு வி. கஅவர்களுக்கும் இணைந்து விழா எடுப்பது மிகுந்த பொருத்தமாக உள்ளது. இருவரும் ஏறக்குறைய சம காலத்தவர்கள். விபுலானந்த அடிகள் இராமகிருஸ்ண மடத்திலே சேர்ந்து துறவியானவர் என்பதோடு மூன்று பிரபல்யமான சஞ்சிகைகளுக்கும் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றியது அவரின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் சான்றாக உள்ளது. இராமகிருஸ்ண விஜயம்ää வேதாந்தகேசரிää பிரபுத்த பாரதம் ஆகிய சஞ்சிகைகளுக்குத்தான் ஆசிரியராகப் பணியாற்றியவர. ஆங்கில இதழான பிரபுத்த பாரதம் இமயமலை அடிவாரத்திலுள்ள ‘அல்மோறா’ என்ற இடத்திலிருந்து வெளிவந்தது.  இந்தச் சஞ்சிகை வடநாட்டவர்களுக்குத் தென்நாட்டவர்களின் தமிழ்ச் சங்க நூல்கள்ää இலக்கியங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் சஞ்சிகையாக விளங்கியது” என்று அடிகளாரைப்பற்றிச் சித்தரித்தவர் ………..  
“சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இலங்கைப் பல்கலைக் கழகமும் இவரின் ஆற்றலை மதித்து இவரைத் தமது முதல் தமிழ்ப் பேராசிரியராக நியமனஞ்செய்து கௌரவித்துத் தமக்குப் பெருமை தேடிக்கொண்டன. இவை எல்லாவற்றையும்விட அவரின் படைப்புகளுக்கு முடிமணியாகத் திகழ்வது இவர் யாத்த யாழ் நூல். திருஞானசம்பந்தரோடு உடன் யாழ் மிழற்றிக்கொண்டிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் ஆகியோரின் வரலாற்றுச் செய்திகளில் அடிகளாரின் கவனத்தை ஈர்த்தது யாழ். யாழைப் பற்pயே சிந்தித்து அவர் மறைந்திருந்த கருவியை மீட்டுத் தந்ததுடன் யாழைப் பற்றியும் தமிழ் இசையைப் பற்றியும் மிக விரிவாக ஆராய்ந்து எழுதிய நூலே யாழ் நூல். கரந்தைத் தமிழ்ச் சங்கம் இவரை மிகவும் சிறந்த முறையில் கௌரவித்துக் கொண்டாடி யாழ் நூலை வெளியிட்டது. எமது துர்அதிஸ்டமாக யாழ் நூல் வெளியிடப்பட்டுச் சிர மாதங்களுக்குள் இவர் இயற்கை எய்தினார்” என அடிகளார் பற்றி மேலும் பல தகவல்களைத் தந்தார்..
அவர் தொடர்ந்து பேசுகையில்ää “திரு வி. க அவர்கள் தமிழுக்குஒரு புதிய நடையை ஏற்படுத்திக் கொடுத்த பெரியதோர் அறிஞராவார். ஏளிய நடை – சிறிய வாக்கியங்கள் என்று தமிழுக்குப் புதிய நெறியை – எழுதும் வழியை அறிமுகப்படுத்தி வைத்தவர். இந்திய தேசீயப் போராட்ட நீரோட்டத்தில் தன்னை  ஈடுபடுத்திக் கொண்டவர். தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டுத் தொழிற் சங்கங்கள் நிறுவிய பெருமையும் அவரைச் சார்ந்ததே. தேசபக்தன்ää நவசக்தி என்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து தேசீய சிந்தனைகளை மிகவும் வலுவான எழுத்துக்களாலே தந்தவர். யாழ்ப்பாணம் கதிரவேற்பிள்ளையிடம் கல்வி கற்ற மாணவர் திரு வி. க. அத்தடன் அவர்  திருப் பாதிரிப் புலிêர் ஞானியார் சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர். சைவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் ‘பெண்ணன் பெருமை’ ‘காந்தீயம்’ ஆகியவற்றில் ஏராளமான நூல்களை எமக்கு அளித்துள்ளார். சான்றோர்களுக்கு நாம் விழா எடுப்பது அப்பர் பெருமான் சொல்வது போல அமையும்.
ஞானத்தால் தொழவர் சில ஞானியர்                            ஞானத்தால் தொழுவேன் உனை நானலேன்                        ஞானத்தால் தொழுவார் தொழக்கண்டு                              ஞானத்தால் உனை நானும் தொழுவனே!”  என்பது அப்பர் வாக்கு. அதன்படி இந்தச் சிந்தனையாளர்களுடைய சீரிய வாழ்வும் வாக்கும் கலங்கரை விளக்கமாக நின்று வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறிகளை நமக்கு அளிக்கும். எனவே இந்தச் சான்றோர் விழாவிலே அவர்களுடைய சீரிய சிந்தனைகளில் ஒரு சிறு துளியையாவது நம் மனதிற் பதித்துக் கொண்டால் அதுவே இந்த விழாவை அர்த்தம் உள்ளதாக்கும்” என்று கூறி அறிவுச் சுடராக அரங்குகளிலெல்லாம் அறிவொளி காலும் திருமதி பாலம் லÑ;மணன் தனது ஆசி உரையை நிறைவு செய்தார்.(ஆசி உரை வழங்கிய திருமதி பாலம் லÑ;மணன் அவர்கள);


(தமிழர் மண்டபம் நிறைந்த அவையினரில் ஒரு பகுதி)


இந்;த நிகழ்ச்சியை அடுத்து ---  சிட்னியிலே இளந் தலைமுறையினரின் குரல் தமிழிலே ஒலிக்க இளைஞர் தமிழ்ச் சங்கம் அமைத்துப் பல சுவை நிகழ்ச்சிகளிலே திறம்படத் தனது திறமையை வெளிக்காட்டிவரும் செல்வி மாதுமை கோணேஸ்வரன்.  “ முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்;” என்னும் தலைப்பிலே திறமையான ஒருசிற்றுரையை வழங்கினார்.


செல்வி மாதுமை கோணேஸ்வரனின் எழுச்சி உரையை இந்த—லுழரவுரடிந  கேட்கலாம்.
பேராசிரியர் ஞானா குலேந்திரன் அவர்களின் சிறப்புரை  - பலமொழி பயின்ற நல்லாசிரியராகி – ஆற்றல் மிகுந்த பாடசாலை அதிபராகி – தலை சிறந்த எழுத்தாளராகி  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் இலங்கை பல்கலைக் கழகத்திலும் பலர் மெச்சிய தமிழ்ப் பேராசிரியராகி – சிறந்த கவிஞராகி – விஞ்ஞானமேதையாகி – ஆன்மிகத்தில் சிறந்த துறவியாகி - இப்படிப் பன்முக ஆளுமையைத் தன்னகத்தே கொண்டுயர்ந்த மாமேதையைப்பற்றி “நான் கண்ட விபுலானந்தர்” என்னும் தலையங்கத்தில் சிறப்புரை ஆற்ற வருகை தந்தவர் முன்னாட் பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் அவர்கள்.
(பேராசிரியர் ஞானா குலேந்திரன் அவர்கள் பற்றிச் சில வார்த்தைகள்…..
தமிழ் ஆசிரியத்தொழிலை யாழ் வேம்படி மகளிர் யாழ் பல்கலைக் கழகத்தில் 8கல்லூரியிலே ஆரம்பித்துப் பின்னர் தஞ்சாëர் பல்கலைக்கழகத்தில் நிரந்தரப் பேராசிரியராகப் பதவியேற்ற முதல் தமிழ்ப் பெண்மணி என்ற கௌரவத்தைப்பெற்று அங்கே தொடர்ந்து 21 ஆண்டுகள் பேராசிரியராகவும் கலைத்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர் . 13 ஆராய்ச்சி நூல்களை எழுதிய இவரின் “பரத இசை மரபு” என்னும் நூல் தமிழக அரசால் சிறப்பு நூல் எனப் பாராட்டப்பட்டுப் பரிசு வழங்கப்பட்டது. )


தமிழ் வளர்த்த சான்றோர் விழாவை ஏற்படுத்திய திரு அருச்சுனமணி அவர்களைத் தலைவராகக் கொண்டிலங்கும்  உலக சைவப் பேரவைச் செயற்குழு உறுப்பினரையும்ää விழா அமைப்பாளர் டாக்டர் இளமுருகனார் பாரதிää தமிழ் இலக்கியக் கலை மன்றத் தலைவர் திரு மகேந்திரன் மற்றும் அவையினரையும்  வணங்கி வாழ்த்தியபின் தனது சிறப்புரையைத் தொடங்கினார். “பலமொழி பயின்று  பன்முக ஆளுமையைத் தன்னகத்தே கொண்;டிருந்தவர் சுவாமி விபுலானந்தர். அவரை உலகறியச் செய்தது அவர் இயற்றிய யாழ் நூலே. இது அவரின்  ஒரு தனித்துவம் மிக்க நூலாக விளங்குகின்றது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதலாவது தமிழ்த்துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டமையும்ää இலங்கையிலே கொழும்புப் பல்கலைக் கழகத்தல் தமிழ்த்துறையில் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டமையும் அவரின் அசாத்திய திறமைக்கு எடு:த்துக்காட்டாகிறது.
இவர் எழுதிய சிறந்த 5நூல்களில் மிகவும் பிரசித்திபெற்று இவரின் புகழை உச்சநிலைக்குக் கொண்டுசென்ற நூல் யாழ் நூல்.- அவரை நன்றிக் கடனோடு நினைவு கூர வைப்பது யாழ் நூலே! இது ஒரு கட்டுரைத் தொகுப்போ – மொழிபெயர்ப்போ – நாவலோ  சிறுகதையோ அல்ல. இது முழுமையான ஒரு ஆராய்ச்சி நூல். இவரின் ஆராய்ச்சி பல காலமாக நடைபெற்றது.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலே கர்நாடக இசை – தெலுங்கிலும் - வடமொழியிலும் - கன்னடத்திலும் - மலையாளத்திலும் கோலோச்சிக் கொண்டிருந்தது. அப்பொழுதெல்லாம் தமிழர்கள் கர்நாடக இசையில் தமிழ்ப் பாடல் கள் இடம்அபறாதமைபற்றிச் சிரத்தை எடுத்ததாகத் தெரியவில்லை; பொதுவில் சிரத்தை எடுதத்ததாகத் தெரியவில்லை. கச்சேரிகளின் முடிவிலே தமிழ்மொழியிலே பாட்டு பாடப்படுவதென்றால் துக்கடா என்ற பெயரில் - ஏதாவதொரு திருப்புகழோ அல்லது காவடிச் சிந்தோ தான் பாடப்பட்டுவந்தது.   தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தமிழருக்கு ஒரு தனிப்பட்ட இசையோ இசைக் கருவியோ இலலை என்ற கருத்தே நிலவியது. தமிழர்கள் அப்பாவிகளாகவோ- இசையில் அறிவில்லாதவர்களாகவோ – மடைத்தனமாகவோ இசை பற்றிய உணர்வில்லாது இருந்தார்கள். முதலிலே இந்த இழிவு நிலையை சாடியவர் மகாகவிசுப்ரமணிய பாரதியார். “தமிழ் மக்களுக்கு என்ன இரும்புக் காதோ” என்று கொதித்தெழுந்தார். எந்தப் பக்கம் திரும்பினாலும் தான் கேட்பது தெலுங்கோ கன்னடமோ – மலையாளமோ - இப்படி வேறு மொழிப் பாட்டுகளைத்தான் கேட்கக் கூடியதாக இருந்தது. தமிழிலே இசையைக் கேட்டால் தன்னை நெஞ்சை நிமிரத்;த்p மீசையை முறுக்கி நிமிர்ந்து நடக்கவைத்திருக்கும் என்று  கொதித்தெழுந்தார் பாரதியார். பாரதியார். இந்நிலைகண்டு அடிகளாரும் வெகுவாகக்கவலைகொண்டார். காலத்தின் கட்டாயமே அடிகளாரை – தமிழருக்கு தனித்துவமான இசை உண்டுää இசைக் கருவிகள் உண்டு என்ற ஆராய்ச்சியில் ஈடபடவைத்தது எனலாம்.
பல வேறு பணிகளுக்கிடையிற் கூட இசைம்பந்தமான தனது ஆராய்ச்சியை கைவிடவில்லை. தளர்வுறாது 14 வருடங்கள் தொடர்ந்து தனது ஆராய்ச்சியை நடாத்தினார். சகலவித தமிழ் நூல்களையும் கற்றுத்; தேர்ந்த அடிகளாருக்குச் சங்கத் தமிழ் - முக்கியமாகச் சிலப்பதிகாரம் தொல்காப்பியம் மற்றும் திருமுறைகள் ஆகியவற்றிலே ஊறியிருந்த அடிகளாருக்கு ஆராய்ச்சி இலகுவாக இருந்தது. தமிழர் 103 பண்களில் பாடினார்கள் என்ற தகவல் தெரியவந்தது. பண் என்பது செப்பனிடப்பட்ட இசை என்பதும் விளங்கிற்று. பிங்கல நிகண்டில் இந்தச் செய்திகள் கூறப்பட்டுள்ளன.
பண்சுமந்த பாடல்களாகத் தேவாரங்கள் இருப்பதையும் - கலித்தொகைää பரிபாடல் ஆகியவை இசையுடன் தொடர்பு உடையதாக இருக்கின்றபடியால் தமிழருக்குத் தனிப்பட்ட இசை உண்டு என்ற ஆதங்கம் - கவலை இவருக்கு ஏற்பட்டது. அந்தக் காலத்தில் இசையைப் பதிவுசெய்து வைப்பதற்கு ஒருவிதவாய்ப்போ வசதியோ இருக்கவில்லை.  இசைக் கலை ஒரு நிகழ்கலை.  ; தற்கால நவீன வசதிகளைக் கொண்டு பதிவு செய்யும் வாய்;ப்பு அன்று இருக்கவில்லை.
இந்த வேளையில் குடுமியாமலை என்ற இடத்திலே இசைக் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டமை இவருக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது. பல்லவ -  கிரந்த மொழிக் கல்வெட்டு – அதாவது தமிழும் சமஸ்கிருதமும் கலந்த மொழியிலே எழுதப்பட்டிருந்த கல்வெட்டு கிடைத்தது. இவர் ஒரு பன்மெழிப் புலவராக இருந்த்மையால் இவருக்கு அந்தக் கல்வெட்டை இலகுவாகப் படிக்க முடிந்தது. தமிழ் அல்லாத மொழி பேசுபவர்கள் இசை பயில்வதற்குரிய அடிப்படை இலக்கணம் அதிலே எழுதப்பட்டிருந்தது. இவற்றினால் மகிழ்ச்சி அடைந்த அடிகளார் தமிழில் இசைஇலக்கண நூல்களும் இருந்திருக்கலாம் என்ற தேடலிலே அடிகளார் இறங்கினார்.    சிலப்பதிகாரத்திற்கு  அடியார்க்கு நல்லார் எழுதிய உரை இவருக்கு கிடைத்தது. இதைப் படித்தபின் தமிழில்; இசை இலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன என்பதைச் சிலப்பதிகாரத்தினால் உறுதியாக அறிய முடிந்தது. இசை இலக்கண நூல்களைப் பிற மொழியாளர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் இசை நுணுக்கங்களைப் பல பழந்தமிழ்  நூல்கள் கூறியிருக்கலாம் என்றும் ஊகித்தறி ந்தார்.  இசை நுணுக்கம் அகத்தியம் இந்திர காளியம் - பெருங்குருகு -- பஞ்ச மரபு – பெருநாரை போன்ற பல இசை நூல்களாயிருந்த எடுகளில் பலவற்றில் முதலிலோ இடையிலோ அல்லது கடையிலோ  பல பகுதிகள் காணாமல் இருந்தனவென்றும் இந்த ஏடுகளும் விரைவிலே அழிந்துவிடும் என்றும் அடியார்க்கு நல்லார் கருத்துத் தெரிவித்திருந்தார் என்றும் விபுலானந்த அடிகளார் அறிந்தார்.
விபுலானந்தருக்குத் தமிழிலே ஆதாரமாக ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆனால் அவருக்குச்   சமஸ்கிருதத்தில் அபார அறிவு இருந்தபடியால் இசை இலக்கணத்தைப்பற்றி வடமொழியில் எழுதப்பட்டிருக்கும் நூல்களை இலகுவாக ஆராய்சசி செய்தார்.   அவற்றை இலகுவாக இவரால் படித்து அதிலே குறிக்கப்பெற்ற இசை நுணுக்கங்களையும் அறிய முடிந்தது.
சாரங்கதேவருடைய சங்கீத ரத்னாகரம் - சங்கீத மகரந்தம் - சங்கீத பாரிஜாதம்  - சங்கீத சந்திரிகை சங்கீத தாமோதரம் - ஸ்வரமேளகலாநிதி  - சதுர்தண்டி – பிரகாசிகா – ஆகிய பல நூல்களை அலசிப் பார்த்ததன் காரணமாக இவருக்குத்   தமிழ்ப் பண்களின் இசைமுறைகள் வடமொழியிலே எழுதப்பட்டுள்ளது தெரிய வந்தது. தமிழ்ப் பண்களின் பெயர்களுக்குத் தமது நூல்களிலே  புதுப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளதும்  - அதாவது வேறு பெயர்கள் கொடுத்திருப்பதும் தெரியவந்தது. உதாரணமாக செந்துருத்தி  ஒரு தமிழ்ப் பண். இதை அவர்கள் மதுமாதவி என்று பெயரிட்டுவந்ததும் பின்னர் காலப்போக்கில் அது மத்தியமாவதி என்று பாடபபட்டு இன்று நடைமுறையிலே பாவனையில் இருப்பதும் தெரியவந்தது. இதேபோல எல்லாப் பண்களுக்கும் புதிய பெயர்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. அடிகளார் அரும்பாடுபட்டுப் பல காலமாக ஆராய்ச்சிசெய்த யாழ் நூலை 1947ஆம் ஆண்டு கரந்தை தமிழ்ச் சங்கத்திலே கல்விமான்கள் முன்னிலையில் விமரிசையாக அரங்கேற்றம் செய்தார். இதன் விளைவாகவே தமிழ் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது இதன்பின்புதான் தமிழ்மக்கள் விழித்துக் கொண்டார்கள்.
1949ஆம் ஆண்டு இராஐh சார் அண்ணாமலைச் செட்டியார் தலைமையில் பண் ஆராய்ச்சி மாநாடு எல்லாத் துறையிலுமிருந்த  ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்கும் மாநாடாகப் பரிணமித்தது.
இசை  கலை  மொழி  இலக்கியம் இலக்கணம்  போன்று பல துறை சார்ந்த வல்லுனர்களும் கலந்து தொடங்கப்பட்ட  இந்தப் பண்ணிசை ஆராய்ச்சி இன்றுவரை தொடர்கிறது. பழந்தமிழரின் இசையின் - பண் இசையின் - தொடர்ச்சிதான் கர்நாடக இசையாக இன்று வழங்கப்படுகிறது. தமிழரின் இசைக் கலையின் தொடர்ச்சிதான் கர்நாடக சங்கீத இசை என்பதை உலகம் இன்று ஒத்துக்கொண்டுள்ளது. இதற்கு இசை உலகம் நன்றி சொல்லவேண்டியது அடிகளாருக்கே. அடிகளார் இல்லையெனில் இ;ந்த விழிப்புணர்வு ஒருகாலும் தமிழருக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழருக்குத் தனிப்பட்ட இசைக் கருவி இருந்திருக்கவேண்டுமென்பது அவரது ஊகமாக இருந்தது.  சங்க நூல்களிலிருந்து தமிழன் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மூன்று விதமான இசைக் கருவிகளைத் தனக்கென்றே உருவாக்கி இருந்தான். அவற்றைப் பயன்படுத்தி  இசைத்து மகிழ்ந்திருக்கின்றான். காற்;றுக் கருவியாகக் குழலையும் நரம்புக் கருவியாக யாழையும் தோற் கருவியாக முழவையும் இசைத்து மகிழ்ந்து வந்துள்ளான். இவற்றுள் விபுலானந்த அடிகளாரின் கவனத்தை ஈர்த்தது யாழ்க் கருவியே!. ஏனென்றால் யாழ்க் கருவி ஒரு மிழற்றுங் கருவி. ‘தமிழுக்கு உரித்து யாழ்;’ ‘தமிழென மிழற்றும் யாழ்’ இவற்றிற்கான சான்றுக் குறிப்புகளை அடிகளார் படித்தறிந்திருக்கிறார். சங்க நூல்களிலே குறிப்பிட்டிருப்பது போல யாழிலே எத்தனையோ வகைகள் பாவனையில் இருந்துள்ளன. சீரி யாழ் - பேரி யாழ் - மகர யாழ் - சகோட யாழ் - செங்கோட்டு யாழ் - குறிஞ்சி யாழ் - முல்லை யாழ் - மருத யாழ் - நெய்தல் யாழ்- பாலை யாழ் -முளரி யாழ் - பாரி யாழ் - இப்வாறாகப் பலவித யாழ்கள் தமிழனுடையதாக இருந்து வந்துள்ளது. அத்துடன் ஆயிரம் நரம்புடைய ஆதி யாழும் இருந்துள்ளது எனச் சங்க காலப் பழந்தமிழ் நூல்களிலே கூறப்பட்டுள்ளது.
தமிழன் உருவாக்கிய யாழ்தான் இன்றுபல திருத்தங்கள் செய்யப்பட்டு வீணையென்ற வடிவத்தைப் பெற்றுள்ளது. இரகுநாய நாயக்கர் காலத்திலே – 17ஆம் நூற்றாண்டிலே வீணை தோற்றம் பெற்றது எனலாம்.  இன்று அந்த வீணை இந்தியாவின் தேசிய கருவியாகப் போற்றப்படுகிறது. அடிகளாரின் பௌதிக – கணித அறிவின் துணைகொண்டு யாழின் நரம்புகள் - நுண் அலகுகள் போன்றவற்றைக் கணக்கிட்டு  பழைய யாழ் வடிவத்தை மீட்டுருவாக்கும் பணியிலே அடிகளார் ஈடுபட்டார். தனது மேற்பார்வையில் அமரர் சிவானந்தம்பிள்ளை என்பவரைக்கொண்டு நான்கு யாழ்களைச் செய்வித்தார். 47ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பெற்ற யானையின் மீது தனது அரிய யாழ் நூலை அழகுற அமர்த்தி யாழ் இசையுடன் ஊர்வலமாகச்  சென்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலே அரங்கேற்றம் செய்தார்.
விபுலானந்த அடிகளாரின் விழிப்புணர்ச்சியின் பயனாக இன்று உலகம் முழுவதும் தமிழனின் யாழ் தந்ததுதான் வீணை என்ற உண்மை தெரியவந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் பாரதிதாசனார் கூடத் தனது பாடலில் “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? …” என்று பாடியிருக்கிறாரல்லவா?. இந்தப் பாடலையும் தனது இனிமையான குரலிலே பாடி எல்லேரையும் மகிழ்வித்த பேராசிரியர் இறுதியில் ‘எங்களுக்கென்று ஒரு இசைக்கருவி இருக்கின்றதென்ற தன்மானத்துடன் வாழவைத்தவர் - பாரம்பரிய இசையின் உரிமையாளர்  என்று பெருமைப்படவைத்தவர் -  யாழ் நூல் தந்த விபுலானந்த அடிகளார்தான்” என்று கூறித் தனது பல சிறந்த கருத்துகளை உள்ளடக்கிய சொற்பொழிவை நிறைவுசெய்தார்.
--------------------தமிழ் வளர்த்த சான்றோர் விழாவின் மிகுதி அடுத்த திங்கள் “தமிழ் முரசு” இதழில் பிரசுரமாகும் 

No comments: