.
கன்பராவில் கலை, இலக்கிய
சந்திப்பு
பேராசிரியர் மௌனகுருவின்
இராவணேசன் கூத்து
அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தில்
எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை
நடைபெறவுள்ள கலை, இலக்கிய
சந்திப்பில் நூல்களின் அறிமுகம், கூத்து
ஒளிப்படக்காட்சி நிகழ்ச்சிகளுடன் கலந்துரையாடலும் இடம்பெறும்.
மெல்பன், சிட்னி, கன்பரா ஆகிய நகரங்களிலிருந்து
எழுத்தாளர்களும் கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கும் இச்சந்திப்பு எதிர்வரும் மே 16 ஆம்
திகதி சனிக்கிழமை மாலை 5.30
மணிக்கு கன்பரா
மூத்த பிரஜைகள் சங்கத்தின் (
Tamil seniors citizens
Hall, Bromby Street,
Isaacs, Canberra, ACT) மண்டபத்தில் நடைபெறவுள்ளது இச்சந்திப்பில்
ஈழத்தின் தகைமைசார்
பேராசிரியர் மௌனகுருவின் நெறியாள்கையில் இலங்கையில் அரங்கேறிய இராவணேசன்
கூத்து ஒளிப்படக்காட்சியும் காண்பிக்கப்படும்.
1965 இல் பல்கலைக்கழக மாணவராகவிருந்த மௌனகுரு, இராவணேசன் பாத்திரம் ஏற்று நடித்தார். - மீண்டும் அவர்
தமது 70 வயதில்
இராவணேசன் பாத்திரம் ஏற்று நடித்த
கூத்து என்பதும் குறிப்பிடத்தகுந்தது. பேராசிரியர்
சு. வித்தியானந்தனின் நெறியாள்கையில் முன்னர் அரங்கேற்றம் கண்ட இக்கூத்து
கடந்த பல வருடங்களாக
பேராசிரியர் மௌனகுருவின் நெறியாள்கையில் நவீனமயப்படுத்தப்பட்டு அரங்கேறிவருகிறது.
அவுஸ்திரேலியா கன்பராவாழ்
தமிழ் மக்களுக்காக ஒளிப்படக்காட்சியாக காண்பிக்கப்படவுள்ளது.
---0---
No comments:
Post a Comment