விழுதல் என்பது எழுகையே....... தொடரின் 45

.
பகுதி 45 இதை எழுதியவர்  யேர்மனியில் இருந்து மாலினி மாலா அவர்கள்.
விழுதல்  என்பது  எழுகையே.......  தொடரின்  45  
எழுதியவர் மாலினி மாலா - யேர்மனி


அறிமுகம்
பெயர் - மாலினி மாலா
ஈழத்து  சகல  பத்திரிகைகள்இ  மூலம்  சிறுகதை  தொடர்கதை கட்டுரைகள்  பேட்டிகள்  விமர்சனங்கள்......
இலங்கை வானொலி  நாடகங்கள்  சிறுகதைகள்  இசையும்  கதையும்  கட்டுரைகள்  வேறு  ஜனரஞ்சக   நிகழ்ச்சிகள்
இருபத்திரண்டே   வயதுக்குள்  மிகவேகமாக  இலக்கியத்துறையில்  ஓரளவு  உயரம்   தொட்டு  நின்ற  போது   அறிமுகமாகி  இருந்த  பெயர்.   அரியாலையூர்   மாலினி  சுப்பிரமணியம்.
புலப்பெயர்வின்  பின்  ஈழமுரசு  உட்பட   சில  பத்திரிகைகளில்  சில  கதைகள்இ  வானொலி  நாடகங்கள்  நிகழ்ச்சிகள்  சில  என்பதுடன்  அந்தத்  துறையை  விட்டே  நீண்ட  கால  ஒதுக்கம்.   இடையில்  இருமுறை   ஐரோப்பிய  மற்றும்  இலங்கை  இணைந்த  சிறுகதைப்  போட்டிகளில்  இருமுறை   முதலிடம்  தன்ன்கப்பதக்கமாய்  வென்றும்  விலத்திப்  போன  ஆர்வம்  பின்  அந்தத்  துறை  விட்டே  ஒதுங்க  வைத்தது.   
     நீண்ட  வருடங்களின்  பின்  வீரகேசரியில்  முன்பு  தொடராக  வெளியாகி  பலரது  பாராட்டைப்  பெற்ற  நாவலை   மணிமேகலைப்பிரசுரம்  வெளியிடஇ   குடும்பப்  பாசமும்  நட்பின்  நேசமும்  முன்னே  இருந்த   பாதை  நோக்கி வற்புறுத்தி  நகர்த்தஇ   எழுத்தின்  மௌனத்தை  உடைத்து  வெளிவந்த  இரண்டாவது  நாவல்  அர்த்தமுள்ள  மௌனங்கள்.   அதன்  பின்னான  பயணம்  கவிதையாக இ  கட்டுரையாக இ சிறுகதையாகஇ   நாவலாக   மீண்டும்  அதே  பாதையில்  நிறுத்திவிடா   தீர்மானத்துடன். ....  முன்னைய பெயர்  அடையாளம்  தவிர்த்த  வெறும்  மாலினியாய்    உங்கள்   அறிமுகத்துடன்  

தொடரும்  பேனாவின்  பயணம்......
இரவுகள்  என்பதே   விடியலுக்காகத்தான்  என்பது  போல்   வீழ்ச்சிகள் எல்லாமே   அதிகமாய்   உன்னி   எழுந்து  கொள்ள  ஏற்பட்ட   வாய்ப்புக்கள்   என்று  மனதுக்குள்  எண்ணிக் கொண்டான்  சீலன்.   வாழ்க்கையின்   ஒவ்வொரு  அனுபவமும்  கற்றுக்  கொள்ள  வேண்டிய  அவசிய   பாடங்கள்.   அடி  பட  பட  மனம்  உறுதி  கொள்ளும்.  தடங்கல்கள்  வர  வர   அதைத்  தாண்டி  வெளிவரும்  வேகம்  வரும்.  தடங்கல்   தாண்டி  நிமிர  வழி  தேடும்  மனம்.   அந்தத்  தேடலில்   ஓய்வற்ற   உன்மத்தம்  இருக்கும்.  எதிர்ப்படும்  இடரை   படிகளாக்கி   அழுத்தி  ஏறும்   திடம்  வரும்.  அவன்  தாத்தா  அப்பா   கற்றுத்தந்த  பால  பாட  வார்த்தைகள்   இப்போது  அவனுக்கு  நினைவு  வந்தன.  மனம்  திடப்பட  ஆரம்பித்தது.  

       விழுந்து  கிடக்கையில்   எழுந்து  நில்  என்று  சொல்ல   ஒரு  உண்மையான  குரல்.  கை கொடுக்க  ஒரு   நம்பிக்கையான  கரம்  போதும்.  எந்த  வீழ்ச்சியிலும்  இருந்து  ஒரு  மனிதன்  எழுந்து  விடுவான்.  ஆனால்  அந்த  உண்மைக் குரலும்இ  நம்பிக் கை யும்  கொடுக்க  ஏனோ  பலர்  தாயாராக   இருப்பதில்லை.    பெற்றோர்  செய்தது  பிள்ளைக்கு  என்பது  போல்    சீலனின்  பெற்றோர்  செய்த  நல்வினையோ  என்னவோ  அவன்  விழுந்த  போது  பற்றி   எழ  பல  கரங்கள்  பல  இடங்களில்  பல  விதங்களில்  நீண்டிருந்தன.  

      பகல்  முழுவதும்  தோட்ட  வேலை   மாலை  நேர   டொச்  பாடசாலை   என  வேகமாக  ஓய்வின்றிக்   கழிந்த  அவனது  நாட்களில்இ  எண்ணிப்பார்க்க  ஓய்வற்று  நேரத்தை  இழந்து  கொண்டுஇ   பணத்தை  யூரோவாக   எண்ணி  எண்ணி  சேர்க்க  முடிந்தது. அறிவை  மொழியாக   மீண்டும்  கற்றுக்  கொள்ள  முடிந்தது.  

       தெரியாத  புதிய  நாடு  ஒன்றில்  மொழி   பிடிபடலும்  பொருளாதாரம்  சீர்  பெற்றிருப்பதும்  தன்னபிக்கை  தரும்  விடயங்கள்.  மனம்  சோர்வுறாது   தொடர்ந்து  நடக்கத்  தூண்டும்  ஊக்கிகள்.  அவை    அவனை  ஊக்க   ஆரம்பித்தன.  மனம்  மெல்ல  மெல்ல   இறுக்கம்  தளர்ந்து  இளக     நம்பிக்கை  வானில்  சிறகு  விரித்தது   மனப் பறவை. 

     அதற்கு  ஏற்றாற்   போல்  வீட்டில்  இருந்து  வரும்  கடிதங்கள்   தொலைபேசி  அழைப்புக்கள்    என்பன   பாசத்தையும்  அக்கறையையும்  இடைக்கிடை   அவனது   கடமைகளையும்  சுமந்து  வர  அவனது   வாழ்க்கை  ஒரு   சரியான  கட்டுக்குள்  நிதானப்  பட   ஆரம்பித்தது. 

     பத்மகலாவிடம்  இருந்து  தொலைபேசி  அழைப்புக்கள்  காதல்  சுமந்து வந்து  கொண்டே  இருந்தாலும் இ  அவளுடன்  அவனும்  ஆவலுடன்  பேசிக்  கொண்டே  இருந்தாலும்  மனதுக்குள்  எப்போதும்  ஒரு  அபாயச்  சங்கு  ஒலித்துக்  கொண்டே  இருந்ததில்  அவனிடம்  அவதானம்  இருந்தது.  

      உறவோ  நட்போ  இடையில்  ஒரு  கீறலும்  பிரிவும்   ஏற்பட்டு   பின்  இணைந்து  கொள்கையில்   முன்பிருந்த  அதே  நெருக்கம்  முயன்றாலும்  முடிவதில்லை.    காயப்பட்ட  மனம்  தன்னைக்  காப்பாற்றிக்  கொள்வதிலேயே  குறியாக  இருக்கிறது.   பத்மகலாவின்   மனதினுள்  அப்படி  ஒரு  உணர்வு  இருந்ததா  என்பது  அவனுக்குத்  தெரியாது   ஆனால்  அவனுக்குள்  அந்த  அவதானம்  இருந்ததை  அவனே  உணர்ந்திருந்தான். 
தொடரும் 46 

No comments: