உலகச் செய்திகள்


ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கற்களை எறிந்து மரண தண்டனை

சோமாலியாவுக்கு ஜோன் கெரி திடீர் விஜயம்


ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவருக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கற்களை எறிந்து மரண தண்டனை



04/05/2015 ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், ஓரினச் சேர்க்கையில் ஈடு­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டிற்கு உள்­ளான நபர் ஒரு­வ­ருக்கு உய­ர­மான கட்­ட­ட­மொன்றின் கூரை­யி­லி­ருந்து கீழே தள்­ளிய பின் கற்­களால் எறிந்து தம்மால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.
இந்தத் தண்­டனை நிறை­வேற்­றத்தின் போது கூரையின் மீது 11 தீவி­ர­வா­திகள் காணப்­ப­டு­கின்­றனர். அவர்­களில் ஒருவர் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் கொடியை ஏந்­தி­யி­ருக்­கிறார்.


இந்­நி­லையில் கீழே விழுந்து படு­கா­ய­ம­டைந்த அந்­ந­பரை தீவி­ர­வா­திகள் கற்­களால் எறிந்து கொல்­கின்­றனர்.


சிரிய ரக்கா நகரில் இடம்­பெற்ற இந்த மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்தை பெருந்­தொ­கை­யான மக்கள் கூடி­யி­ருந்து அவ­தா­னித்துக் கொண்­டி­ருந்­துள்­ளனர்.
அதே­ச­மயம் மது­பானம் அருந்­தி­யமைஇ போதை­வஸ்தை பாவித்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டு­களின் கீழ் தம்மால் பிடிக்­கப்­பட்ட இரு­வ­ருக்கு ஐ.எஸ் தீவி­ர­வா­திகள் சாட்­டையால் அடித்து தண்­ட­னையை நிறை­வேற்­று­வதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

கைகள் கட்­டப்­பட்ட நிலையில் நின்­றி­ருந்த அந்த இரு­வ­ருக்கும் தீவி­ர­வா­திகள் சாட்­டையால் அடித்து இவ்வாறு தண்டனை நிறைவேற்றுவதையும் பெருந்தொகையான பொதுமக்கள் கூடியிருந்து வேடிக்கை பார்த் துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 





சோமாலியாவுக்கு ஜோன் கெரி திடீர் விஜயம்

05/05/2015 சோமாலியத் தலைநகர் மொகடிஷுவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரி திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஒருவர் சோமாலியத் தலைநகருக்கு விஜயம் செல்வது இதுவே முதல் முறையாகும்.
மொகடிஷு விமானநிலையத்தில் சில மணிநேரங்கள்  தங்கியிருக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர், அங்கு சோமாலிய அதிபர் ஹசான் ஷேக் முகமது, அரச அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் தலைவர்கள் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
மொகடிஷுவிமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஆளில்லா விமானங்கள் சோமாலியாவில் அல் ஷபாப் தீவிரவாதக் குழுவின் தலைவர்களை இலக்கு வைத்துத் தாக்கிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 

No comments: