மரண அறிவித்தல்

.
                                                 திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர்
மறைவு 03 04.2015

கொழும்பு திறைசேரியில் வழங்கல் ஆளணி பிரிவின் ஓய்வு பெற்ற உதவிப்
பணிப்பாளரான திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர் சிறிது கால சுகவீனத்தின்
பின்னர் ஏப்பிரல் மாதம் 3 ம் திகதி வெள்ளிக் கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற முதலியார் சு திருச்சிற்றம்பலம், காலம் சென்ற திருமதி ராஜலஷ்மி (வண்ணார் பண்ணை யாழ்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும்,காலம் சென்ற சீதாலட்சுமியின் அன்புக் கணவரும், காலம் சென்ற திரு மாணிக்கம் ,காலம்  சென்ற திருமதி செல்லம்மா மாணிக்கம் (ஐயனார் கோவிலடி யாழ்பாணம் ) ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
இவர் காலம் சென்ற பாலசுப்பிரமணியம் (யாழ்பாணம்), காலம் சென்ற சண்முகம் (யாழ்பாணம்) கேதீஸ்வரநாதன் (சிட்னி) கங்காதரன் (ரோறென்ரோ) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ராஜலட்சுமி பாலசுப்பிரமணியம் (கன்பரா) திருமதி ரமணி கேதீஸ்வரநாதன் (சிட்னி) காலம் சென்ற திருமதி பரமேஸ்வரி கங்காதரன் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
தயாபரன் (சிட்னி) சாரதா (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும், யசோதரா  (சிட்னி), புரந்தரநாதன் (கொழும்பு) ஆகியோரின் மாமனாரும்; கணேசா, அர்ச்சனா,வனிதாஸ்ரீலஷ்மி, லதாங்கி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்  ஆவார்.அமரர் திரு திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய பண்ணோடு இன் தமிழ் என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளருமாவர்.

அன்னாரின் பூதவுடல்  ஏப்பில் மாதம் 8 ம் திகதி புதன் கிழமை மாலை 7 மணி முதல் 9 மணிவரை
Allan Drew Funerals 221, Old Northern Road Castle Hill NSW 2154 ல் அஞ்சலிக்காக வைக்கப்படும்
அன்னாரின் இறுதிக் கிரிகைகைள் ஏப்பிரல் மாதம் 9 ம்  திகதி வியாழக் கிழமை காலை 11:30 முதல் பிற்பகல் 1:30 மணி வரை
South Chapel, Rookwood Cemetery, Rookwood ல் இடம் பெற்று அதன் பின்னர் பூதவுடல்  தகனம் செய்யப்படும்.
உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்
தகவல்  மா தயாபரன் - தொலை பேசி இலக்கம் : 0424 228 395


No comments: