சங்க இலக்கியக் காட்சிகள் 45- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

அவரைக்கண்டதும் உள்ளம் தழுவத் துடிக்கிறதே!

கடந்த காட்சியிலிருந்து சற்று மாறுபட்ட காட்சியினை இந்த அத்தியாயத்தில் காணலாம். பரத்தையரோடு உறவாடிய கணவன் தன்னைத் தேடிவந்தபோது அவனைக் கடிந்துää இங்கே ஏன் வந்தாய் மீண்டும் அவர்களிடமே போ என்று மனைவி ஏசித் திருப்பியனுப்பிய நிகழ்வை முன்னைய காட்சியில் கண்டோம். இங்கே அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு காட்சி நம்முன்னே வந்து நிற்கின்றது.



தலைவன் நாடாளும் மன்னவன். மதுரை அவனது நகரம். அங்கேயுள்ள வைகை ஆற்றின் இரண்டு கரைகளிலும் பூமரங்கள் செறிந்து அடர்ந்த வளர்ந்து நிற்கின்றன. அவை பூத்துக்குலுங்கிää ஆற்றிலே பூக்களைச் சொரிந்துகொண்டிருக்கின்றன. அதனால் அந்த ஆறு பூக்களைச் சூடிக்கொண்ட ஒரு பெண் படுத்துக்கிடப்பதைப் போலக் காட்சியளிக்கிறது. அந்த வைகை ஆறு மதுரை நகரைச்சுற்றி ஓடுகின்றது. அதனால் மதுரை நகரமே ஒரு பூமாலையை அணிந்து கொண்டிருப்பதைப் போலத் தோற்றம் அளிக்கிறது. அந்த நகரைப் பகைவர்கள் முற்றுகையிட்டதேயில்லை. வைகை ஆறுதான் மதுரையை முற்றுகையிட்டதைப் போல அதனைச் சுற்றி வட்டமிட்டு ஓடிக்கொண்டிருக்கின்றது.
அத்தகைய மதுரையின் மன்னனுக்கு பட்டத்து அரசியான தன் மனைவியை விட அழகிய பரத்தையர்கள்மேல் கொள்ளை ஆசை. அவன் அடிக்கடி பரத்தையர்களிடம் சென்று அவர்களோடு உல்லாசமாக இருப்பான். அவ்வாறு இருந்துவிட்டுää அவன் திரும்பி அரண்மனைக்கு வரும்போது அவனோடு கோபம் கொள்ளவேண்டும்ää அவனது தவறினைச் சுட்டிக்காட்ட வேண்டும்ää அவனோடு உறவாடாமல் ஆகக் குறைந்தது ஊடல் செய்தாவது அவனைத் திருத்தவேண்டும் என்று தலைவிக்கு அவளின் உயிர்த்தோழி அறிவுரை சொல்கிறாள்.  தோழியின் அறிவுரையைத் தலைவி ஏற்றுக் கொள்கின்றாள். ஆனால் தலைவன் - அந்த அரசன் - அரண்மனைக்குத் திரும்பி வந்துää தலைவியைக்காண அந்தப் புரத்திற்கு வரும்போது அவனைக் கண்டதும் தலைவியின் வைராக்கியம் அத்தனையும் தவிடு பொடியாகின்றன. அவள் மன்னனோடு எந்தவித தர்க்கமும் செய்யாமல் விருப்போடு அவனை வரவேற்கின்றாள். அவனது ஆசைக்கு இணங்குகின்றாள். அவனோடு கூடுகின்றாள்.
இதுபற்றி தலைவியைக் கடிந்த தோழி அவளது செய்கையை விமர்சிக்கின்றாள். தலைவி தோழியிடம் தன் நிலைமையை விளக்குகின்றாள். “அடியே தோழி! நான் என்ன செய்வேன்? அவர் எங்கேயிருந்து வருகின்றார் என்று எனக்குத் தெரியும். பரத்தையர்களோடு இன்பம் அனுபவித்த அடையாளங்களைக்கூட அகற்றாமல் அவர் வருகிறாரே என்றும் உணர்கின்றேன். அவரோடு கோபிக்க வேண்டும் என்றும் நினைக்கின்றேன். ஆனால் அவர் வந்ததும்ää அவரைக் கண்டதும் பாழும் என் நெஞ்சம் அவரோடு இணங்கிவிடுகிறதே. அவரைத் தழுவத் துடிக்கிறதே! நான் என்னதான் செய்யட்டும்? என்று கூறுகின்றாள்.
இந்தக்காட்சியை நம்முன்னே கொண்டு வந்த நிறுத்துகின்ற பாடல் இதோ:

கார்முற்றிää இணர் ஊழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து
சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்புஎய்தி இருநிலம்
தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன்
நீர்முற்றி மதில்பொருஉம் பகை அல்லால் நேராதார்

போர்முற் றொன்று அறியாத புரிசூழ் புனல்ஊரன்
நலத்தகை எழில்உண்கண் நல்லார்தம் கோதையால்
அலைத்த புண் வடுக்காட்டி அன்புஇன்றி வரின் - எல்லா
புலப்பேன் யான் என்பேன் மன்? அந்நிலையே அவற்காணின்
கலப்பேன் என்னும் இக்கையறு நெஞ்சே

கோடுஎழில் அகல்அல்குல் கொடியன்னார் முலைமூழ்கிப்
பாடுஅழி சாந்தினன் பண்பின்றிவரின் - எல்லா
ஊடுவேன் என்பேன்மன்? அந்நிலையே அவற்காணின்
கூடுவேன் என்னும் இக்கொள்ளைஇல் நெஞ்சே

இனிப்புணர்ந்த எழில்நல்லார் இலங்குஎயிறு உறாஅலின்
நனிச்சிவந்த வடுக்காட்டி நாண்இன்றிவரின் - எல்லா
துனிப்பேன்யான் என்பேன்மன்? அந்நிலையே அவற்காணின்
தனித்தே தாழும் இத் தனியில் நெஞ்சே

எனவாங்குää
பிறைபுரை ஏர்நுதால்! தாம் எண்ணியவை எல்லாம்
துறைபோதல் ஒல்லுமோ தூவாகாது ஆங்கே
அறைபோகு நெஞ்சு உடையார்க்கு?







(கலித்தொகைää மருதக்கலி பாடல் இல: 2 பாடியவர்: மருதன் இளநாகனார்)

நேரடிக்கருத்து:

மழைக்காலத்தின் நடுப்பகுதி. வைகை ஆற்றிலே வெள்ளம் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கின்றது. அதன் இரு கரைகளிலும் உள்ள மரங்கள் பூக்களால் நிரம்பியிருந்தன. அதனால் பூச்சுடிய பெண்யொருத்தி படுத்துக்கிடப்பதைப்போல அந்த ஆறு விளங்கியது. மதுரை நகரைச்சுற்றி இவ்வாறு வைகை ஓடுகின்ற காட்சி அந்நகரம் தனக்குப் பூமாலை அணிந்து கொண்டது போலக் காட்சியளித்தது. வைகை ஆற்று நீர் மதுரைநகரைச் சுற்றி முற்றுகையிட்டுää கோட்டையில் மோதிக் கிடந்ததே தவிர பகைவரோடு மோதவேண்டியதே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. அத்தகைய நீர்வளம் நிரம்பப்பெற்ற மதுரையின் மன்னன் என் கணவன்.

அடி என் தோழி! நலம்மிக்க அழகிய மைதீட்டப்பட்ட கண்ணையுடையவர்களான பரத்தைப்பெண்கள் தமது கூந்தலினால் ஏற்படுத்திய காயத்தின் அடையாளங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டு என்மேல் அன்பில்லாமல் அவர் வந்திருந்தால் நானும் அவர்மேல் ஊடல்கொண்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அந்த நிலையிலும் அவரைக்கண்டுவிட்டால்  அவரோடு கூடி இன்பமடைவேன் வேறென்ன செய்யமுடியும்?

அடி தோழி! இருபுறம் உயர்ந்த அழகிய அகன்ற பெண்ணுறுப்பும் கொடியிடையும்  கொண்ட பரத்தையரின் மார்புகளுக்கிடையிலே கிடந்து விட்டுப்  பண்பில்லாத முறையிலே அவர் வந்தால் அவரோடு ஊடவேண்டும் என்றதான் நான் நினைத்திருப்பேன். ஆனால் அவரைக்கண்டதும் கொள்iகையில்லாத என் உள்ளம் அவரோடு கூடுவேன் என்கிறதே நான் என்னடி செய்யமுடியும்?

அடி தோழி! இனிமையான தன்மையோடுää அழகும் உடைய பரத்தையரின் பற்கள் தன் உடலில் பதித்த அடையாளங்களைக் காட்டிக்கொண்டு அவன் என்னிடம் வந்தால் அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கவேண்டும் என்றுதான் நான் நினைப்பேன். ஆனால் அந்த நிலையிலேகூட அவரைக் கண்டுவிட்டால் என்னைத் தவிக்க விட்டுவிட்டுத் தன்போக்கிலே சென்று அவனது விருப்பத்திற்க இணங்கிவிடுகிறதே எனது நெஞ்சு?

பிறைபோன்ற அழகிய நெற்றியை உடையவளே! நம்முடன் இருந்தும் நமக்கு உதவியாக இருக்காமல் இப்படியெல்லாம் நம்மைக் கைவிட்டு நமக்கத் துரோகம் செய்கின்ற உள்ளம் நமக்கு இருக்கும்போது நாம் எண்ணியவற்றையெல்லாம் எண்ணியபடி செய்து வெற்றிபெற நம்மால் முடியுமா?

(என்று தலைவி தன் தோழியைப்பார்த்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது)

No comments: