சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2015
இப் போட்டிகள் April மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, திருமுறை ஒப்புவித்தல் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்களும் வழங்கப்படும்)
இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.


போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் போட்டிகளும்

பிரிவுகள் பிறந்த திகதி விபரம் போட்டிகள்

பாலர் ஆரம்ப பிரிவு (01.08.2010 இலும் அதன் பின்னரும் பிறந்தவர்கள்)
சமய அறிவுப் போட்டி
வர்ணம் தீட்டும் போட்டி

பாலர் பிரிவு (01.08.2008 க்கும் 31.07.2010 க்கும் இடையில் பிறந்தவர்கள்)
சமய அறிவுப் போட்டி 
வர்ணம் தீட்டும் போட்டி

கீழ்ப்பிரிவு (01.08.2006 க்கும் 31.07.2008 க்கும் இடையில் பிறந்தவர்கள்)
சமய அறிவுப் போட்டி 
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மத்தியபிரிவு (01.08.2003 க்கும் 31.07.2006 க்கும் இடையில் பிறந்தவர்கள்)
சமய அறிவுப் போட்டி 
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

மேற்பிரிவு (01.08.2000 க்கும் 31.07.2003 க்கும் இடையில் பிறந்தவர்கள்)
சமய அறிவுப் போட்டி 
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

அதிமேற்பிரிவு (31.07.2000 இலும் அதன் முன்பும் பிறந்தவர்கள்)
சமய அறிவுப் போட்டி 
திருமுறை ஒப்புவித்தல் போட்டி

போட்டிகளுக்கான விண்ணப்படிவம்

போட்டிகளுக்கான விண்ணப்படிவத்தை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான கரும பீடத்திலும்; பின்வரும் அறிவுப்போட்டிக் குழு அங்கத்தவர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

திருமதி க ஜெகநாதன்       0403 795 361    
செல்வி பி இராஜலிங்கம் 0432 259 414
திரு அன்பு ஜெயா 0423 515 263
திரு கு கருணாசலதேவா 0418 442 674
திரு செ மகேஸ்வரன் 0409 847 003
திரு செ பாஸ்கரன் 0407 206 792
திருமதி அ சாரதா 02 9863 3769
திரு சி தியாகராஐh 0414 631 860
திரு ப பஞ்சாத்தரம் 02 9643 5224
திரு இரவி ஆனந்தராஜா 0424 674 642

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து 11 April 2015 க்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக durgacomp2015@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் அல்லது ஆலய கரும பீடத்திலோ மேற்குறிப்பிட்ட அறிவுப்போட்டிக் குழு அங்கத்தவர்களிடமோ கையளிக்கப்பட வேண்டும். ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். எத்தனை போட்டிகளில் பங்கு பற்றினாலும் ஒரு நபருக்கு போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக  $5 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது.   

போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை விண்ணப்பப் படிவத்தோடு பெற்றுக்கொள்ளலாம்.

திருமுறை ஒப்புவித்தல் போட்டி

----------------------------------------------------------------------------------------------------------
கீழ்ப்பிரிவு


1 தேவாரம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசனெந்தை யிணையடி நீழலே


2 தேவாரம்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே


3 தேவாரம்
காதலாகிக் கசிந்துகண்ணீர்மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே

மேலே கொடுக்கப்பட்ட மூன்று தேவாரங்களையும் மனனம் செய்திருத்தல் வேண்டும்
---------------------------------------------------------------------------------------------

மத்தியபிரிவு


1 தேவாரம்
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமுழ அதிரும் 
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே


2 தேவாரம்
கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே


3 திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலாமணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதுனைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே


4 திருப்புகழ்
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்க ருள்வாயே
உத்தமாதான சற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞானசத் திநிபாதா
வெற்றிவேலாயுதப் பெருமாளே

மேலே கொடுக்கப்பட்ட நான்கு திருமுறைகளையும் மனனம் செய்திருத்தல் வேண்டும்

---------------------------------------------------------------------------------------------------------

மேற்பிரிவு


1 தேவாரம்
மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப்பிற
வாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவாவுனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமச்சிவாயவே

2 திருவாசகம்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதுந் திருவாயால் மறைபோலும் காணேடி
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை
ஈசனவள் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ

3 திருவிசைப்பா
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவரறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன்றன்னைக் கண்டுகண்டுள்ளங்
குளிரவென் கண்குளிர்ந்தனவே

4 திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்கநம் பக்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோனடி
யோமுக் கருள் புரிந்து
பின்னைப்பிறிவியறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.

5 புராணம்
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலி திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

மேலே கொடுக்கப்பட்ட ஐந்து திருமுறைகளையும் மனனம் செய்திருத்தல் வேண்டும்
----------------------------------------------------------------------------------------------------------


அதிமேற்பிரிவு


1 தேவாரம்
பித்தாபிறை சூடிபெருமானே அருளாளா
எத்தான்மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தாவுனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.

2 திருவாசகம்
கடையவனேனைக் கருணையி
னாற் கலந்தாண்டு கொண்ட
விடையவனே விட்டிடுதி கண்
டாய் விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தர
கோச மங்கைக்கரசே
சடையவனே தளர்ந்தேன் எம்
பிரான் என்னெத் தாங்கிக் கொள்ளே

3 திருவிசைப்பா
நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றி கண்ணுடைதோர் நெருப்பே
வேறணி புவனபோகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடையெம் மற்புதக் கூத்தா
அம்பொன் செயம்பலத் தரசே
ஏறணி கொடியெம் மீசனே யுன்னைத்
தொண்டனே னிசையுமா றிசையே

4 திருப்பல்லாண்டு
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர்
சிறுநெறி சேராமே
வில்லாண்ட கனகத் திரள்மேரு விடங்கன்
விடைப்பாகன்
பல்லாண்டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே

5 புராணம்
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பரவியோம மாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி

6 திருப்புகழ்
துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லை நெடு நீலக் கடலாலே
மௌ;ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே
தௌ;ளு தமிழ் பாடத் தெளிவோனே
செய்ய குமரேசத் திறலோனே
வள்ளல் தொழு ஞானக் கழலோனே
வள்ளிமண வாளப் பெருமாளே.


மேலே கொடுக்கப்பட்ட ஆறு திருமுறைகளையும் மனனம் செய்திருத்தல் வேண்டும்

சைவ சமய அறிவுப் போட்டி
பாலர் பிரிவு   (5 வயது முதல் 7 வயது வரை)
மாதிரிக்கேள்விகள்

1   உங்கள் சமயம் எது?
சைவ சமயம்

2 சைவ சமயத்தில் முழுமுதற் கடவுள் யார்?
சிவபெருமான்

3 பூசைக்குத் தேவையான பொருள்கள் 5 கூறவும்.
பூக்கள், பழங்கள், தேங்காய், கர்ப்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தி, இளநீர்

4    நாம் உணவை உண்பதற்கு முன்னர் என்ன செய்யவேண்டும்? இறைவனை நினைந்து நன்றி செலுத்தி வணங்கவேண்டும்.

5   நாம் கடவுளை வணங்குவதற்குச் செல்லும் இடம் எது? கோயில்

6     கோயிலுக்கு வேறொரு பெயர் கூறுக?
ஆலயம்.

7   கோயில் வாசலில் நீர் காண்பது என்ன?
கோயில் கோபுரம்

8    தேர்த்திருவிழா ஒரு ஆண்டில் எத்தனை முறை நடைபெறும்? ஒரு முறை

9    நாம் கோயில் சென்று கடவுளை வணங்குவதற்கு முன்பு யாரைத் தினமும் வீட்டில் வணங்கவேண்டும்.
தாய், தந்தையரை வணங்கவேண்டும்.

10   திருநீற்றை நிலத்தில் (தரையில்) போடலாமா?
திருநிற்றைத் தரையில் போடக்கூடாது.

11   திருநீற்றின் நிறம் என்ன?
திருநீற்றின் நிறம் வெள்ளை

12 சிட்னியில் துர்க்கை அம்மன் ஆலயம் எங்கே அமைந்துள்ளது?
இறீயன்;ஸ் பார்க்கில் அமைந்துள்ளது.

13    பிள்ளையாரை எப்படி வணங்குகிறோம்?
நெற்றியில் 3 முறை குட்டி, தோப்புக்கரணம் போட்டு வணங்குவோம்.

14  நாம் ஏன் போகிறோம்?
கடவுளை வணங்குவதற்குப் போகிறோம்.

15 கோயில் உள்ளே நீங்கள் பார்க்கும் இரண்டு பொருள்களின் பெயர்களைக் கூறுக?
பூக்கள், பழங்கள், தேங்காய், திருநீறு (விபூதி), சந்தனம், குங்குமம்.

16    கோயிலில் கடவுளை எப்படிக் கும்பிடவேண்டும்?
மனதில் இறைவனை நினைத்தபடி இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிடவேண்டும்.

17   கோயிலில் பூசை முடிந்ததும் என்ன கொடுப்பார்கள்?
திருநீறு, தீர்த்தம், சந்தனம், குங்குமம், பிரசாதம்

18    திருநீறு - இதற்கு வேறு பெயர் ஒன்று கூறுக?
விபூதி

19    பிள்ளையாருக்கு எந்தப் புல்லினால் அருச்சனை செய்வார்கள்?
அறுகம் புல்லினால் அருச்சனை செய்வார்கள்.

20    பிள்ளையாருக்குச் சாத்துவதற்கு உகந்த புல் எது?
அறுகம் புல்

21   உலகத்தைப் படைத்தவர் யார்?
கடவுள்

22   கடவுளுக்கு இன்னுமொரு பெயர் கூறுக?
இறைவன்

23   எப்படிப் பூசுவீர்?
சிவ சிவ என்று உச்சரித்துக் கடவுளை வணங்கியபடி திருநீற்றைப் பூசவேண்டும்.

24   இறீயன்ஸ் பார்க்கில் அமைந்துள்ள கோயில் எது?
துர்க்கை அம்மன் கோயில்

25   திருநீற்றை எங்கே பூசவேண்டும்?
திருநீற்றை நெற்றியிலே பூசவேண்டும்.

26   சிவப்புத் தாமரைப் பூவில் இருக்கும் கடவுளின் பெயரைக் கூறுக?
இலக்குமி அம்மன்

27   சந்தனத்தின் நிறம் என்ன?
மஞ்சள் நிறம்

28   குங்குமத்தின் நிறம் என்ன?
சிவப்பு நிறம்.

29   வேலைக் கையில் வைத்திருக்கும் கடவுளின் பெயரைக் கூறுக.
முருகப்பெருமான் - வேலாயுதன் - மயில்வாகனன்

30   மோதகத்தைக் கையில் வைத்திருக்கும் தெய்வத்தின் பெயரைக் கூறுக
பிள்ளையார் – கணபதி – ஐங்கரன் - 

31   புலித்தோலை அணிந்த கடவுளின்; பெயரைக் கூறுக.
சிவபெருமான்

32   கல்விச் செல்வத்தைத் தரும் தெய்வத்தின் பெயரைக் கூறுக.
சரசுவதி தேவி (சரஸ்வதி தேவி)

33    வெள்ளைத் தாமரைப் பூவில் இருக்கும் கடவுளின் பெயரைக் கூறுக.
சரசுவதி தேவி (சரஸ்வதி தேவி)

34   பிள்ளையாரின் தம்பி என்று எந்தக் கடவுளைக் கூறுவர்.
முருகப் பெருமான்

35   முருகப்பெருமானின் கையில் என்ன ஆயுதம் உள்ளது?
வேலாயுதம் - வேல் - உள்ளது.

36   முருகப் பெருமானின் அண்ணனின் பெயரைக் கூறுக.
பிள்ளையார்

37   கோயிலில் நடைபெறும் ஒரு திருவிழாவின் பெயரைக் கூறுக.
(உ-ம்) தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா...

38   மூன்று வயதில் தேவாரம் பாடிய நாயனாரின் பெயர் என்ன?
திருஞானசம்பந்த நாயனார்.

39 கோயிலுக்கு உள்ளே சென்றதும் முதலில் எந்தக் கடவுளை கும்பிடவேண்டும்?
முதலில் பிள்ளையாரைக் கும்பிட வேண்டும்.

40   எந்தக் கடவுளுக்கு முதலில் பூசை செய்யவார்கள்?
பிள்ளையாருக்கு முதலில் பூசை செய்யவார்கள்.

41   எந்தக் கடவுளுக்குக் கடைசியாக பூசை செய்யவார்கள்?
சண்டேசுவர (சண்டேஸ்வர) சுவாமிக்கு கடைசியாகப் பூசை செய்யவார்கள்.

42   பிள்ளையாரின் வாகனம் எது?
எலி வாகனம்

43   பிள்ளையாருக்கு வேறு இரண்டு பெயர்களைக் கூறவும்.
கணபதி, விநாயகர், ஐங்கரன், ஆனைமுகன், ஏகதந்தன், கரிமுகன், ஆகீசன், மதகரி, ஆகுவாகனன், மதங்கன்

44  யானை முகத்தைக் கொண்ட கடவுளை எப்படி அழைப்பீர்கள்?
ஆனைமுகன், கரிமுகன், பிள்ளையார்

45  முருகப் பெருமானின் கொடியில் உள்ள பறவை எது?
சேவல்

46   முருகப் பெருமானுக்கு வேறு பெயர்கள் கூறுக.
ஆறுமுகன், சேந்தன், சரவணபவன், கார்த்திகேயன், சுப்பிரமணியன், மயில்வாகனன், கந்தன், செவ்வேள், வடிவேலன், கடம்பன், அயிலவன், வேலாயுதன்

47   கோயிலுக்கு எப்படி நாம் செல்ல வேண்டும்?
குளித்துத் தூய ஆடை அணிந்து செல்லவேண்டும்.

48   பெரியவர்கள் அல்லது குருக்கள் திருநீறு தரும்பொழுது எப்படி வாங்குவீர்கள்?
பெரியவர்களை வணங்கி இடக்கைமேல் வலக் கையை வைத்து பயபக்தியுடன் வலக்கையால் வாங்கவேண்டும்.

49   கோயிலுக்குள் சென்றபின் நீங்கள் எப்படி இருப்பீர்கள்? நடந்துகொள்வீர்?
அமைதியாகவும் சத்தம் செய்யாமலும் இருக்க வேண்டும்.கீழ்ப் பிரிவு   (7 வயது முதல் 9 வயது வரை)
மாதிரிக்கேள்விகள்

1    உங்கள் சமயம் எது?
சைவ சமயம்

2 சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்களை எப்படி அழைப்பீர்கள்?
சைவர்கள் என அழைப்போம்.

3 சைவ சமயத்தில் முழுமுதற் கடவுள் என்று கொள்ளப்படுபவர் யார்?
சிவபெருமான்.

4   சிவபெருமான் எப்படிப் பட்டவர் என்று சைவ சமயம் கூறுகிறது? 2 விடயம் கூறுக.
சிவபெருமான் என்றும் உள்ளவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிபவர், எல்லாம் வல்லவர் அன்பு வடிவானவர் (எல்லா உயிர்களையும் காப்பவர்) 
எனச் சைவ சமயம் கூறுகிறது.

5   சிவபெருமானை வேறு எந்தப் பெயர்களினால் அழைப்பீர்கள்? 4 கூறுக.
அமலன் அரன் அந்திவண்ணன் அங்கணன் அங்கணாளன் அமலன் அமுதவேணி ஆலமுண்டோன் ஆதிநாதன் ஆதிரையான் ஆதிசிவன் இடபக்கொடியோன் ஈசன் ஈசுவரன் உத்தரன் ஐந்துமுகன் முக்கண்ணன் கங்கைவேணியன் கங்காதரன்

6    சிவபெருமான் தலையில் அணிந்துள்ளவை எவை?
பிறைச் சந்திரன், கங்கை

7   சிவனின் கழுத்தை அலங்கரிப்பது எது?
அரவம் - பாம்பு – நாகபாம்பு

8   சிவராத்திரி எந்த மாதத்தில் வருகிறது?
மாசி மாதத்தில்

9   நாம் கடவுளை வணங்குவதற்குச் செல்லும் இடம் எது?
கோயில்

10  கோயில் இல்லாத ஊரில் .................. என்று தொடங்கும் ஒரு பழமொழி உண்டு. அதைச் சொல்லவும்.
கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பது அந்தப் பழமொழி.

11  கோயில் திருவிழா ஆரம்பமாகும் முதல் நாள் என்ன விசேடம் (விசேஷம்) நடைபெறும்?
கொடி ஏற்றம் நடைபெறும்.

12 கோயில் வாசலை அலங்கரிப்பது எது?
கோயில் கோபுரம்

13   கோயிலை அடைந்ததும் எதைப் பார்த்து முதலில் கும்பிட வேண்டும்?
கோயில் கோபுரத்தைப் பார்த்து முதலில் கும்பிட வேண்டும்.

14   பிள்ளையாரை எப்படிக் கும்பிடவேண்டும்?
கைவிரல்களை மடக்கி நெற்றியில் மூன்று முறை குட்டித் தோப்புக்கரணம் போட்டுக் கும்பிடவேண்டும்.

15 காத்தல் தொழிலைச் செய்யும் கடவுளின் பெயரைக் கூறவும்.
திருமால்

16   சிவபெருமானின் இடப்பக்கத்தில் இருக்கும் தெய்வத்தின் பெயரைக் கூறுக.
உமாதேவியார்

17   பிள்ளையாருக்கு வேறு இரண்டு பெயர்களைக் கூறவும்.
கணபதி, விநாயகர், ஐங்கரன் ஆனைமுகன் ஏகதந்தன் கரிமுகன் ஆகீசன் மதகரி ஆகுவாகனன் மதங்கன்

18   கயமுகாசுரனை வதம் செய்த கடவுளின் பெயரைக் கூறவும்.
விநாயகப் பெருமான்.

19   படைத்தல் தொழிலைச் செய்யும் கடவுளின் பெயரைக் கூறவும்.
பிரம்மா

20   பிரம்மாவிற்கு வேறு பெயர்கள் கூறுக.
நான்முகன், பங்கயன், மலரோன்

21  திருமாலுக்கு வேறு பெயர் 4 கூறுக.
கோவிந்தன், வெங்கடேசுவரர், (வெங்கடேஸ்வரர்) முகுந்தன், முரளீதரன், மதுசூதனன், கடல்வண்ணன், உலகளந்தோன், மாதவன், நாராயணன், கேசவன், சிறீரங்கநாதன், உலகமுண்டோன். 

22   முருகப் பெருமானின் கொடியில் உள்ள பறவை எது?
சேவல்

23   முருகப் பெருமானுக்கு உகந்த விரத நாள்கள் எவை?
கந்தசட்டி (கந்தசஷ்டி) விரத நாள்கள் ஆகும்.

24   முருகப் பெருமானுக்கு வேறு பெயர்கள் 4 கூறுக.
ஆறுமுகன் சேந்தன் சரவணபவன் கார்த்திகேயன் சுப்பிரமணியன் மயில்வாகனன் கந்தன் செவ்வேள் வடிவேலன் கடம்பன் அயிலவன் கலையறிபுலவன் வேலாயுதன்

25   அம்மை அப்பனை – அதாவது – சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றி வந்து மாம்பழத்தைப் பெற்றுக்கொண்ட கடவுள் யார்?
பிள்ளையார்

26   திருஞானசம்பந்த நாயனாருக்கு ஞானப்பால் ஊட்டிய தெய்வத்தின் பெயரைக் கூறுக.
உமை அம்மை

27   திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் எது?
தமிழ் நாட்டில் உள்ள சீர்காழி

28   தேவாரம் பாடிய மூன்று நாயன்மாரின் பெயர்களையும் கூறுக.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரச நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார்.

29   திருநீறு எதில் இருந்து செய்யப்படுகிறது?
பசுவின் சாணத்திலிருந்து செய்யப்படுகிறது

30   நவராத்திரி என்பது எதைக் குறிக்கின்றது.
ஓன்பது இரவுகளைக் குறிக்கின்றது

31   கோயில் திருவிழாவில் பெரு விழா எது?
தேர்த் திருவிழா

32   சகலகலாவல்லி மாலையைப் பாடியவரின் பெயரைக் கூறுக.
குமரகுருபர சுவாமிகள்

33   நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாள்களில் எந்த சத்திக்கு விசேட பூசை நடைபெறும்.
துர்க்கை அம்மனுக்கு விசேட பூசை நடைபெறும்.

34   தேவாரம் பாடிய நாயன்மார் மூவரின் பெயரையும் கூறுக.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருநாவுக்கரசு நாயனார்
சுந்தரமூர்த்தி நாயனார்

35   சிவபெருமானை நினைந்து விசேடமாகச் சைவர்களால் கொண்டாடப்படும் இரண்டு தினங்கள் கூறுக.
சிவராத்திரி, ஆருத்திரா தரிசனம்

36   திருநீறு - இதற்கு இன்னுமொரு பெயர் கூறுக.
விபூதி

37   சிவபுராணத்தின் முதல் வரியைக் கூறுக.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

38   சிவபுராணத்தை அருளிய நாயனார் யார்?
மாணிக்கவாசக சுவாமிகள்

39   முருகக் கடவுளுக்குரிய விசேட தினம் ஒன்று கூறுக.
கந்தபுராணம்

40   மாசி மகத்தின் சிறப்பு யாது?
துர்க்கை அம்மனுக்கு விசேட தீர்த்தம் - பூசை செய்யப்படும் தினம்

41   சிவசின்னங்கள் எவை?
விபூதி – (திருநீறு) – , சந்தனம், குங்குமம், உருத்திராக்கம்.

42   இந்த உலகத்தையும் அதிலுள்ள உயிரனங்களையும் படைத்தவர் யார்?
கடவுள்

43   ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
பிள்ளையார்

44   கோயிலை எப்படி வலம் வர வேண்டும்.
இடப் பக்கம் இருந்து வலப்பக்கமாகச் சுற்றி வலம் வர வேண்டும்.

45   கோயிலில் எவற்றைப் பாட வேண்டும்?
தேவாரம், திருவாசகம், தோத்திரப் பாடல்கள் முதலியவற்றைப் பாடவேண்டும்.

46   நெற்றியில் பூசிய பின்பு எஞ்சிய திருநீற்றை என்ன செய்வீர்கள்?
உடம்பில் பூசவேண்டும். கீழே கொட்டாது பத்திரப்படுத்த வேண்டும்.

47   மாணவர்களிடம் இருக்க வேண்டிய நல்ல குணங்கள் 3 கூறுக.
கடவுளைத் தினமும் வழிபடல், எப்பொழுதும் உண்மை பேசுதல், ஒருவரின் உடலுக்கோ மனதிற்கோ துன்பம் விளைவிக்காதிருத்தல், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல், பெரியோரைக் கனம் பண்ணுதல், பெற்றோர் – ஆசிரியர்களின்; சொற்படி கேட்டல்,

மத்திய பிரிவு
(9 வயது முதல் 12 வயது வரை)
மாதிரிக்கேள்விகள்

1       உங்கள் சமயம் எது?
          சைவ சமயம்

2 சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்களை எப்படி அழைப்பீர்கள்?
சைவர்கள் என அழைப்போம்.


3 சைவ சமயத்தில் முழுமுதற் கடவுள் என்று கொள்ளப்டுபவர் யார்?
         சிவபெருமான்

4      சிவபெருமான் எப்படிப் பட்டவர் என்று சைவ சமயம் கூறுகிறது? 3 விடயம் கூறுக.
சிவபெருமான் என்றும் உள்ளவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிபவர், எல்லாம் வல்லவர், அன்பு வடிவானவர் (எல்லா உயிர்களையும் காப்பவர்) எனச் சைவ சமயம் கூறுகிறது.

5     சிவபெருமானை வேறு எந்தப் பெயர்களினால் அழைப்பீர்கள்? 5 கூறுக.
      அமலன், அரன், அந்திவண்ணன், அங்கணன், அங்கணாளன் அமலன் அமுதவேணி            ஆலமுண்டோன் ஆதிநாதன் ஆதிரையான் ஆதிசிவன் இடபக்கொடியோன் ஈசன் ஈசுவரன் உத்தரன் ஐந்துமுகன் முக்கண்ணன் கங்கைவேணியன் கங்காதரன்

6     சிவபெருமான் தலையை அலங்கரிப்து எவை?
       பிறைச் சந்திரன், கங்கை

7      சிவபெருமானின் கழுத்தை அலங்கரிப்பது எது?
        அரவம் - பாம்பு – நாகபாம்பு

8     சிவராத்திரி எந்த மாதத்தில் வருகிறது?
       மாசி மாதத்தில்

9    “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” - இதைக் கூறியவர் யார்? எங்கே கூறியுள்ளார்?            
 ஓளவையார். கொன்றைவேந்தனில் கூறியுள்ளார்.

10 தந்தை சொல் மிக்க ... இந்த பழமொழியைப் பூர்த்தி செய்க.
         தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

11    நாம் கடவுளை வணங்குவதற்குச் செல்லும் இடம் எது?
        கோயில்

12   கோயில் இல்லா ஊரில் ............ என்று தொடங்கும் ஒரு பழமொழி உண்டு. அதைச் சொல்லவும்.
       கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பது அந்தப் பழமொழி.

13     ஆலயம் தொழுவது ... என்று தொடங்கும் ஒரு பழமொழி உண்டு. அதைச் சொல்லவும்
          ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்பது அந்தப் பழமொழி.

14 திருநிற்றை எந்த வேளைகளில் தரிக்கலாம்?
        வீபூதியைக் காலையிலும, மாலையிலும் நிராடிய பின்பும், உணவருந்துவதற்கு முன்னும் நித்திரைக்கு முன்னும் பின்னும் தரித்தல் சிறந்தது.

15 ஒளவையார் அருளிய நீதி நூலகள் எவை?
          ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி

16 ஒரு ஊரை அழகு செய்வது எது?
         கோயில்

17 கோயில் வாசலை அலங்கரிப்பது எது?
         கோயில் கோபுரம்

18 கோயில் அடைந்ததும் எதைப் பார்த்து முதலில் கும்பிட வேண்டும்?
        கோயில் கோபுரத்தைப் பார்த்து முதலில் கும்பிட வேண்டும்.

19 மாணவர்களிடம் இருக்க வேண்டிய நல்ல குணங்கள் 4 கூறவும். 
கடவுளைத் தினமும் வழிபடல், எப்பொழுதும் உண்மை பேசுதல், ஒருவரின் உடலுக்கோ மனதிற்கோ துன்பம் விளைவிக்காதிருத்தல், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல், பெரியோரைக் கனம் பண்ணுதல், பெற்றோர் – ஆசிரியர்களின் சொற்படி கேட்டல்.

20 பிள்ளையாரை எப்படிக் கும்பிட வேண்டும்?
கைவிரல்களை மடக்கி நெற்றியிலே மூன்றுமுறை குட்டித் தோப்புக்கரணம் போட்டுக் கும்பிடவேண்டும்.

21 சிவபருமானின் இடப்பக்கத்தில் இருக்கும் தெய்வத்தின் பெயரைக் கூறுக.
         உமாதேவியார்

22 பிள்ளையாருக்கு வேறு இரண்டு பெயர்களைக் கூறவும்
         கணபதி, விநாயகர், ஐங்கரன் ஆனைமுகன் ஏகதந்தன் கரிமுகன் ஆகிசன் மதகரி ஆகுவாகனன்

23 கயமுகாசுரனை வதம் செய்த கடவுளின் பெயரைக கூறவும்.
         விநாயகப் பெருமான்

24  படைத்தல் தொழிலைச் செய்யும் கடவுளின் பெயரைக் கூறவும். 
         பிரம்மா

25 பிரம்மாவிற்கு வேறு பெயர்கள் 2 கூறுக. 
நான்முகன், பங்கயன், மலரோன்

26 திருமாலுக்கு வேறு பெயர் 4 கூறுக. 
கோவிந்தன், வெங்கடேசுவரர் (வெங்கடேஸ்வரர்), முகுந்தன், முரளீதரன், மதுசூதனன், கடல்வண்ணன், மாதவன், உலகளந்தோன், நாராயணன், கேசவன், சிறீரங்கநாதன், உலகமுண்டோன்

27 முருகப் பெருமானின் கொடியில் உள்ள பறவை எது? 
சேவல்

28 முருகப் பெருமானுக்கு உகந்த விரத நாள்கள் எவை? 
கந்தசட்டி (கந்தசஷ்டி), திருக்கார்ததிகை விரத நாள்கள் ஆகும்.

29  முருகக் கடவுளுக்கு வேறு பெயர்கள் 5 கூறுக. 
ஆறுமுகன் சேந்தன் சரவணபவன் கார்திகேயன் சுப்பிரமணியன் மயில்வாகனன் கந்தன் செவ்வேள் வடிவேலன் கடம்பன் அயிலவன் மதங்கன் கலையறிபுலவன் வேலாயுதன்

30 அம்மை அப்பனை அதாவது சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றி வந்து மாம்பழத்தைப் பெற்றுக் கொண்ட கடவுள் யார்? 
பிள்ளையார்

31 திருஞானசம்பந்தமூர்ததி நாயனாருக்கு ஞானப்பால் ஊட்டிய தெய்வத்தின் பெயரைக் கூறுக. 
உ மை அம்மை

32  திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பிறந்த ஊர் எது? 
தமிழ் நாட்டில் உள்ள சீர்காழி

33 தேவாரம் பாடிய மூன்று நாயனார்களின் பெயர்களையும் கூறுக. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருநாவுக்கரசு நாயனார்
சுந்தரமூர்த்தி நாயனார்

34 திருநீறு எதில் இருந்து செய்யப்படுகிறது? 
பசுவின் சாணததிலிருந்து செய்யப்படுகிறது.

35 நவராத்திரி என்பது எதைக் குறிக்கின்றது? 
ஓன்பது இரவுகளைக் குறிக்கின்றது

36 நவராத்திரி காலத்தில் கடைசி மூன்று நாள்களில் எந்த சத்திக்கு விசேட பூசை நடைபெறும். 
சரசுவதி தேவிக்கு விசேட பூசை நடைபெறும்.

37 கோயிலில் நடைபெறும் இரு விழாக்களின் பெயர்களைக் கூறுக. 
தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா .....

38 சகலகலாவல்லி மாலையைப் பாடியவர் யார்? 
குமரகுருபர சுவாமிகள்

39 திருமுறைகளைத் தொகுத்துத் தந்தவர் யார்? 
நம்பியாண்டார் நம்பி

40 திருக்கேதீச்சரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்குப் பதிகம் பாடியருளிய நாயனார் யார்? 
சுந்தரமூர்த்தி நாயனார்

41 சிவபெருமானை நினைந்து விசேடமாகச் சைவர்களால் கொண்டாடப்படும் இரண்டு தினங்கள் கூறுக. 
சிவராத்திரி, ஆருத்திரா தரிசனம்.

42 சிவபுராணத்தின் முதல் வரியைக் கூறுக. 
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

43 சிவபுராணத்தை அருளிய நாயனார் யார்? அது எத்தனையாம் திருமுறை? சிவபுராணத்தை அருளியவர் மாணிக்கவாசக சுவாமிகள். இது 8ஆம் திருமுறை.

44 முருகக் கடவுளுக்குரிய விசேட தினம் 2 கூறுக. 
திருக்கார்த்திகை, தைப்பூசம், வைகாரி விசாகம்

45 முருகக் கடவுளின் கதையைக் கூறும் புராணம் எது? 
கந்தபுராணம்

46 கந்தபுராணத்தை அருளியவர் யார்? 
கச்சியப்ப முனிவர்

47 மாசி மகத்தின் சிறப்பு யாது? 
துர்க்கை அம்மனுக்கு விசேட தீர்த்தம் - பூசை செய்யப்படும் தினம்

48 உத்தராயணம் என்றால் என்ன பொருள்? 
சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் காலம் உத்தராயணம் என்று கூறப்படும்.

49 ஓதுவார் என்று சொல்லப்படுவர்கள் யார்? 
தேவாரங்களைப் பண் இசையுடன் கோயில்களில் இசைப்பவர்.

50 விரதத்தில் சிறந்த விரதம் எது?
புற உயிர்களைக் கொல்லாமையே சிறந்த விரதம் ஆகும்.

மேற் பிரிவு
(12 வயது முதல் 15 வயது வரை)
மாதிரிக்கேள்விகள்

1  சைவசமயம் என்பதின் பொருளைக் கூறுக. 
சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவர்களின் மதம் சைவசமயம் எனப்படும்.

2 ஆதிகாலத்தில் சைவர்கள் சிவபெருமானை எந்த வடிவத்தில் வழிபட்டார்கள்? 
சிவலிங்க வடிவத்தில் வழிபட்டார்கள்.

3 சைவசமய அறிவுப் போட்டியை நடத்துவதால் உங்களுக்கு ஏற்படும் 3 நன்மைகள் கூறுக. 
சமயஅறிவு, கடவுள் நம்பிக்கை, பாரம்பரிய வழிபாட்டு முறைகள் பற்றிய விளக்கம், சமயத்தை வளர்த்த பெரியோர்கள் பற்றிய விளக்கம் 

4  மும்மலங்கள் என்றால் என்ன? 
மும்மலங்கள் ஆணவம், கன்மம், மாயை எனப்படும்.

கிரியை என்றால் என்ன பொருள்? 
இறைவனை வழிபடும் செயல் முறைகளே கிரியை (பூசை) எனப்படும்.

6  சைவ சமயத்தவர் பல்வேறு மூர்த்திகளுக்குக் கோயில் அமைத்து வழிபடுகிறார்கள். இப்படி வழிபடும் மூர்த்திகள் பல இருந்தாலும் சைவர்களிடம் ஆழமாக வேரூன்றி இருக்கும தனித்துவம் மிக்க நெறி – கொள்கை என்ன? 
வழிபடும் மூர்த்திகள் பல இருந்த போதிலும் இவை அனைத்தும் சிவபரம் பொருளான ஒன்றே – அதாவது இறைவன் ஒருவனே என்ற சிவநெறிக் கொள்கை சைவர்களிடம் ஆழமாக வேரூன்றியிருக்கும் தனித்துவம் மிக்க கொள்கை ஆகும்.

7  சிவராத்திரி எதைக் குறிக்கிறது? 
சிவபெருமான் இலங்கோற்பவராகத் சோதி வடிவைச் சுருக்கிப் பின்பு சிவலிங்க வடிவமாகத் தோன்றிய தினத்தைச சிவராத்திரி குறிக்கும்.

8  சைவ சமயத்தில் சிவபெருமானை எப்படி வணங்குவார்கள்? 
உருவ வழிபாடு, அருவவழிபாடு, அருவுருவ வழிபாடு

9  திருக்கோணேச்சரம் கோயில் எங்கு உள்ளது? 
இலங்கையில் உள்ள திருகோணமலையில் காணப்படும் திருகோணமாமலையின் உச்சியிலே உள்ளது.

10  சைவர்களின் சமய நூல்கள் எவை? 
சைவசித்தாந்த நூல்கள், திருமுறை நூலகள்.

11  உலகில் எத்தனை கடவுள் உள்ளனர்? 
கடவுள் ஒருவரே.

12 உயிர்களுக்கு அழிவு உண்டா இல்லையா என்பதைப் பற்றிச் சைவ சித்தாந்தம் என்ன கூறுகிறது. 
உயிர்களுக்கு அழிவு இல்லை என்று சைவசித்தாந்தம் கூறுகிறது.

13  “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” - இதைக் கூறியவர் யார்? எங்கே கூறியுள்ளார்? 
இதைக் கூறியவர் ஒளவையார். கொன்றைவேந்தன் நூலில் கூறியுள்ளார்.

14  கோயில் இல்லாத ஊரில் ........... என்று தொடங்கும் ஒரு பழமொழி உண்டு. அதைச் சொல்லவும் 
கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்பது அந்தப் பழமொழி.

15 கோபுரத்திற்கு வேறு பெயர் தெரியுமா? 
கோபுரத்தைத் தூலலிங்கம் என்றும் கூறுவர்.

16  கோயில்களின் கோபுரங்கள் ஏன் உயரமாக அமைக்கப்பெற்றுள்ளன? உயரமான கோபுரங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவை இறைவனின் முழுமுதற்றன்மையை உணரவைத்து அவன்மேல் பத்தி செலுத்த வேண்டுமென்ற எண்ணத்தை எங்கள் மனதிலே உருவாக்குகின்றது.

17  ஆலயம் தொழுவது .......... என்று தொடங்கும் ஒரு பழமொழி உண்டு. அதைச் சொல்லவும். 
ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்பது அந்தப் பழமொழி

18  கொடிமரம் எதனைக் குறிக்கும்? 
கொடிமரம் சிவத்தைக் குறிக்கும்.

19  கொடிமரத்திலே காணப்படும கொடிச் சீலையும் தருப்பைப் கயிறும் எவற்றைக் குறிப்பிடுகின்றன? 
கொடிமரத்திலே காணப்படும் கொடிச் சீலை ஆன்மாவையும் தருப்பைக் கயிறு பாசத்தையும் குறிப்பிடுகின்;றன.

20  திருமாலின் ஐம்படை எவை? 
வில், வாள், தடி, சங்கு, சக்கரம்

21  பிரணவ மந்திரத்தின் பொருள் கூறமுடியாது தடுமாறிய பிரமனை முருகப் பெருமான் என்ன செய்தார்? 
தலை கலங்கும்படி குட்டினார். பின்பு பிரமனைச் சிறையில் அடைத்தார்.

22  முருகக் கடவுள் எவ்வாறு தோன்றினார்? 
சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து புறப்பட்ட 6 தீப்பொறிகளும் சரவணப்பொய்கையை அடைந்ததும் ஆறு திருக்குமாரர்களாக உருவெடுத்தன. ஆறு முகங்களும் பன்னிரு தோள்களும் கொண்ட அழகிய தோற்றத்துடன் முருகப்பெருமான் தோன்றினார்.

23  கந்தசட்டி (கந்தசஷ்டி) எந்த மாதத்தில் வருகிறது? 
ஐப்பசி மாதம் பூர்வபக்கம் பிரதமை முதல் சட்டி (சஷ்டி) வரை ஆறு நாள்கள் சட்டி (சஷ்டி) விரதம் கொண்டாடப்படும்.

24  முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகள் எவை? 
பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்திணிகை.

25  இலங்கையிலுள்ள மிகப் பழமையான தலமாகிய கதிர்காமத்தில் கோயில் கொண்ட முருகப் பெருமானுக்குத் திருப்புகழ் பாடியவர் யார்? அருணகிரிநாதர்.

26   “வேயுறு தோளி பங்கன்” என்று ஆரம்பிக்கும் தேவாரத்தைக் கொண்ட பதிகத்தின் பெயர் என்ன? 
இதனைப் பாடியவர் யார்? பதிகத்தின் பெயர் கோளறு பதிகம். இதனைப் பாடியவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.

27  1ஆம், 2ஆம், 3ஆம் திருமுறைகளைப் பாடியருளிய நாயனாரின் பெயரைக் கூறுக. 
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

28  கோயிலில் மந்திரங்கள் சொல்லி, தேவாரம் ஓதி, மலர்கள் தூவி, தீபம் காட்டி வழிபடும் முறை எப்படி அழைக்கப்படும்? 
கிரியை வழிபாடு

29  கோயிலில் காட்டப்படும் தீபங்கள் 3 கூறுக. 
ஒற்றைத் தீபம், அடுக்குத் தீபம், கும்ப தீபம், பஞ்சாராத்தி தீபம்

30  அப்பர் பெருமான் - திருநாவுக்கரசு நாயனார் - சூலை நோயால் வருந்திய பொழுது அவரின் தமக்கையாராகிய திலகவதியார் எப்படி அந்த நோயை மாற்றினார்? 
அப்பர் பெருமானுக்கு முதலில் திருநீறு பூசியபின்னர் திருவதிகைக் கோயிலுக்குக் கூட்டிச் சென்றார். அங்கே அப்பர் “கூற்றாயினவாறு விலக்ககலீர்...” என்ற பதிகத்தைப் பாடிமுடித்ததுடன் நோயும் மாறிவிட்டது.

31  சைவசித்தாந்தம் என்பதன் பொருளைக் கூறுக. 
சைவசமய உண்மைத் தத்துவங்கள் - சைவசமயத்தில் ஞானிகள் சிந்தித்துக் கண்டறிந்த ஆன்மீகம் சம்பந்தப்பட்ட உண்மைக் கருத்துக்கள்

32  சிவபெருமான் எண்குணத்தான் என்று ஏன் அழைக்கிறார்கள்?
சிவபெருமான் எட்டுவித குணங்களைக் கொண்டவர். ஆதலால் அவர் எண்குணர்தான் என அழைக்கப்படுகிறார்.

33   இறைவன் ஐந்தொழில்களை எவ்வண்ணம் நிதழ்த்துகிறார்? 
இறைவன் ஐந்தொழில்களையும் பிரம்மா, விட்டுணு(விஷ்ணு), உருத்திரன், மகேசுவரன்(மகேஷ்வரன்) சதாசிவன் ஆகிய திருமேனிகளைத் தாங்கி நிகழ்த்துகிறார்.

34  பஞ்சாங்க வணக்கம் (நமஸ்காரம்) என்றால் என்ன? அது யாருக்குரியது? 
உடம்பின் ஐந்து உறுப்புகள் நிலத்தில் அழுந்தும்படி விழுந்து வணங்கும் முறை. இது ஆண்களுக்குரியது.

35  நால் முனிவர் என்னும் தொகைச் சொல் எவர்களைக் குறிக்கும்?
சனகர், சனந்தனர், சனாதரர்,சனற்குமாரர் என்னும் நான்கு முனிவர்களைக் குறிக்கும்.

36  மகளிருக்கு உரிய நாற்குணங்கள் என்று சொல்லப்பட்டவை எவை?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

37  இரு வகை வினைகள் யாவை? 
நல்வினை, தீவினை

38  நாற்பயன் என்னும் தொகைச் சொல் எவற்றைக் குறிக்கும்? 
அறம், பொருள், இன்பம், வீடு

39  ஐந்தொழில்களையும் இயற்றும் சிவ வடிவம் எது? 
நடராசவடிவம். (நடராஜவடிவம்)

40  படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கு வேறு பெயர்கள் 3 கூறுக. 
நான்முகன், பங்கயன், மலரோன்

41  நான்மறைகள் யாவை?
இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்

42 துர்க்கை அம்மனுக்கு வேறு பெயர்கள் 4 கூறுக. 
மலர்மகள், பராசத்தி, கௌரி, சிம்மவாகினி

43  நவராத்திரி காலத்தில் நடு மூன்று நாள்களில் எந்த சத்திக்கு விசேட பூசை நடைபெறும்? 
இலக்குமி (லக்ஷ்மி) தேவிக்கு

44  துர்க்கை அம்மனைத் தொழுவதால் என்ன நன்மை பெறலாம்?
வீரம், தைரியம், வெற்றி ஆகியவற்றைப் பெறலாம்.

45  நவராத்திரியின் சிறப்பு என்ன? 
துர்க்கை, இலக்குமி, சரசுவதி, ஆகிய மூன்று சத்திகளையும் வழிபடுவதே நவராத்திரியின் சிறப்பு ஆகும்.

46  தீபாவளி என்பதன் கருத்து யாது? 
தீபங்களை – விளக்குகளை வரிசையாக வைத்து வழிபடுதல்

47 எட்டுதிக்குப் பாலகர் யாவர்? 
இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.

48  ஓங்காரம் - இதற்கு இன்னொரு சொல் கூறுக. 
பிரணவம்.

49

அதிமேற்பிரிவு
(15 வயதிற்கு மேல்)
மாதிரிக்கேள்விகள்

1 சிவபெருமான் முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்களை எப்படி அழைப்பீர்கள்? 
சைவர்கள் என அழைப்போம்

2 வணக்கத்திற்கு உரியவர்கள் என்று சைவசமயம் எவர்களைக் குறிக்கின்றது. 
கடவுள், தாய், தந்தை, குரு, பெரியோர், எமக்கு அன்பைச் செலுத்தும் அனைவரும் வணக்கத்திற்கு உரியவர்கள்.

3 சைவசமய அறிவுப் போட்டியை இந்தக் கோயில் நடத்துவதன் முக்கிய குறிக்கோள் எது என்று நினைக்கிறீர்கள்? 
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வருங்காலத் தலைமுறையினர் அதாவது எங்களைப் போன்ற குழந்தைகளிடம் கடவுள் நம்பிக்கையை வளர்ப்பதுடன் சைவ அறிவையும் சமயத்தையும் வளர்க்க ஊக்குவிப்பதே அதன் குறிக்கோள்.

4  சைவசமய அறிவுப் போட்டியை நடத்துவதால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் எவை? 
சமய அறிவு, கடவுள் நம்பிக்கை, பாரம்பரிய வழிபாட்டு முறைகள் பற்றிய விளக்கம், சமயத்தை வளர்த்த பெரியோர்கள் பற்றிய விளக்கம் ஆகியவை நாம் பெறக்கூடிய நன்மைகள் ஆகும்.

5  எமது சமயத்தின் நோக்கம் எது? 
ஆன்மாக்கள் மும்மலங்களை நீக்கிக் கடவுளை அடைய வழிகாட்டுதல் ஆகும்.

6   பிற உயிர்களுக்கு என்ன செய்தால் எமக்குக் கூடிய பேரானந்தம் கிடைக்கும் என்று சைவசமயம் வலியுறுத்துகின்றது? 
எல்லா உயிர்கள் மேலும் பிரதிபலன் கருதாத தூய அன்பைச் செலுத்தவேண்டும் என்று சைவசமயம் வலியுறுத்துகின்றது.

7  ஆதியும் அந்தமும் இல்லாத மெய்ப் பொருளைச் சைவ சமயம் எப்படிக் கூறுகிறது? 
இறைவன் - கடவுள்.

8  சிவபெருமானின் அருட்சிவ வடிவங்கள் எத்தனை? 
சிவபெருமானின் வடிவங்கள் 25 அருட்சிவ மூர்த்தங்களெனக் கொள்ளப்படுகின்றன.

9  சிவபெருமானின் அருட்சிவ வடிவங்கள் ஒவ்வொன்றும் எத்தகையது?
சிவபெருமானின் அருட்சிவ வடிவங்கள் ஒவ்வொன்றும் சிவசத்தி வடிவமாகும்.

10  இறைவன் எதற்காக உருவநிலையில் வைத்து வணங்கப்படுகிறான்? 
இறைவனை மனதில் நினைத்தற்காகவும் மனம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவம் தாங்குவதால் இறைவனை உருவ நிலையில் வைத்து வணங்குகின்றோம்.

11  திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் - இறைவியரின் பெயர்களைக் கூறுக. 
கேதீச்சரநாதர் – கௌரி அம்மை.

12 திருக்கைலாய மலையில் நசிக்கப்பட்ட இராவணன் என்ன இசை பாடி சிவபெருமானிடம் இருந்து அருள் பெற்றான்? 
சாமகானம்

13  உயிர்களுக்கு அழிவு உண்டா இல்லையா என்பதைப் பற்றிச் சைவ சித்தாந்தம் என்ன கூறுகிறது? 
உயிர்களுக்கு அழிவு இல்லை என்று சைவசித்தாந்தம் கூறுகிறது.


14  திருநல்லூர்ப் பெருமணம் என்னும் ஊரிலே திருஞானசம்பந்தருக்கு என்ன அற்புதம் நடந்தது? 
திருஞானசம்பந்தர் திருமணமாகித் தம்பதிகளாய் உறவினருடன் திருநல்லூர்ப் பெருமணம் எ;னனும் கோயிலில் வழிபட்டு “காதலாகிக் கசிந்து.....” என்னும் பதிகத்தைப் பாடவும் இறைவன் அருளால் சோதியாக ஒரு பேரொளி தோன்றியது. “எல்லோரும் பேரொளியிற் கலந்து கொள்ளுங்கள்” என்று ஒரு அசரீரி கேட்டது. திருஞானசம்பந்தருடன் எல்லோரும் சோதிக்குளே சென்று சோதியிற் கலந்தனர்.

15 கோயில் அமைப்பு எதை விளக்குகின்றது? 
மனிதன் ஒருவன் நிலத்திலே நேராகப் படுத்திருக்கின்ற அமைப்பினை எமது உடலை விளக்குகின்றது.

16  கோயிலின் பிரதான பகுதியான கருப்பக்கிருகம் மனிதனின் எந்தப் பகுதியைக் குறிக்கின்றது? 
மனிதனின் சிரசினைக் குறிக்கின்றது.

17  இராச கோபுரம் மனிதனின் எந்தப் பகுதியைக் குறிக்கின்றது? 
இராச கோபுரம் மனிதனின் பாதங்களைக் குறிக்கின்றது.

18  குண்டலினி சத்தி என்பது யாது? 
எம்மிடையே மறைந்திருக்கும் தெய்வீகச் சத்தியே குண்டலினி சத்தி எனப்படும்.

19  மனிதனின் முள்ளந் தண்டு எலும்பின் அடிப்பாகம் எந்தச் சத்தியின் இருப்பிடம்? 
குண்டலினி சத்தியின் இருப்பிடமாகும்.

20  கொடிமரத்தின் அடிப்பகுதி எதைக் குறிக்கிறது? 
கொடிமரத்தின் அடிப்பகுதி அருவ நிலையில் இருக்கும் விநாயகரைக் குறிக்கும்.

21  கொடிமரத்திலே காணப்படும் கொடிச் சீலையும் தருப்பைக் கயிறும் எவற்றைக் குறிப்பிடுகின்றன? 
கோடிமரத்திலே காணப்படும் கொடிச்சீலை ஆன்மாவையும் தருப்பைக் கயிறு பாசத்தையும் குறிப்பிடுகின்றன.

22  கோவில் உள்ளே நீங்கள் பார்க்கும் நான்கு முக்கிய பொருள்கள் கூறுக.
தெய்வ விக்கிரகங்கள், கொடிமரம், நந்தி, விளக்குகள், மணி, சிற்பங்கள், பலிபீடம்

23  கோயிலை அடைந்ததும் எதைப் பார்த்து முதலில் கும்பிட வேண்டும்? 
கோயில் கோபுரத்தைப் பார்த்து முதலில் கும்பிட வேண்டும்.

24  கோயிலுக்கு ஒருவர் ஏன் செல்ல வேண்டும்? 
மன அடக்கத்தை ஏற்படுத்தவும், வழிபாடு செய்யவும், நற்பழக்கங்களை வளர்ப்பதற்கும் கோயில் செல்வது நன்று.

25  சைவசமயக் கதைகளைக் கொண்ட புராணங்கள் எமக்கு எவற்றை உணர்த்துகின்றன? 
அதருமத்தை நீக்கித் தருமத்தை நிலைநாட்டும் பொருட்டு இறைவன் திருவிளையாடல்களையும், உலக நீதிசார்ந்த அறிவுரைகளையும் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பண்புகளையும் எமக்கு உணர்த்துகின்றன.

26  சமயக் கல்வி ஒருவருக்கு அவசியமா? ஏன்? 
ஆம். சிறந்த வாழ்வு வாழ வழிகாட்டுவது சமயக் கல்வியாகும்.

27  சமயக் கல்வியினால் என்ன நன்மைகள் ஏள்படும்? 5 கூறுக. 
மனதைத் தூய்மைப் படுத்தும், கடவுள் நம்பிக்கை வளரும், மன அடக்கம் ஏற்படும். ஒருவனை நல்லவனாக்கும். நல்ல பண்புகளை வளர்க்கும். களவெடுத்தல் பொய் பேசுதல் புலால் உண்ணல் உயிர்களைக் கொல்லுதல் முதலிய தீய செயல்களை வெறுக்கச் செய்யும். புற உயிர்களை நேசிக்கும் சிறந்த குணத்தை வளர்க்கும். தியாக சிந்தை உண்டாகும். நல்ல வாழ்வு வாழத் துணை செய்யும்.


28  கல்வி கற்பதோடு சமயக் கல்வி கற்பதனால் என்ன நன்மை ஏற்படும்?
கல்வி ஒருவரின் அறிவை வளர்க்கிறது. சமயக் கல்வி ஒருவருக்கு கடவுள் நம்பிக்கையை வளர்ப்பதுடன் வாழ்க்கைப் பயனை அடைய – கடவுளை அடையத் - துணை செய்கிறது. கடவுளிடத்தில் அன்பை வளர்க்கிறது. இதன் பயனாகப் பிற உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் மனப்பான்மையை வளர்க்கிறது.

29 “வேழ முகத்து விநாயகனைத்தொழ .... “என்று ஆரம்பிக்கும் முதுமொழியைப் பூர்த்தி செய்யவும். 
வேழ முகத்து விநாயகனைத்தொழ வாழ்வு மிகுத்து வரும்.

30  பஞ்சபுராணத்தில் பாடப்படவேண்டிய பாடல்கள் எந்த ஒழுங்குமுறையிற் பாடப்படவேண்டும்? 
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்ல்லாண்டு, திருப்புராணம் என்ற ஒழுங்கு முறையில் பாடப்படவேண்டும்.

31  சைவசித்தாந்தம் உமாதேவியாரை எப்படிக் கொள்கிறது? 
சிவனின் மாபெரும் சத்தியாகக் கொள்கிறது.

32  சிவபெருமான் வலப்பாகமாகவும் உமாதேவியார் இடப்பாகமாகவும் விளங்கும் சிவசத்தி வடிவத்தை எவ்வாறு அழைப்பீர்கள்? 
அருத்தநாரீசுவரன், உமையொருபாகன், ஐக்கியநாதன்.

33  சிவபெருமானிடம் இறவாத வரம் பெற்ற கயமுகாசுரனை விநாயகப் பெருமான் கடைசியில் என்ன செய்தார்? 
கயமுகாசுரனின் ஆணவத்தை ஒழித்து பெருச்சாளி உருவமாக மாற்றித் தனது வாகனமாக்கினார்.

34  திருமால் சிவபெருமானின் ஓர் சத்தி என்று கூறுவது சரியா? 
சரி

35  திருமாலின் ஐம்படை எவை? 
வில், வாள், தடி, சங்கு, சக்கரம்

36  முருகக் கடவுள் எவ்வாறு தோன்றினார்? 
சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து புறப்பட்ட 6 தீப்பொறிகளும் சரவணப்பொய்கையை அடைந்ததும் ஆறு திருக்குமாரர்களாக உருவெடுத்தன. ஆறு முகங்களும் பன்னிரு தோள்களும் கொண்ட அழகிய தோற்றத்துடன் முருகப்பெருமான் தோன்றினார்.

37  முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகள் எவை? 
பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்திணிகை.

38  அப்பர் பெருமான் - திருநாவுக்கரசு நாயனார் - சூலை நோயால் வருந்திய பொழுது அவரின் தமக்கையாராகிய திலகவதியார் எப்படி அந்த நோயை மாற்றினார்? 
அப்பர் பெருமானுக்கு முதலில் திருநீறு பூசியபின்னர் திருவதிகைக் கோயிலுக்குக் கூட்டிச் சென்றார். அங்கே அப்பர் “கூற்றாயினவாறு விலக்ககலீர்...” என்ற பதிகத்தைப் பாடிமுடித்ததுடன் நோயும் மாறிவிட்டது.

39  சிவ சின்னங்கள் எவை? 
விபூதி – திருநீறு – சந்தனம் குங்குமம் உருத்திராட்சம்.

40  சைவசமயத்தில் எத்தனை கடவுள் - கடவுள்கள் - இருக்கிறார்கள். 
சைவசமயத்தின் கடவுள் சிவபெருமான் ஒருவரே ஆவர்.

41   சைவர்கள் கடவுள் பலரை வழிபடுகிறார்களே. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
உயிர்களுக்கு அருள் புரியும் வண்ணம் சிவபெருமான் பலவிதமான வடிவங்களை - மூர்த்தங்களை – எடுக்கிறார். அவற்றை நாம் பல்வேறு உருவங்களாக வழிபடுகிறோம்.

42  சிவம் என்பதன் பொருள் என்ன? 
செம்மை – மங்கலம் என்பது அதன் பொருள் ஆகும்.


43  சிவபெருமானின் மூன்று விதமான விக்கிரக வடிவங்களைக் கோயில்களில் காணலாம். அவை யாவை? 
இலிங்கம், நடராசர் (நடராஐர்) தட்சணாமூர்த்தி

44  இறைவன் ஐந்தொழில்களை எவ்வண்ணம் நிகழ்த்துகிறார்? 
இறைவன் ஐந்தொழில்களையும் பிரம்மா, விட்டுணு (விஷ்ணு), உருத்திரன், மகேசுவரன் (மகேஷ்வரன்) சதாசிவன் ஆகிய திருமேணிகளைத் தாங்கி நிகழ்த்துகிறார்.

45  இறைவன் ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு எத்தனை விதமான திருமேனிகளை எடுத்து அருள் புரிகிறார்?
அவைகளைக் கூறவும்? 
இறைவன் ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு மூன்று விதமான திருமேனிகளை எடுத்து அருள் புரிகிறார். அவை அருவத் திருமேனி, உருவத் திருமேனி, அருவுருவத் திருமேனி ஆகும்

46  அருவத் திருமேனி என்றால் என்ன? 
இது சிவ அடியார்களுக்குத் தனது உருவம் தெரியாவண்ணம் அருள் புரிய அவன் எடுக்கும் அருட்சத்தி வடிவம்.

47  உருவத் திருமேனி என்றால் என்ன? 
இது சிவ அடியார்களுக்கு தனது உருவம் தெரியும் வண்ணம் அருள் புரிய அவன் எடுக்கும் அருட்சத்தி வடிவம்.

48  நாற்பாதம் என்னும் தொகைச் சொல் எவற்றைக் குறிக்கும்? 
சரியை, கிரியை, யோகம், ஞானம்.

49  ஐம்பெரும் பாதகம் என்னும் தொகைச் சொல் எவற்றைக் குறிக்கும்?
கோலை, களவு, கள், பொய், குருநிந்தை

50 பஞ்சகவ்வியம் என்னும் தொகைச் சொல் எவற்றைக் குறிக்கும்? 
கோசலம், கோமயம், பால், தயிர், நெய்

51   ஆறு வகைச் சமயம் கூறுக. 
சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணாபத்தியம், கௌமாரம்

52 எட்டுதிக்குப் பாலகர் யாவர்? 
இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.

53 நவராத்திரியின் சிறப்பு என்ன? 
துர்க்கை அம்மன், இலக்குமி(லக்ஷ்மி)(இலச்சுமி) தேவி சரசுவதி(சரஸ்வதி)தேவி ஆகிய மூன்று சத்திகளையும் வழிபடுவதே நவராத்திரியின் சிறப்பு ஆகும்.

54 மாசி மகத்தின் சிறப்பு என்ன? 
அம்மனுக்குரிய விசேட நாள் மாசி மகம். அன்று அம்மனுக்கு தீர்த்தம், விசேட பூசை நடைபெறும்.

55   பங்குனி உத்தரத்தின் விசேடம் என்ன? 
பங்குனி உத்தர நாளன்று கோயில்களில் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் அபிடேகம் (அபிஷேகம்) விசேட பூசை செய்யப்படும்.


56 ஏடு தொடக்கம் வைபவத்தைப் பற்றி உமக்குத் தெரிந்தவற்றைக் கூறுக. 
விசயதசமி (விஜயதசமி) நாளன்று கோயிலில் அல்லது வீட்டில் கோயில் குருக்களைக் கொண்டோ அல்லது கல்வியிற் சிறந்த பெரியவர்களைக் கொண்டோ சிறுபிள்ளைகளுக்கு ஏடு தொடக்குவார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களைக் கொண்டும் சிலர் ஏடு தொடக்குவார்கள். கல்விக்கு அதிபதியான சரசுவதி தேவியை வணங்கியபின் தமிழ் எழுத்துகள் கொண்ட ஏட்டை அல்லது அரிவரிப் புத்தகத்தை எடுத்து ஏடு தொடக்கப்பட வேண்டியவரின் சுட்டு விரலால் “அ” விலிருந்து எல்லா எழுத்துகளையும் தொட்டு அவற்றை உச்சரித்துச் சொல்ல வைப்பார்கள். மஞ்சள் பூசப்பட்ட அரிசியில் அந்த எழுத்துகளைச் சுட்டுவிரலால் எழுத வைப்பார்கள். 1, 2, ... என்ற எண்களையும் ஆங்கில எழுத்துகளையும் சொல்லச் செய்வார்கள்.

57 நவராத்திரி கொண்டாடப்படுவது ஏன்? 
வீரத்தை வேண்டித் துர்க்கை அம்மனையும், செல்வத்தை வேண்டி இலக்குமி தேவியையும், கல்வியை வேண்டிச் சரசுவதி தேவியையும் தொழுது கொண்டாடப்படும் விழா நவராத்திரி எனப்படும்.

58 சரசுவதி (சரஸ்வதி) அந்தாதி பாடிய புலவர் பெயர் கூறுக. 
கவிச்சக்கரவர்த்தி கம்பர்

59 தீபாவளி எதற்காகக் கொண்டாடப்படுகிறது? 
கிருட்ண (கிருஸ்ண) பரமாத்மாவுடன் போர்புரிந்து இறக்கும் வேளையில் நரகாசுரன் பகவானிடம் ஒரு வரம் கேட்டான். தனது ஆணவம் - அகந்தை ஒழிந்த அந்த நல்ல நாளை உலகில் எல்லோரும் கொண்டான அருள்புரிய வேண்டும் என்று வரம் கேட்டான். பகவானும் அதற்கு அருள் புரிந்தார். அந்த நாள் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது.

60 விரதத்தில் சிறந்த விரதம் எது? 
பிற உயிர்களைக் கொல்லாமையே சிறந்த விரதம் ஆகும்.

61 கூட்டுப்பிரார்த்தனையின் 3 நன்மைகள் கூறுக. 
மன அமைதி, மன ஒருமைப்பாடு, கடவுள் சிந்தனை, கடவுள் நம்பிக்கை ஆகியவை வளருவும் மாணவர்களிடையே ஒழுக்கம், ஒற்றுமை வளரவும் வழி செய்கிறது.

62 சமய தீட்சை என்றால் என்ன? 
சைவசமயத்தவர்கள் தகுந்த குருவிடம் மந்திரங்களை முறைப்படி உச்சரிக்கவும் விபூதி தரித்து அநுட்டானங்களை ஆரம்பிப்பதற்கும் செய்யப்படும் ஒரு புனிதமான சடங்கு

63 எந்த அரசனின் வேண்டுகோளின் படி நம்பியாண்டான் நம்பி திருமுறைகளைத் தொகுத்தார்? 
இராசராசசோழ (இராஜராஜசோழ) அரசனின் வேண்டுகோளின் படி திருமுறைகளைத் தொகுத்தார்.

64 கந்தசட்டி (கந்தசஷ்டி) 6ஆம் நாளில் என்ன விசேட திருவிழா கொண்டாடப்படுகிறது? 
சூரசங்காரம்

65 சூரசங்காரத்தின் போது என்ன நடந்தது? 
முருகக் கடவுளால் சூரபன்மனின் ஆணவம் அழிக்கப் பட்டதும் சிவனிடமிருந்து அழியா வரம்பெற்ற சூரபன்மன் சேவலும் மயிலுமாகத் தோன்றி முருகப் பெருமானிடம் அடைக்கலம் பெற்றான். முருகப் பெருமான் சேவலைக் கொடியாகவும் மயிலை வாகனமாகவும் ஏற்று அருள் புரிந்தார்.

66 நாம் எப்பொழுது நிறைகுடம் வைக்கிறோம்?
3 நிகழ்சிகள் கூறுக. திருமணம், புதுமனை புகல், நவராத்திரி, கலை விழாக்கள், மங்களகரமான நிகழ்ச்சிகள்

67 திருநாவுக்கரச நாயனார் சமண சமயத்தில் சேர்ந்து என்ன பெயர் பெற்றார்?
தருமசேனர் என்ற பெயர் பெற்றார்.

68 சரியைத் தொண்டுகள் என்றால் என்ன? 3 கூறுக. 
ஆலயத்தில் செய்யப்படும் சேவைகள், சரியைத் தொண்டுகள், கூட்டுதல், கழுவுதல், புந்தோட்டம அமைத்தல், பூப்பறித்தல், பூமாலை கட்டுதல், தீபங்கள் வாகனங்கள் கழுவுதல்

69 பெரியபுராணத்தைப் பாடி அருளியவர் யார்? 
சேக்கிழார் பெருமான்

70 பெரியபுராணம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது? 
63 நாயன்மார்களின் வரலாற்றை திருத்தொண்டர்களின் வரலாற்றை கூறுகிறது.

71   பெரியபுராணத்தில் இடம்பெற்ற பெண்சிவனடியார்கள் பெயர் 2 கூறுக. 
காரைக்கால் அம்மையார், திலகவதியார், மங்கையற்கரசியார்

72 சிவபெருமானிடத்தில் தனக்குப் பேய்வடிவு தரும்படி கேட்டுப் பெற்றுக் கொண்டவர் யார்? 
புனிதவதியார் – காரைக்கால் அம்மையார்

73 பாண்டியமன்னனுக்கு உண்டான நோய் என்ன? ஆதை நீக்கியருளியவர் யார்? எப்படி நீக்கினார்? 
வெப்புநோய்
திருஞானசம்பந்தர் நீக்கினார்
“மந்திரமாவது நீறு” என்று தொடங்கும் பதிகம் பாடி திருநீறு தடவி நீக்கினார்.


No comments: