தமிழ் சினிமா - சி.எஸ்.கே




தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்கள் தான் தற்போது கலக்கி வருகின்றனர். அந்த வகையில் சத்ய மூர்த்தி சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சி.எஸ்.கே.
பெரிய நடிகர்களை நம்பி எடுக்காமல் இளம் நடிகர்களை மட்டும் கையில் எடுத்து கொண்டு சூப்பர் த்ரில்லர் படத்தை கொடுத்துள்ளது இந்த படக்குழு.
கதை
வைரங்களை வியாபாரம் செய்யும் ஒரு காப்பரேட் கம்பெனியில் பணிபுரிபவர் நாயகி கார்த்திகா. சென்னை சூப்பர் கிங்ஸில் எப்படியாவது இடம் பிடித்து கிரிக்கெட் வீரராக வலம் வரவேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பவர் சார்லஸ். கார்த்திகாவிடம் காதலில் விழுந்த சார்லஸ், இலட்சியங்களை விட்டு தன் காதலை நிறைவேற்றத் துடிக்கிறார். காதலில் இருவரும் கலந்துவிட, மதம் தடையாக வந்து நிற்கிறது.
இன்னொரு பக்கம் தூத்துக்குடியில் கடத்தல் தொழிலை செய்து வரும் ஒரு தாதா. பல கோடி ரூபாய்க்கான ஒரு கடத்தல் பிசினஸ் நடக்கிறது. போலிஸுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதால், வைரங்களை கடத்திவர புதிதாக ஒருவனை வேலைக்கு சேர்க்கிறார்கள். தன் குடும்ப சூழலால் இந்த வேலை செய்ய ஒப்புக்கொள்கிறான் ஷஃபிக்.
கார்த்திகா பணிபுரியும் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் இரண்டு முக்கிய புள்ளிகள் தான் இந்த கடத்தலுக்கு முக்கியமானவர்கள் என்று தெரியவருகிறது. கம்பெனியில் குடைச்சல் அதிகமாகிக்கொண்டே போக, வைரம் எப்போது கைக்கு வரும் என்ற டென்ஷனோடு பதபதைக்கிறார்கள்.
ஷஃபிக்கை போலிஸ் துரத்திக்கொண்டு வர, திடீரென சந்திக்கும் கார்த்திகாவிடம் வைரங்களை கைமாற்றுகிறான். உள்ளே இருப்பது என்ன என்றே தெரியாமல், அந்த டப்பாவை வாங்கி பைக்குள் போடுகிறாள். வைரங்கள் கைக்கு வந்து சேராத கோபத்தில் தூத்துக்குடி தாதா ஆத்திரமடைய, ஷஃபிக் என்ன ஆனான்? கார்த்திகாவிடம் இருக்கும் வைரங்கள் யார் கைக்கு போய் சேர்கிறது? சார்லஸ்-கார்த்திகாவின் காதல் என்ன ஆனது? என பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான திரைக்கதையால் நமக்கு திரில்லிங்கை கொடுக்கிறது படத்தின் இரண்டாவது பகுதி.
க்ளாப்ஸ்
படத்தின் திரைக்கதை அடுத்த காட்சி என்ன என்று கேட்கத்தோன்றுகிறது. கதையில் வரும் அந்த மூன்று கதாபாத்திரங்களும் இளம் நடிகர்கள் என்றலும், மிக யதார்த்தமாக நடித்துள்ளனர்.
படத்தில் அவ்வபோது வரும் டுவிஸ்ட் வெகுவாக ஈர்க்கிறது. படத்தின் வசனங்கள் மிகவும் ஈர்க்கும் படி உள்ளது.
பல்ப்ஸ்
கடந்த சில வாரங்களாக இது போன்ற கடத்தல் சார்ந்த பல கதைகளை பார்த்து விட்டோம், இதனால் இப்படம் முந்தைய சில படங்களை நியாபகப்படுத்துகிறது.
மொத்தத்தில் கிரிக்கெட்டில் மட்டுமில்லை சினிமாவிலும் CSK கவனிக்க வைக்கின்றது.
ரேட்டிங்-3/5
நன்றி cineulagam

No comments: