யாழ் குடிநீர் மாசு அவலம் - சர்வதேச ஆய்வு அறிக்கை இம்மாத இறுதியில்....

.
யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் மாசு தொடர்பான  ஆய்வறிக்கை ஒன்று இம்மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது. தூய நீர்பெற்றோலியப் பொருட்கள்சூழல் மாசடைதல்நிலத்தடி நீர் மற்றும்  உடல்நலம்  போன்ற துறைகளில் நீண்ட கால அனுபவம் உள்ள அவுஸ்திரேலிய மற்றும் வடஅமெரிக்க நிபுணர் குழு ஒன்று விரைவில் தமது விஞ்ஞான ரீதியான அறிக்கையை வெளியிடுகிறது.

விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் அடிப்படையில்சர்வதேச தரம் மிக்க இரசாயனவியல் பகுப்பாய்வு நிலையங்களில் ( இலங்கை மற்றும் சிங்கப்பூர் ) நடைபெற்ற சோதனை முடிவுகளை இந்த அறிக்கை உள்ளடக்கியதாக இருக்கும்.
மேலதிகமாககுடிநீர் மாசு தொடர்பில் பல தரப்பினர் பல்வேறு முரண்பட்டதகவல்களை வழங்கி மக்களைக் குழப்பமாக்கி  வரும் இந்த நிலையில் இந்த சர்வதேச நிபுணர் குழு யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக நீர்த்தரம் குறித்த தரவுகளைத் திரட்டிய அனைவரையும் அணுகி அவர்கள் மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு அறிக்கைகளைத் தம்மிடம் வழங்குமாறு கேட்டுள்ளனர். இந்த அறிக்கைகளை ஒன்றுதிரட்டி வெளியிடும் தேவையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


யாழ் குடிநீர் மாசு அவலம்ஒருமுகப்பட்ட விஞ்ஞான ரீதியாக அணுகப்படாமல் உணர்வுபூர்வமானதும் அரசியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளாலுமான குறுகிய வட்டத்தினுள் சிக்கி இன்னும் தெளிவு காணப்படாமல் இருப்பது கவலைக்குரியது.


இந்த சர்வதேச ஆய்வு அறிக்கை உள்ளூர்க் குழப்பங்களை தவிர்த்து அனைவரையும் ஒரு தீர்வை நோக்கிஒற்றுமையாக செயற்பட வழிவகுக்கும் என புத்திஜீவிகள் எதிர்பார்க்கின்றனர்.

No comments: